அக்னிப்புரட்சி இன்றைய (16.10.2020) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,79,191 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,140 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,87,852 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 57 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 10,529 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,245 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,27,703 பேர் குணமடைந்துள்ளனர்.
* மருத்துவ படிப்பு நுழைவு தேர்வான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13ம் தேதி மற்றும் அக்.14ம் தேதி நீட் தேர்வு நடந்தது. நீட் தேர்வு முடிவுகள் ntaneet.nic.in இணையதளத்தில் வெளியாகிறது.
* சென்னையில் 15 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* தமிழகத்தில் 6 மாதத்துக்கு பிறகு ஆம்னி பேருந்துகளின் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. 50% இருக்கைகளுடன் வழக்கமான கட்டணத்துடன் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
* திருவாரூர்: மன்னார்குடி அருகே நெல் கொள்முதலில் மோசடி நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்துள்ளது.
கிடங்கிற்கு கொண்டு சென்ற நெல் மூட்டைகளை மீண்டும் கொண்டு வந்து கொள்முதல் செய்தது போல் கணக்கு காட்டி மோசடி.
கண்ணாரபேட்டை கொள்முதல் நிலையத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 155 நெல் மூட்டைகள் இருந்தது கண்டுபிடிப்பு.
விவசாயிகளிடம் ஒரு நெல் மூட்டைக்கு ரூ.40 பெறுவதாக வந்த புகாரில் அதிகாரிகள் அதிரடி சோதனை.
சோதனையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கணக்கில் வராத ரூ.87 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
* கொரோனா இறப்புகளை தடுப்பதில் ரெம்டெசிவர் மருந்து தோல்வி: உலக சுகாதார அமைப்பு.
ரெம்டெசிவர் மருந்து கொரோனா நோயை குணப்படுத்தவில்லை: உலக சுகாதார அமைப்பு.
ரெம்டெசிவர் மருந்து கொரோனா நோயாளிகளின் உடலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
* தமிழகம் முழுவதும் பயோ-மெட்ரிக் முறையில் ரேஷன் பொருள் வழங்கும் பணி தற்காலிக நிறுத்தம்.
கைரேகையை பதிவு செய்து பொருள் வழங்குவதில் சர்வர் பிரச்சினை எதிரொலி.
மீண்டும் பழைய முறையில் ரேஷன் கார்டுகளை ஸ்கேன் செய்து பொருள் வழங்கப்பட்டு வருகிறது.
* அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? ஆளுநர் ஆட்சியா? - பாமக நிறுவனர் இராமதாஸ்.
* உணவு மற்றும் விவசாய அமைப்பின் 75-வது ஆண்டு தினம்.
75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.
* ரூ.2.70 கோடி மதிப்பிலான நிலமோசடி புகாரை சிபிஐ விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கு.
நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா உள்பட 2 பேர் ஏமாற்றியதாக புகார்.
* பொன்விழா ஆண்டிலும் அ.தி.மு.க ஆட்சியை பிடிக்கும்- சாதனை படைப்போம்"-கட்சி தொண்டர்களுக்கு அ.தி.மு.க தலைமை அறிவிப்பு
ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் ஆகிய இருவரும் கூட்டாக அறிக்கை வெளியீடு.
அ.தி.மு.க-வுக்காக உழைத்த, தியாகம் செய்தவர்களுக்கு நன்றி"
49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தொண்டர்களுக்கு அ.தி.மு.க தலைமை அறிக்கை.
* மருத்துவ படிப்பு - கண்கலங்கிய நீதிபதி:
கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது எனக்கூறி கண் கலங்கினார் நீதிபதி.
மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் வேதனை.
"அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் முறை தொடர்பான சட்ட மசோதா இன்னமும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது"
தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல். நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட இயலாது. காலக்கெடுவையும் விதிக்க இயலாது- தலைமை வழக்கறிஞர்.
* தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அ.தி.மு.க. எம்.பி.ரவீந்திரநாத் குமார் வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவு
குற்றச்சாட்டுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது- நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்.
* அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்ற தமிழக அரசின் முடிவு காலதாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
* மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
* 800 பட விவகாரம் தொடர்பாக முத்தையா முரளிதரன் விளக்கம்:
என்னை தமிழினத்துக்கு எதிரானவர்போல் சித்தரிப்பது வேதனை அளிக்கிறது.
பள்ளிக்காலம் முதலே தமிழ் வழியில் படித்துவந்தவன், எனக்கு தமிழே தெரியாது என்பது தவறான செய்தி.
இலங்கைத் தமிழரானது தவறா? - முத்தையா முரளிதரன்.
விளையாட்டிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் இதுவரை பல சர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன் - முத்தையா முரளிதரன்.
தற்போது வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 படத்தைப் பற்றி பல்வேறு சர்ச்சை விவாதங்கள் எழுந்துள்ளன.
முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என் தனிப்பட்ட சாதனைகள் அல்ல.
30 ஆண்டுகளாக நடைபெற்ற போரில் முதலில் பாதிக்கப்பட்டது மலையகத் தமிழர்கள்தான்.
போரால் நிகழும் இழப்பு, அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
இந்தச் சூழலில் எப்படி நான் கிரிக்கெட்டில் சாதித்தேன் என்பது பற்றிய படம்தான் 800.
அந்த சாதனைகளுக்குப் பின்னால், என் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என பலருக்கு பெரும் பங்கு உள்ளது.
* ஐபிஎல்: கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகல்:
கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக இயான் மோர்கன் செயல்படுவார் என அறிவிப்பு.
பேட்டிங்கில் கவனம் செலுத்த கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தினேஷ் கார்த்திக் தகவல்.
* ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவு.
* திமுக எம்.பி. கவுதம சிகாமணிக்கு சொந்தமான ரூ.8.60 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு.
அந்நிய செலாவணி சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டு முதலீடுகளை வாங்கியதால் அமலாக்கத்துறை நடவடிக்கை.
திமுக எம்.பி. கவுதமசிகாமணிக்கு சொந்தமான நிலங்கள், வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு.
கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதம சிகாமணியிடம் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் முடிவு.
* ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது.
திரையரங்கு குழுமம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஆன் லைன் முன்பதிவு கட்டணத்துக்கும் கேளிக்கை வரி விதிக்கும் வகையில் கேளிக்கை வரி கணக்கை மறு மதிப்பீடு செய்யும் உத்தரவு ரத்து- உயர்நீதிமன்றம்.
* லஞ்ச ஒழிப்பு சோதனை:
கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
கடலூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மெல்வின் ராஜசிங் தலைமையிலான போலீசார் 4 மணி நேரம் சோதனை.
4 மணிநேரம் நடைபெற்ற சோதனை நிறைவு, கணக்கில் வராத 32 ஆயிரம் பணம் பறிமுதல்.
No comments:
Post a Comment