அக்னிப்புரட்சி இன்றைய (15.10.2020) முக்கிய செய்திகள்.
* உலகில் கொரோனா தொற்றால் 3,87,29,168 பேர் பாதிப்பு.
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,96,320 பேர் மரணம்.
உலகில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,91,11,241 ஆக உயர்வு.
உலகில் கொரோனா பாதிப்புடன் 85,21,607 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
* சென்னையில் 14 ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95-க்கும் விற்பனை.
* ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு: 7 மாதங்களுக்கு பிறகு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி.
துலாம் மாதத்தின் 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நாளை மாலையில் தொடங்கி நடைபெற உள்ளன.
தினமும் 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைபெறுகிறது.
சபரிமலைக்கு செல்லும் முக்கிய சாலைகள் இரண்டு மட்டுமே திறக்கப்பட்டு இதர சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.
* பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க மத்திய அரசு வழங்கிய தளர்வுகள் இன்று முதல் அமல்.
கொரோனா ஊரடங்கில் பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க, மத்திய அரசு வழங்கிய தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதற்கான வழிகாட்டு முறைகளை மத்திய அரசு கடந்த, 1ம் தேதி அறிவித்தது.
அதன்படி இன்று முதல், தனிக் கட்டடங்களில் இயங்கும் திரையரங்குகள், மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள், 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யவும், கூட்டத்தை குறைக்க கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள் திறக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பார்சல் செய்யப்பட்ட உணவுகளை மட்டும் விற்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பூங்காக்களை திறப்பதற்கு முன்னும், மூடிய பின்னும், அனைத்து பகுதிகளையும், கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.
இன்று முதல், பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், இது பற்றி மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* புதுச்சேரியில் இன்று முதல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி திரையரங்குகள் திறக்கப்படவுள்ளதால், கிருமி நாசினி தெளிப்பு உட்பட பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
ஐம்பது சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும், ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமர செய்ய வேண்டும், மாஸ்க் அணிந்த படியே படம் பார்க்க அனுமதிக்க வேண்டும், டிக்கெட் முன்பதிவு செய்வோரின் விவரங்களை கட்டாயம் சேகரிக்க வேண்டும், டிக்கெட் கவுன்ட்டர்கள் நாள் முழுவதும் திறந்திருக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களின்படி செயல்பட திரையரங்குகள் தயாராகி உள்ளன.
* நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் குறைந்து ரூ.5க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முட்டை விலை உயர்ந்த நிலையில் விற்பனை மந்தமானதால் மீண்டும் விலை குறைந்து காணப்படுகிறது.
* டெல்லியில் இன்று முதல் அவசர தேவைகளை தவிர பிற பயன்பாட்டுக்கு ஜெனரேட்டர்களை பயன்படுத்த தடை.
காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் பெரிய கட்டுமான பணிகளுக்கும் தடை- டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு
பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளதால் சாலையோரம் குப்பை, மரக்கட்டைகளை எரித்தால் அபராதம்.
* மத்திய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் நாளை காலை விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்.
ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இடஒதுக்கீட்டை பறித்து முன்னேறிய வகுப்பினருக்கு அளித்தது கண்டிக்கத்தக்கது- திருமாவளவன்.
* கலாமின் பங்களிப்பை நாடு என்றும் மறக்காது நாட்டின் வளர்ச்சிக்கு அப்துல்கலாம் அளித்த பங்களிப்பை நாடு என்றும் மறக்காது
லட்சக்கணக்கான மக்களுக்கு கலாமின் வாழ்க்கை ஊக்கமளிப்பதாக உள்ளது
கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட்.
* ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரத்தில் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்துஇருக்க வேண்டும். தவறை தவிர்த்து இருக்கலாம்- நடிகர் ரஜினி.
அனுபவமே பாடம் என டுவிட்டரில் ரஜினி கருத்து.
