அக்னிப்புரட்சி இன்றைய (21.10.2020)
முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,97,116 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 845 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,92,527 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 39 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 10,780 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 4,301 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,50,856 பேர் குணமடைந்துள்ளனர்
* சென்னையில் 20 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* சென்னை சென்ட்ரல் - பெங்களூரூ இடையே இன்றுமுதல் டபுள் டெக்கர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் தினமும் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 1.10 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
பெங்களூரூவில் தினமும் பகல் 2.30 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
* காவலர் வீரவணக்க நாளையொட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் டிஜிபி திரிபாதி மரியாதை.
காவலர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் மரியாதை.
காவலர் வீரவணக்க நாளையொட்டி உயிர்நீத்த காவலர்களுக்கு தமிழகம் முழுவதும் காவல்துறையினர் மரியாதை.
* TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவிப்பு.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டு மட்டுமே சான்றிதழ் செல்லும் என்பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழை நீட்டிப்பு செய்வது குறித்து சட்ட ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
* பள்ளி திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் - உளுந்தூர்பேட்டையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி:
தமிழகத்தைப் பொறுத்தவரை இங்கு இருக்கும் நிலைக்கு ஏற்றவாறு; அனைத்து துறைகளையும் ஆலோசித்து, பள்ளி திறப்பது குறித்து தமிழக முதல்வர் அவர்கள் முடிவெடுப்பார்.
தற்போதைய நிலையில் பள்ளி திறப்பது என்பது சாத்தியமல்ல..
* திரைப்படங்களுக்கான மத்திய அரசின் விருது அறிவிப்பு:
தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு.
பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசு விருது.
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ஹவுஸ் ஓனர் படமும் விருதுக்கு தேர்வு.
* சென்னை தி.நகரில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை கொள்ளை:
மொத்த வியாபாரம் செய்யும் நகைக்கடையில் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் விசாரணை.
செல்போன்களை ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரியை கடத்தி ரூ. 10 கோடி மதிப்பு செல்போன்கள் கொள்ளை.
ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி சம்பவம். மர்ம நபர்களுக்கு போலீசார் விலைவீச்சு.
சென்னையில் உள்ள நிறுவனத்தில் இருந்து செல்போன்கள் லாரியில் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்ட போது கொள்ளை.
* கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்த காலக்கெடு:
பணம் செலுத்தாமல் இருப்பவர்களுக்கு அரசின் சலுகைகள் அனைத்தும் ரத்து என அறிவிப்பு.
கடலூர் மாவட்டத்தில் 14.26 கோடி ரூபாய் அளவிற்கு கிசான் திட்டத்தில் மோசடி.
கடலூர் மாவட்டத்தில் 12 கோடி ரூபாய் அளவிற்கு பணம் வசூல்
பணத்தை வசூல் செய்யும் பணியில் வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் தீவிரம்.
கடலூர் மாவட்டத்தில் இதுவரை 13 பேரை கைது செய்துள்ளது சிபிசிஐடி.
* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.37,640க்கு விற்பனை.
கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ரூ.4,705க்கு விற்பனை.
* அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார் - ஸ்டாலின்.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரம்.
மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு ஸ்டாலின் கடிதம்.
7.5% உள் ஒதுக்கீடு மசோதா தொடர்பாக அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார் - ஸ்டாலின்.
* அல்லும் பகலும் மக்கள் பணியாற்றிடும் காவல்நண்பர்களின் உன்னத தியாகத்தை நினைவு கூர்கிறேன்- முதல்வர் பழனிசாமி.
சமூகத்தின் பாதுகாவலன், மக்களின் உற்ற தோழன், அர்ப்பணிப்பின் இலக்கணம் காவல்துறையினர்
தமிழகத்தில் நாளைமுதல் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி
தமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு, நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறக்க அனுமதி -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
* மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் - மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்.
மத்திய அரசுக்கு ரூ.3737 கோடி செலவு ஏற்படும். நாடு முழுவதிலும் உள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவர் - மத்திய அரசு.
* மக்கள் அழைக்கும் போது விஜய் அரசியலுக்கு வருவார் - எஸ்.ஏ.சந்திரசேகர்.
எனக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது அதை வலுப்படுத்துகிறேன்.
விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும்.
நடிகர்களின் சுதந்திரத்தை தடுக்க முடியாது.
பாஜகவில் இணையப்போகிறோம் என்ற கருத்துக்கே இடமில்லை - எஸ். ஏ. சந்திரசேகர்
* திண்டுக்கல் மாவட்டம் பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட முதல்வர் பழனிசாமி உத்தரவு.
அக்.25 முதல் 2021 மார்ச் 3 வரை 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவதால் 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
* தனியார் பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்தும்படி உத்தரவிடக் கோர முடியாது-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
கல்லூரிகள் தாமாக முன் வந்து நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் சமர்ப்பிக்க எந்த தடையும் இல்லை - உயர் நீதிமன்றம்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கூடுதலாக ஒதுக்கும்படி கல்லூரிகளை நிர்பந்திக்கவில்லை - தமிழக அரசு.
அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதல் இடங்களை ஒப்படைக்க நிர்பந்திக்க கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கு முடித்து வைப்பு.
* ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்தி விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிடலாம்-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
‘சக்ரா' படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை விதிக்கக்கோரி ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு.
* புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகளை துவக்கியது பல்கலைக்கழக மானியக் குழு.
தமிழகத்தில் பள்ளி கல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு ஒரு கூட்டம் மட்டுமே நடத்தி இருக்கிறது.
ஒரு ஆண்டுக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள் கருத்துகள் அடிப்படையில் புதிய கல்வி கொள்கையை இறுதி செய்யும் பணி தீவிரம்.
உயர்கல்வி நிறுவனங்கள் நிர்வாக சீரமைப்பு பணிகளை ஆரம்பிக்குமாறு பல்கலை. மானிய குழு உத்தரவு.
* தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் பெறுவதற்கு மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு துவங்கும் நடைமுறையை துரிதப்படுத்துவது எப்படி?
கணக்கு தொடங்க என்ன நடைமுறை ஏற்படுத்தப்படும் என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம்.
90 லட்சம் விவசாயிகளை உறுப்பினர்களாக்க வேண்டியுள்ளதால் நடைமுறையை துரிதப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
விவசாய கடன் பெற மத்திய கூட்டுறவு வங்கி கணக்கு தொடங்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கு அக்டோபர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
* சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ, காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியின்போது இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த பிராவோ, ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை.
இந்நிலையில், தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்தும் பிராவோ விலகியுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
* தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்.
தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவதில் ஒத்துழைப்பு வழங்குமாறு அரசியல் கட்சிகளுக்கு கடிதம்.
விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை - தேர்தல் ஆணையம்.
* முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழுவின் 3வது கூட்டத்தில் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பூர், கோவை, நாமக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
26 தொழில் திட்டங்கள் மூலம் ரூ.25,213 கோடி முதலீட்டில், சுமார் 49 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
* விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது- மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு.
இங்கிலாந்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான தடை நீங்குகிறது.
தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையம் அதிரடி தீர்ப்பு.
38 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் விடுதலை புலிகள் மீதான தடை தவறானது என கூறப்பட்டுள்ளது.
இதனால் இங்கிலாந்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான தடை விரைவில் நீங்கும்.
* மத்திய அரசின் கையிருப்பிலிருந்து வெங்காயம் சந்தைக்கு வழங்கப்பட்டது.
வெங்காய விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை.
நாடு முழுவதும் சில்லரை வணிகர்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை"
வரும் நாட்களில் கூடுதல் வெங்காயம் சந்தைக்கு வழங்கப்படும் என மத்திய அரசு தகவல்.
வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான
கட்டுப்பாடுகளையும் டிச.15 வரை தளர்த்தி மத்திய அரசு உத்தரவு.
* தமிழக தலைமையிட ஏடிஜிபியாகப் பதவி வகிக்கும் கந்தசாமி டிஜிபியாகப் பதவி உயர்வு.
சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் டிஜிபியாகப் பதவி உயர்த்தப்பட்டு சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக நியமனம்.
அமலாக்கத்துறை கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் டிஜிபியாகப் பதவி உயர்வு.
*;வெங்காய விலையைக் குறைக்க போர்க்கால நடவடிக்கை தேவை - திமுக தலைவர் ஸ்டாலின்
வெங்காயத்தை முழுவீச்சில் கொள்முதல் செய்து, நியாயமான விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதுக்கப்பட்டதால்தான் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு.
வேளாண் சட்டங்கள் அமலானால், பதுக்கல் அதிகரித்து விலை எவ்வளவு வேண்டுமானாலும் உயரும்.
வேளாண் சட்டத்தை அ.தி.மு.க. அரசு அனுமதிக்கக் கூடாது - ஸ்டாலின்.
* அண்ணாமலை பல்கலைகழக வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்ட மற்றும் பட்டய படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு.
* கடலூர்; சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்ட மற்றும் பட்டயப் படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
அனைத்து விவசாய, தோட்டக்கலை பட்ட மற்றும் பட்டய படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 27ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும்.
இதற்கான விபரங்கள் இரண்டு தினங்களில் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annamalaiuniversity.ac.in) வெளியிடப்படும்.
விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக இணையதளத்தை பார்வையிட்டு அறிவிப்புகளை அறிந்து கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்-பல்கலைக்கழக பதிவாளர்.
* நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்த விவகாரத்தில் தொடர்புடைய நபர், இலங்கையில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
"800 "என்ற பெயரில் தயாராகும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது.
இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமூக வலை தள ங்களில் கருத்துக்கள் பதிவிட்ட போது, நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ரித்திக் என்ற பெயரில் ட்விட்டரில் ஒரு நபர், ஆபாச மிரட்டல் விடுத்திருந்தார்.
ஐ.பி முகவரி மூலம் நடத்தப்பட்ட விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர், இலங்கையில் இருப்பது தெரிய வந்துள்ளதாக சென்னை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
மத்திய அரசு மூலம் "இன்டர்போல்" உதவியுடன் குற்றவாளியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக, போலீசார் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment