அக்னிப்புரட்சி இன்றைய (18.10.2020) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 4 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு புதிதாக 3,914 பேருக்கு கொரோனா.
மொத்த பாதிப்பு 6,87,400 ஆக உயர்வு-தமிழக சுகாதாரத்துறை தகவல்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 56 பேர் உயிரிழப்பு: மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை - 10,642
சென்னையில் மேலும் 1,036 பேருக்கு கொரோனா பாதிப்பு.
சென்னையில் 1,359 பேர் இன்று குணமடைந்தனர்.
* புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சிக் கடைகளில் கூட்டம்.
ஆட்டுக்கறி, கோழிக்கறி மற்றும் மீன்கள் வாங்குவதற்காக அலைமோதும் அசைவப் பிரியர்கள்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மற்றும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் அதிகாலை முதல் குவிந்த மக்கள்.
* சென்னையில் 17 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்.
பொறியியல் மாணவர்களுக்கு முதன்முறையாக ஆன்லைனில் நடைபெற்ற, இறுதி செமஸ்டர் தேர்வின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
ஆன்லைனில் மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
www.annauniv.edu என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம்.
* பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வில் ஏராளமான மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைப்பு:
சில மாணவர்களுக்கு WH1 என தேர்வு முடிவு காண்பிப்பதால் குழப்பம்.
ஆன்லைன் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு குறித்து அண்ணா பல்கலை. விளக்கம்.
ஆன்லைன் தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகம் என்பதால் முடிவு நிறுத்தம்.
முடிவு நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு குறித்தும் அறிவிப்பு இல்லை.
சில இறுதியாண்டு மாணவர்கள் வளாகத் நேர்முகங்கள் மூலம் பணிக்கு தேர்வாகியுள்ளனர்.
* டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 26 பேர் கைது:
குரூப்-4, விஏஓ தேர்வு, குரூப்- 2 தேர்வில் முறைகேடு - சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை.
இதுவரை 3 தேர்வுகளிலும் மோசடியில் ஈடுபட்ட 96 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
* காயம் காரணமாகவே பிராவோ இறுதி ஓவரில் பந்து வீச முடியவில்லை:
டெல்லிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா இறுதி ஓவர் வீசியது குறித்து சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங் விளக்கம்.
* வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் புதுக்கோட்டை, திருச்சியிலும் கனமழைக்கு வாய்ப்பு.
பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.
சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் மழைபெய்ய வாய்ப்பு என எச்சரிக்கை.
* புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகளை இயக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.
புதுச்சேரியில் இறப்பு விகிதம் குறைவு என்பதால் மக்கள் மெத்தனமாக இல்லாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் - நாராயணசாமி.
* நீட் முறைகேடு - கண்டுபிடிக்க முடியவில்லை”
நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியிடப்பட்ட 10 மாணவ, மாணவிகளின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை-ஆதார் ஆணையம் பதில்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி செய்தது தொடர்பாக 15க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி கைது செய்தது.
No comments:
Post a Comment