* சென்னை அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகள் மற்று பொறியியல் கல்லூரி முன் திமுக இளைஞரணி போராட்டம் அண்ணா பல்கலை மாநல அரசின்நிர்வாக கட்டுபாட்டில் தொடர வேண்டும். துணைவேந்தர் சூரப்பாவை நீக்க கோரி சென்னையில் உதயநிதி, பாரதி மற்றும் திமுகவினர் போராட்டம்.
* நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம்:
முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா என பாருங்கள்" விஜய் சேதுபதியை நினைத்து கோபப்படுவதா? அறியாமையை நினைத்து சிரிப்பதா?
*;ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை செலுத்தினார் ரஜினி.
நீதிமன்றத்தில் சொத்து வரி தொடர்பாக வழக்கு தொடர்ந்து வாபஸ் பெற்ற நிலையில் வரி செலுத்தினார்.
* தலைவி மற்றும் குயின் தொடரை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு.
நவம்பர் 10, 11ம் தேதிகளில் இறுதி விசாரணை - சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு.
‘தலைவி' படத்தில் தனது தந்தையை தவறாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளது- ஜெ.தீபா.
தலைவி பட கதையை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் தீபா பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்- பட நிறுவனம்.
* சித்த மருந்துகள் தொடர்பாக எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன?"
சித்த மருத்துவத்தில் எத்தனை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன..?"
விரிவான பதில் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
“கொரோனாவிற்கு கபசுர குடிநீர் மருந்து என ஏன் இதுவரை அறிவிக்கவில்லை?"
ஆய்வுகள் அடிப்படையில் கபசுர குடிநீர் நோய்க்கான மருந்தாக வழங்கப்பட்டு வருகிறது - மத்திய அரசு தரப்பு.
“கபசுர குடிநீர் மூலம் எத்தனை பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்?"
*:அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா நடந்துக்கொண்ட விதம் ஒழுங்கீனமானது:
சூரப்பா நடந்துக்கொண்ட விதம் தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம்.
தமிழகத்தின் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு பாதகம் விளைவிக்கிற செயலை ஏற்க முடியாது.
- அமைச்சர் சி.வி.சண்முகம்.
* வாகன தகுதி சான்றை புதுப்பிக்கும்போது பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒட்டிய நிறுவனத்திடம் சான்று பெற வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை.
லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்கக்கோரிய வழக்கு:
50% அல்லது 27% இட ஒதுக்கீடு என எதையும் இந்த ஆண்டு வழங்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டம்.
தமிழக அரசு, அதிமுக மற்றும் பிற கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்.
* பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.80 கோடி:
சொந்தமாக வாகனம் இல்லை -சொத்து விபர கணக்கில் தகவல்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொத்து மதிப்பு ரூ.28.63 கோடி.
* அனைத்து அரசு துறைகளும் ஊழியர்களை மருத்துவ உபகரணம் மூலம் பரிசோதித்து அறிக்கை அனுப்ப உத்தரவு
அரசு அலுவலர்களுக்கு சோதனை செய்து அறிக்கை அனுப்ப பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் உத்தரவு
சென்னை தலைமைச்செயலகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் ஊழியர்கள் பரிசோதனை செய்ய உத்தரவு
* அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்"
விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சமாக அதிகாரிகள் பெறுவது வேதனை- நீதிபதிகள்.
தமிழகத்தில் எத்தனை நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன?- நீதிபதிகள் கேள்வி.
தமிழக அரசு நாளை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- நீதிபதிகள்.
விவசாயிகள் கொண்டுவரும் ஒரு நெல்மணி முளைத்து வீண் போனாலும், அதற்கு காரணமான அதிகாரியிடம் பணத்தை வசூலிக்க வேண்டும்.
நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர், இது குறித்து நாளை உரிய விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி.
கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி.
* அமமுக பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வெற்றிவேல் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
* ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரிய இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டாமா ?"
"மருத்துவ மாணவர் சேர்க்கையில் உரிய இட ஒதுக்கீடு இல்லை என்றால், அனைத்து வகை இட ஒதுக்கீடும் தேவை இல்லை"-உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிரடி.
No comments:
Post a Comment