அக்னிப்புரட்சி இன்றைய (11.10.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (11.10.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (11.10.2020) முக்கிய செய்திகள்.

* உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் 3,74,50,148 பேர் பாதிப்பு.

உலகில் கொரோனா தொற்றால் இதுவரை  10,77,218 பேர் மரணம்.

உலகில் கொரோனா தொற்றில் இருந்து 2,80,97,823 பேர் மீண்டனர்.

உலகில் கொரோனா பாதிப்புடன் 82,75,107 பேர் சிகிச்சை பெற்று.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,015 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,56,385 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,250   பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,82,014 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 65 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 10,252 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,005 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 5,02,038 பேர் குணமடைந்துள்ளனர்.

* வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த மண்டலத்தை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவை துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

* காங்கிரஸ் செய்திதொடர்பாளர் குஷ்பு, நாளை பாஜகவில் இணைகிறார்
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில், குஷ்பு இணைகிறார்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைவதற்காக குஷ்பு, டெல்லி புறப்படுகிறார்

* ஐபிஎல் : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

* அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறது பாஜக" பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தகவல்

* சென்னையில் 10- வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.

* தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி இல்லை; அதிமுக தலைமையில்தான் கூட்டணி உள்ளது.
2021ல் தமிழகத்தில் ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியாக பாஜக இருக்கும்:  பொன்.ராதாகிருஷ்ணன்.

* புதுச்சேரியில் அக்.15 முதல் திரையரங்குகள் திறக்கப்படுவதால் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.120 டிக்கெட் ரூ.100-ஆகவும், ரூ.100 டிக்கெட் ரூ.75-ஆகவும் குறைக்கப்பட்டு உள்ளது.

பார்க்கிங் கட்டணம் கார்களுக்கு ரூ.50 லிருந்து ரூ.30 ஆகவும், பைக்குகளுக்கு ரூ.20லிருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது.

* திமுகவில் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை தயாரிக்க 8 பேர் கொண்ட குழு அமைத்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், பேராசிரியர் ராமசாமி ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

* தெற்குத்திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர் அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது- மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்.

ஊராட்சி மன்றத் தலைவர் தரையில் அமர்ந்திருக்கும் அந்த படம், நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட தலைகுனிவு,

சமத்துவம், ஜனநாயகத்திற்கு எதிரான இழிசெயலில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்- மு.க.ஸ்டாலின்.

* பீகார் தேர்தலுக்கான காங். நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

30 பேரை மட்டும் அரசியல் கட்சிகள் நட்சத்திரப் பேச்சாளர்களாக அறிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி வெளியிட்ட பட்டியலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பாஜகவில் இருந்து காங்கிரஸில் சேர்ந்த நடிகர் சத்ருகன் சின்ஹா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், நடிகர் ராஜ்பாபர் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

* இந்திய விமானப்படைத்தளத்தில் சீறிப்பாய்ந்த போர் விமானங்கள்: சீனப் படைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க நடவடிக்கை

இரவு நேரத்தில் லே எல்லைப்பகுதியில் இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் வட்டமிட்டன.

இரவு ரோந்துப் பணியை மேற்கொண்ட இந்திய விமானப்படையினர் அங்கு சீனப்படைகளைக் கண்காணித்து வருகின்றனர்.

சீனா எந்த வித அத்துமீறலில் ஈடுபட்டாலும் பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக இந்திய விமானப் படையினர் தெரிவித்தனர்.

* குறைந்த விலையில் மாநில அரசுகளுக்கு உளுந்து, துவரம் பருப்புகள் வழங்க மத்திய அரசு முடிவு

விலைவாசியைக் கட்டுப்படுத்த உளுந்தம்பருப்பு, துவரம்பருப்பு போன்றவற்றை குறைந்த விலையில் மாநில அரசுகளுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எண்ணெய், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தையில் விலை அதிகரிப்பதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மாநில அரசுகளுக்கு உளுந்தம் பருப்பு கிலோ 79 ரூபாய்க்கும் துவரம் பருப்பு கிலோ 81 ரூபாய்க்கும் வழங்கப்படும் என்று மத்திய நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஹத்ராஸ் பெண் படுகொலை வழக்கு விசாரணையை ஏற்றது சிபிஐ

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது இளம் தலித் பெண் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

காசியாபாத் சிபிஐ அலுவலகத்தில் வழக்கின் ஆவணங்கள் யாவும் ஒப்படைக்கப்பட்டன.

