அக்னிப்புரட்சி இன்றைய (20.10.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (20.10.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (20.10.2020) முக்கிய செய்திகள்.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,094  பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,94,030 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 857 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,91,754 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 50 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 10,741 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 4,403 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,46,555 பேர் குணமடைந்துள்ளனர்.

* அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு. நிலநடுக்கத்தை தொடர்ந்து அலாஸ்கா கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

* சென்னையில் 19 ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95-க்கும் விற்பனை.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை.

வரத்துக்குறைவால் ரூ.80க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை மேலும் ரூ.20 முதல் ரூ.30 உயர்வு.

தொடர் மழையால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரத்து குறைந்ததால் தமிழகத்தில் வெங்காயம் விலை அதிகரிப்பு.

* சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை சென்னையில் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், எழும்பூர், சேப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

திருவான்மியூர், பட்டினப்பாக்கம், அண்ணா சாலை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

* மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது:

அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்".

தென்னிந்திய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.

சென்னையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

திருவள்ளூர், தர்மபுரி, சேலம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

மத்திய வங்கக்  கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.

* தெலங்கானாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 கோடி அளித்ததற்கு முதலமைச்சர் பழனிசாமிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நன்றி தெரிவித்தார்:

முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு நன்றி தெரிவித்த சந்திரசேகர ராவ், முதல்வரின் தாயார் மறைவிற்கு அவரிடம் இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.

* விஜய்சேதுபதி குடும்பத்தை குறிவைத்து சமூக வலைதளங்களில் உலவும் ஆபாச விமர்சனங்கள்:

கடும் கொதிப்பில் விஜய்சேதுபதி ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள்.

800 பட விவகாரத்தில் நடிகர் விஜய்சேதுபதி மீது கடும் கண்டனக் குரல்கள் எழுந்தன

முத்தையா முரளிதரனின் வேண்டுகோளை ஏற்று படத்திலிருந்து விலகினார் விஜய்சேதுபதி.

* ஆபாச விமர்சனங்களை உலவவிட்டவர்களை உடனடியாக கைது செய்யுங்கள் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தர்மபுரி தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் வலியுறுத்தல்.

* வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு நாளை முதல் விற்பனை:

பசுமைப் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் நாளை முதல் விற்பனை.

சென்னை நாளை தொடங்குகிறது 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை.
தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் விற்பனை.

* டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒருமுறை அவகாசம் வழங்கி தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மறுமதிப்பீட்டு முடிவு வரும்முன் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம் முடிந்ததாக பரமக்குடியை சேர்ந்த மாணவர் தேவதுரை தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

* ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் 5 அமைச்சர்கள் சந்திப்பு:

அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் ஆளுநருடன் சந்திப்பு.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்.

7.5% தனி இட ஒதுக்கீட்டுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க ஆளுநரிடம் வலியுறுத்தல்.

* விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட என திமுக எம்.பி., கனிமொழி ட்விட்டரில் கருத்து.

பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம் - கனிமொழி.

இந்த குற்றத்தை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - கனிமொழி.

* விளைந்தும் விவசாயிகளுக்கு விலையில்லை; ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை.

அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் நனைந்து முளைக்கும் அவலம்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

* தமிழகத்தில் எம்.பி. தேர்தலில் ரூ.77 லட்சம், எம்.எல்.ஏ. தேர்தலில் ரூ.30.80 லட்சம் வரை செலவு செய்துக்கொள்ளலாம்.

வேட்பாளர்கள் செலவு செய்வதை 10% உயர்த்தி தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

* ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் இழப்பீட்டு தொகையை பிரித்துக் கொடுக்கும் விவகாரம்.

தீபக், தீபா மற்றும் வருமான வரித்துறைக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ்.

வேதா நிலையத்துக்கு ரூ.68 கோடி இழப்பீடாக சிவில் நீதிமன்றத்தில் அரசு டெபாசிட் செய்திருந்தது.

வருமான வரி பாக்கியை வழங்க கோரி வருமான வரித்துறை மனுத்தாக்கல்.
நவ.5ஆம் தேதிக்குள் பதிலளிக்க சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு.

* வேலூர்: காட்பாடி கார்ணாம்பேட் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லஞ்சம் வாங்கியபோது கைது.

தட்கல் மின் இணைப்புக்கு ரிஷிகேஸி என்பவரிடம் ரூ.7000 லஞ்சம் வாங்கியபோது கார்த்திகேயன் சிக்கினார்.

* தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர் கடத்தல்:

உசிலம்பட்டி அருகே உள்ள நாட்டான்மங்கலம்
ஊராட்சி துணைத் தலைவர் மீது புகார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு. ஊராட்சி தலைவர் கணேஷ் என்பவரை துணைத் தலைவர் பிரதீப் கடத்தியதாக குற்றச்சாட்டு.

பிரதீப் தனது சகோதரிக்கு ஊராட்சி செயலாளர் பதவிபெறும் விவகாரம் - ஊராட்சி தலைவரை கடத்தியதாக கூறப்படுகிறது.

* இட ஒதுக்கீடு வழங்கினால் தான், அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவராக முடியும்:

7.5%  சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு முதலமைச்சர் அறிவுரைப்படி ஆளுநரை சந்தித்தோம்.

தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆளுநரிடம் விளக்கி கூறினோம்.

நல்ல முடிவை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். ஆளுநரின் பரிசீலனையில் உள்ள மசோதாவுக்கு கட்டாயப்படுத்த முடியாது.

சமூக நீதியை பாதுகாக்க விரைந்து முடிவு எடுக்குமாறு ஆளுநரிடம் கூறியுள்ளோம். முடிவு எடுக்க ஆளுநருக்கு கால நிர்ணயம் விதிக்க முடியாது.

* பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்க, நிறுத்தி வைக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முழு  அதிகாரம் உள்ளது -சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் 2 கல்லூரிகளின் பல்கலைக்கழக இணைப்பை நிறுத்தி வைத்தது அண்ணா பல்கலைக்கழகம்.

பல்கலைக்கழக இணைப்பு மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு மட்டுமே அதிகாரம் - பொறியியல் கல்லூரிகள்.

தரமான கல்வியை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது - நீதிபதிகள்.

* காரீஃப் பருவத்தில் 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.

அக்டோபர் 1 முதல் தற்போதுவரை 842 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு. 60 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் 6 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர் - அமைச்சர் காமராஜ்.

ஈரப்பதம் இருந்தாலும் உடனே நெல் கொள்முதல் செய்யப்பட்டு அரவைக்கு அனுப்பப்படுகிறது.

நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை 17 சதவிகிதத்தில் இருந்து 22%ஆக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை.

நெல் ஈரப்பத அளவு குறித்து ஆய்வு செய்ய விரைவில் மத்திய அரசு அதிகாரிகள் தமிழகம் வரவுள்ளனர்-அமைச்சர் காமராஜ்.

* அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நவ.1 முதல் இலவச நீட் பயிற்சி தொடங்கும் என அறிவிப்பு.

நடப்பாண்டு பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து கோவை தனியார் அமைப்பு 2021க்கும் பயிற்சி அளிக்கவுள்ளது.

* தோனி மற்றும் விஜய் சேதுபதி மகள் குறித்து கற்பழிப்பு மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்- தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

பெண் குழந்தைகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும், கீழ்த்தரமான கயவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்- விஜயகாந்த்.

* 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை:

கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 48 அடியை எட்டியதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு  அபாய எச்சரிக்கை.

* சீன துருப்புகள் எப்போது வெளியேற்றப்படும் என்ற தேதியை நாட்டு மக்களிடம் பிரதமர் அறிவிக்க வேண்டும். பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுவதையொட்டி ராகுல் காந்தி ட்வீட்.

* நடிகர் விஜய் சேதுபதி குடும்பம் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து -சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு.

சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்.

* தைவானை கைப்பற்றும் நோக்கில் எல்லைப் பகுதியில் சக்திவாய்ந்த ஏவுகணைகளை நிறுத்தியுள்ள சீனா

தைவானை கைப்பற்றும் நோக்கத்தில் அதன் எல்லைப் பகுதியில் சீனா சக்திவாய்ந்த ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது.

புஜியான் மற்றும் ஜெஜியாங் மாகாணங்களில் அதிநவீன ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளான DF-17 ரக ஏவுகணை நிறுத்தியுள்ளதாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஏவுகணை மணிக்கு 12 ஆயிரத்து 360 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்டது.

இந்த ஏவுகணை மூலம் தனது கடல் வரம்பிற்குள் வரும் விமானம் தாங்கிக் கப்பல்களையும் சீனா தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

* 3 நாள் பயணமாக கேரளா சென்றார் ராகுல்காந்தி

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வயநாடு சென்றார்.

சிறப்பு விமானம் மூலம் அங்கு சென்றவர், தொகுதியில் கொரோனா பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதோடு, கட்சி பிரமுகர்களுடனும் கலந்துரையாட உள்ளார்.

இதனிடையே, கடந்தாண்டு கவலபரா (Kavalapara) பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், தங்களது உறவுகள் மற்றும் உடைமைகள் என அனைத்தையும் இழந்த இரண்டு சிறுமிகளுக்கென, புதியதாக கட்டப்பட்ட வீடுகளின் சாவிகளை ராகுல்காந்தி அவர்களிடம் ஒப்படைத்தார்.

* கும்பகோணத்தில் இரட்டைக்கொலை... சொத்து தகராறு காரணமா?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சொத்துதகராறு காரணமாக வழக்கறிஞரையும், அவரது நண்பரையும் வெட்டி படுகொலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கும்பகோணம் கிளாரட் நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் காமராஜ். இவர் உடல்நலமில்லாத தனது தந்தையுடன் மருத்துவமனையிலிருந்து நேற்று மாலை இருசக்கரவாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வரும் வழியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென காமராஜை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில் காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை பார்த்திபன் காயமின்றி உயிர் தப்பினார்.

இதனிடையே, இதே கும்பலைச் சேர்ந்த சிலர், காமராஜின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்த அவரது நண்பர் சக்திவேலை வெட்டியதில் அவரும் உயிரிழந்தார். கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி வழக்கறிஞர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கொலைகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்த நாச்சியார் கோவில் போலீசார் 8 பேர் கொண்ட கும்பலை தேடிவருகின்றனர்.

காமராஜுக்கும் உறவினர் ராஜவேலுக்கும் இடையே 15ஆண்டுகளாகத் தொடரும் சொத்து பிரச்னை இருந்துவருவதாகக் கூறப்படுவதால் இதன் காரணமாகக் கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* ராஜஸ்தான் பாலைவனங்களில் புதிய கற்றாழை இனம் கண்டுபிடிப்பு

ராஜஸ்தானின் பாலைவனங்களில் ஒரு புதிய கற்றாழை இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அலோ ட்ரைனெர்விஸ் என்ற இந்த இனம் ஒரு தனித்துவமான கற்றாழை இனம் ஆகும். பூக்களுக்கு அடியில் மூன்று நரம்புகளை கொண்டு இலை போன்ற கட்டமைப்புகளை தாங்குகின்றன.

பிகானேர் மாவட்டத்தில் உள்ள ஷிவ்பரி-ஜோர்பீர் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இந்த கற்றாழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

* டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கியது பாகிஸ்தான்

ஒழுக்கக்கேடான பதிவுகளை கட்டுப்படுத்துவதாக உறுதியளித்ததன் பேரில் டிக் டாக் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் நீக்கியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆபாசத்தையும் ஒழுக்கக்கேட்டையும் பரப்புவதில் மீண்டும் மீண்டும் ஈடுபடும் அனைத்து கணக்குகளையும் நீக்குவதாக உறுதிமொழியைத் தொடர்ந்து டிக் டாக் மீதான தடையை நீக்க முடிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது

* சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில்  தீ விபத்து

தீ விபத்தால் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் எனத் தகவல்
டாய்லெட் சுத்தம் செய்யும் பிரஷ் தயாரிப்பு தொழிற்சாலையில்  தீ விபத்து

அதிகாலை தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயை அணைக்க  தீயணைப்புத்துறை போராட்டம்

*திருவள்ளூர்: பொன்னேரி அருகே மெதூர் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது

தீவனங்கள் வைக்கும் பகுதியில் திடீரென தீப்பற்றியதால் சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான கோழிகள் எரிந்ததாக தகவல்

*அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை.!

*வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

* தருமபுரி: அரூர், செல்லம்பட்டி, எட்டிப்பட்டி, காட்டூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை

சேலம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை

* ஜோ பைடன் ஒரு கிரிமினல்... அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜோ பைடன் ஒரு கிரிமினல் என்று அதிபர் டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து டிரம்பிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

அப்போது தன்னிடம் கேள்வி கேட்ட செய்தியாளரை ஒரு கிரிமினல் என்று வசை பாடிய டிரம்ப், எதிர்கட்சி வேட்பாளரான ஜோ பைடனும் ஒரு கிரிமினல் என்றும் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages