20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டம் பற்றி விவாதிக்க நவம்பர் 22-ஆம் தேதி பா.ம.க, வன்னியர் சங்க கூட்டுப் பொதுக்குழு! - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி கூட்டறிக்கை - Agnipuratchi

20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டம் பற்றி விவாதிக்க நவம்பர் 22-ஆம் தேதி பா.ம.க, வன்னியர் சங்க கூட்டுப் பொதுக்குழு! - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி கூட்டறிக்கை

Share This

20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டம் பற்றி  விவாதிக்க நவம்பர் 22-ஆம் தேதி பா.ம.க, வன்னியர் சங்க கூட்டுப் பொதுக்குழு! - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி கூட்டறிக்கை

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு என்ற 40 ஆண்டுகால கோரிக்கையை வலியுறுத்தி, வரலாறு காணாத அளவில், மிகப்பெரிய போராட்டத்தை நடத்த பாட்டாளிகள், பாட்டாளி இளைஞர்கள், பாட்டாளி பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தயாராக வேண்டும் என்று பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிறுவனர் மருத்துவர் அய்யா அழைப்பு விடுத்திருக்கிறார்.
மருத்துவர் அய்யா அவர்களின் அழைப்புக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இளைஞர்கள் தொடங்கி பெரியவர்களும், பெண்களும் போராட்டத்தில் பங்கேற்க ஆர்வமுடன் முன்வந்திருக்கிறார்கள். சமூக நீதியை வலியுறுத்தி நடத்தப்படும் இப்போராட்டத்தை பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமலும், அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் நடத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மருத்துவர் அய்யா கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தகைய சூழலில் 20% இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை அறவழியில் எவ்வாறு நடத்துவது? எந்த தேதியில் நடத்துவது? என்பது குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகிய அமைப்புகளில் கூட்டுப் பொதுக்குழு வரும் நவம்பர் மாதம் 22&ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு இணைய வழியில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க.இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ள கூட்டுப் பொதுக்குழு கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத்தலைவர்  பு.தா. அருள்மொழி ஆகிய இருவரும் தலைமை ஏற்கிறோம்.

பா.ம.க., வன்னியர் சங்கம் ஆகிய அமைப்புகளின் கூட்டுப் பொதுக்குழு கூட்டத்தில் இரு அமைப்புகளில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்வர். கூட்டத்தில் பங்கேற்பதற்கான இணையதள முகவரி, கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தனித்தனியே தெரிவிக்கப்படும்.

                                                      
தங்கள் அன்புள்ள,

ஜி.கே. மணி, தலைவர் 
பாட்டாளி மக்கள் கட்சி

பு.தா. அருள்மொழி,  தலைவர்,
வன்னியர் சங்கம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages