அக்னிப்புரட்சி இன்றைய (19.10.2020) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,90,936 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 885 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,90,949 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 57 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 10,586 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 4,515 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,42,152 பேர் குணமடைந்துள்ளனர்.
* 2021 பிப்ரவரிக்குள் இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வரும் - மத்திய அரசுக்கு நிபுணர் குழு அறிக்கை.
தற்போது அமலில் உள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்க வேண்டும் -நிபுணர் குழு.
* சென்னையில் 18 ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95-க்கும் விற்பனை.
* இன்று அதிகாலை 4:44 மணிக்கு லடாக்கில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது - நில அதிர்வுக்கான தேசிய மையம்.
* நிறுத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக மாணவர்கள் தேர்வெழுதிய வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
வீடியோவை ஆய்வு செய்யும் குழுவின் முடிவு அடிப்படையில் மாணவர்களின் தேர்வு முடிவு வெளியடப்படும்- அண்ணா பல்கலைக்கழகம்.
அன்ணா பல்கலைக்கழக தேர்வை செப்.24 முதல் செப்.29 வரை ஆன்லைனில் நடத்திய தேர்வை 1.50 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
முறைகேடாக தேர்வு எழுதியது தொழில்நுட்ப அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டதால் 3,000 மாணவர்களுக்கு முடிவுகள் அறிவிப்பு நிறுத்தம்.
* தேனி-போடி சாலையில் இன்றுகாலை நடக்கும் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸாருக்கு அனுமதி மறுப்பு.
காங்கிரஸ் கொடியுடன் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான கூட்டத்திற்கு விவசாயிகள் டிராக்டர்களிலும் செல்ல முடியவில்லை- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு.
* கடலூர்: திட்டக்குடி அருகே ஆலம்பாடியில் அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 109 சவரன் கொள்ளை
விவசாயி மணி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராம்குமார் ஆகியோர் வீடுகளில் இருந்து நகை பணம் கொள்ளை.
ராம்குமார் வீட்டில் 37 சவரன், ரூ.1 லட்சம், மணி வீட்டில் 72 சவரன் நகை, ரூ.6.37 லட்சம் பணம் கொள்ளை
* முதலமைச்சருடன் ஸ்டாலின் சந்திப்பு;
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சென்று சந்தித்தார் ஸ்டாலின்.
முதலமைச்சரின் தாயார் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி ஆகியோரும் முதலமைச்சர் இல்லத்திற்கு வருகை.
* வட கிழக்கு பருவமழை துவங்குவது தாமதமாக வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்
அக்டோபர் இறுதி வரை மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மட்டுமே மழைக்கு வாய்ப்பு எனவும் தகவல்.
தென் மாவட்டங்களில் பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்கக்கூடும்.
மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பிருப்பு.
* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,520க்கு விற்பனை.
* செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவாது:
செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை-மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம்.
இந்த கொரோனா காலத்தில் செய்தித்தாள்கள் படிப்பது முற்றிலும் பாதுகாப்பானதுதான்.
சம்வத் என்கிற நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம்.
காலை நேர தேநீருடன் செய்தித்தாள் படிப்பது மகிழ்ச்சியான அனுபவம் - ஹர்ஷவர்தன்
* நடிகர்கள் ஒப்பந்தம் செய்து கொண்ட சம்பளத்தில் இருந்து 30% குறைத்துக் கொள்ள வேண்டும்:
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா வேண்டுகோள். நடிகர்கள் 30% சம்பளத்தை குறைக்க வேண்டும்.
இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது திரைக் கலைஞர்களின் கடமை அல்லவா".
தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத் துறையில் தாமே முன்வந்து 30% - 50% சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.
இனி ஒப்பந்தம் செய்து கொள்ளும் படங்களுக்கு எனது இந்த வேண்டுகோள் பொருந்தாது.
ஏற்கனவே ஒப்பந்தம் செய்த தொழில் நுட்ப கலைஞர்களும் 30% சம்பளத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்.
* திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
ஜீயர்கள் திவ்ய பிரபந்த மந்திரங்கள் பாடி, அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீதேவி பூதேவி சமதே மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று இரவு மலையப்பசுவாமி சர்வ பூபால வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
* பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை:
தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை துவக்கம்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி ஆணையர் வெங்கடேஷ் பங்கேற்பு.
பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் பழனிசாமி பங்கேற்பு.
* தேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை:
தேனியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர்.
அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை:
அடுத்த 48 மணி நேரத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டையில் கன மழை.
சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கன மழை. ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை.
கடலூர், அரியலூர் மற்றும் புதுவை பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது மிதமான மழை.
* கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் எந்த சட்ட விரோதமும் இல்லை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி விளக்கம்.
*மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்த வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவும் கோரிக்கை.
கூட்டுறவு வங்கிகள் - ரிசர்வ் வங்கி விளக்கம். தமிழகத்தை சேர்ந்த இரு பழமையான கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்த வழக்குகள்.
வழக்குகள் ஆறு வாரங்களுக்கு தள்ளிவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்.
* பள்ளிகள் திறப்பு - தற்போது இல்லை:
பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை"
-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
“அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவு செய்யப்படும். பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் தான் அறிவிப்பார்"
இன்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்திய நிலையில் புதிய தகவல்.
* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததும், அதனை முதல்வர் வேடிக்கை பார்ப்பதும் துரோகம் - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு:
ஆளுநர் - முதலமைச்சர் - பாஜக கூட்டணி நீட் விலக்கு மசோதாவை நீர்க்கச் செய்தது போல் இன்றி, இதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் - ஸ்டாலின்.
*:இந்தியா-இலங்கை கடற்படைகளுக்கு இடையே ‘ஸ்லிநெக்ஸ்-20’ என்ற பெயரில் இரு தரப்பு கூட்டு பயிற்சி:
இலங்கையின் திரிகோணமலை அருகே வரும் 21ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிப்பு.
* அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% தனி இட ஒதுக்கீடு வழங்க ஆளுநர் ஒப்புதல் கிடைக்குமா?
தனி இட ஒதுக்கீடு கிடைக்காவிட்டால் வெறும் 4 பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்பு.
500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 4 மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு.
அரசு பள்ளி மாணவர்கள் 1615 பேர் இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி.
வாசுகி - 580, சக்திவேல் - 552, நவீன்குமார் - 527 , ஹரீஸ் - 502 மதிப்பெண்களை பெற்று உள்ளனர்.
மற்றவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புகள் மிக மிக குறைவு - மருத்துவ கல்வி வட்டாரங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவர்கள் ஒற்றை இலக்கத்தில் தான் மருத்துவ படிப்பில் சேரும் நிலை உள்ளது.
7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தால் இந்த நிலை மாறும் என எதிர்பார்ப்பு.
“ஆளுநர் ஒப்புதல் அளிக்காததும், வேடிக்கை பார்ப்பதும் துரோகம்" என ஸ்டாலின் கூறியுள்ளார்.
7.5 % தனி இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க ராமதாஸ் கோரிக்கை.
* நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிப்பு.
முதலாம் ஆண்டு வகுப்புகள் டிசம்பர் 1ம் தேதி துவங்கும் எனவும் அறிவிப்பு.
ஏற்கனவே முதலாமாண்டு வகுப்புகள் நவ.1ல், துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம்.
* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ்க்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.
தெலங்கானாவுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி.
* முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து
பின்வாங்கப் போவதில்லை"-நடிகர் விஜய் சேதுபதி திட்டவட்டம்
800 படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் விஜய் சேதுபதி விளக்கம்.
800 படம் வெளியாகும்போது கேள்வி கேட்பவர்களுக்கு பதில் கிடைக்கும்.
நான் கேட்ட கதை என்னவென்று எனக்குத்தான் தெரியும்-விஜய் சேதுபதி
* 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக முத்தையா முரளிதரன் வேண்டுகோள்.
தமிழ் நாட்டின் தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை.
800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், முத்தையா முரளிதரன் மீண்டும் விளக்கம்.
* முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக தகவல்.
* அந்தமான் நிகோபார் தீவில் கேம்ப்பெல் பே பகுதியில் இருந்து 510 கி.மீ. தொலைவில் இன்று மாலை 3.08 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி உள்ளது.
நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.
* சென்னையில் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.
* ஸ்டெர்லைட் ஆலைக்கு எந்த இடைக்கால நிவாரணமும் கொடுக்கத் தேவையில்லை:
ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிக்காக இடைக்கால அனுமதி கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்.
* சென்னை சென்ட்ரல் - பெங்களூரு இடையே அக்.21ம் தேதி முதல் டபுள் டெக்கர் சிறப்பு ரயில் இயக்கம்:
சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.
* 2020 கிராண்ட் சேலஞ்சஸ் வருடாந்திர கூட்டம் - காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு
கொரோனாவுக்கு பிந்தைய சுகாதார சவால்கள் தொடர்பாக கருத்தரங்கில் ஆலோசனை
இந்தியாவில் சிறப்பான சுகாதார வசதிகளுக்கு பல புதுமைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு - பிரதமர் மோடி.
* தமிழக பதிவுத்துறையில் பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகிறது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
நிலத்தின் சர்வே எண்ணில் உள்ள தவறை சரி செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், வட்டாட்சியரின் கடிதத்தின் மீது 2 ஆண்டாக நடவடிக்கை எடுக்காத தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு.
வருவாய்த் துறையிலிருந்து லஞ்சம் தொடங்குவதாக குறிப்பிட்ட நீதிபதி, பதிவுத்துறையில் பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு கீழ் தான் நடைபெறுவதாக தெரிவித்தார்.
லஞ்சம் வாங்கிக் கொடுப்பதில் பத்திரப்பதிவு எழுத்தர்கள் ஏஜெண்டுகளாக செயல்படுவதாக கூறிய நீதிபதி, ஊழல் தடுப்பு பிரிவு விழிப்புடன் இருந்தால் அரசு அதிகாரிகள் ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்கள் வெளி உலகத்திற்கு தெரிய வரும் என்றார்.
No comments:
Post a Comment