சிபிஐ விசாரணைக்கு உத்தரப்பிரதேச அரசு பரிந்துரை செய்ததையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனிடையே பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினர் பலத்த பாதுகாப்புடன் இன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல்துறையால் மிரட்டப்படுவதாக புகார் எழுந்த நிலையில், காவல்துறை அதிகாரிகளையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

* 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உள்ளிட்ட 6 ஐஏஎஸ் அதிகாரிகள், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிக்கல்வித்துறை ஆணையராக, என்.வெங்கடேஷ் நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதவியில் இருந்த, சிஜி தாமஸ் வைத்தியன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில், செயல் அலுவலராக கிராந்தி குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு வணிகவரித்துறை இணை ஆணையராக சரவணனும், டாஸ்மாக் எம்.டி.யாக மோகன் ஐஏஎஸ்சும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநராக கிர்லோஸ் குமாரும் நியமிக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

* அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.100 கோடிக்கும் அதிகமான நன்கொடை குவிந்தது

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை முடிந்தபின் 2 மாதங்களில் இதுவரை 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை குவிந்துள்ளதாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய அறக்கட்டளையின் அலுவலகப் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா, ஏராளமான வெளிநாட்டு கரன்ஸிகளும் நன்கொடையாக வந்துள்ளன என்றும்  அவை இன்னும் வங்கியில் மாற்றப்படவில்லை என்றும் கூறினார்.

200 கிலோவுக்கும் அதிகமான வெள்ளி மற்றும் விலைமதிப்புள்ள பல்வேறு பொருட்கள் நன்கொடையாக வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

* சீனாவுக்கு உளவு பார்த்ததாக சிங்கப்பூர் கல்வியாளருக்கு 14 மாதம் சிறை

சீனாவுக்கு உளவு பார்த்ததாக சிங்கப்பூரைச் சேர்ந்த கல்வியாளருக்கு, அமெரிக்க நீதிமன்றம் 14 மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

சீனாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றபோது மூளை சலவை செய்யப்பட்டு உளவாளியாக மாற்றப்பட்டதாக குற்றஞ்சாட்டி, சிங்கப்பூரைச் சேர்ந்த கல்வியாளர் ஜுன் வீ யியோவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர்.

உளவுத்துறைக்கு ஆட்களை சேர்க்க, அமெரிக்காவுடன் நல்லுறவை பேணும் சிங்கப்பூரை சீனா பயன்படுத்துவதாகவும் அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

* முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பிரான்ஸ் நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு

முதலாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட பிரான்ஸ் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான துனீசியாவில் கடலடி ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், கடந்த 1917ம் ஆண்டு மூழ்கடிக்கப்ட்ட பிரான்ஸ் நாட்டின் அரியானே என்ற நீர்மூழ்கிக் கப்பல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது ஏற்பட்ட மோதலில் ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலால் இந்த நீர்மூழ்கி தாக்கப்பட்டதும், அதன் விளைவாக மூழ்கியதும் ஆய்வாளர்களின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

* ஜவ்வரிசி உற்பத்தியில் கலப்படத்தை தடுக்க ஜவ்வரிசி ஆலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி தர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது - மாநில மின்துறை அமைச்சர் திரு பி தங்கமணி

* 23 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களில் குரூப் பி மற்றும் குரூப் சி பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதாக மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

* தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

* கிராமப்புற மக்களுக்கு சொத்துரிமை அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஆறு லட்சத்து 62 ஆயிரம் கிராமங்களில் உள்ள மக்களுக்கு அடுத்த நான்காண்டுகளுக்குள் சொத்துரிமை அட்டை வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages