அக்னிப்புரட்சி இன்றைய 23.10.2020) முக்கிய செய்திகள்: - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய 23.10.2020) முக்கிய செய்திகள்:

Share This

அக்னிப்புரட்சி இன்றைய 23.10.2020) முக்கிய செய்திகள்:

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,03,250 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 844 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,94,139 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 33 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 10,858 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 4,262 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,59,432 பேர் குணமடைந்துள்ளனர்.

* சென்னையில் 22 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.

* விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு.

சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய வீடியோ - பல்வேறு தரப்பு புகாரின் பேரில் நடவடிக்கை.

* சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு:

அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.

சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதன்முறையாக தேர்வு நடைபெற்று 19 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

* பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, இன்று(அக்.,23) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

பொது தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ், இன்று வழங்கப்பட உள்ளது.

பள்ளிகளில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, மாணவர்கள் அல்லது பெற்றோரை வரவைத்து, சான்றிதழ்களை வழங்க, அரசு தேர்வுத் துறை அறிவுறுத்தி உள்ளது.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,680க்கு விற்பனை.

* புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்ட முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

ரூ.119.21 கோடி மதிப்பில் செங்கல்பட்டு, ரூ.104 கோடியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது.

5 புதிய மாவட்டங்களில் தென்காசிக்கு மட்டும் ஆட்சியர் அலுவலகம் கட்ட இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை.

* வெங்காய விலை உயர்வு - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம்:

வெங்காய விலை உயர்வு தற்காலிகமானது தான் வெங்காயம் அறுவடை பகுதியில் பெய்து வரும் மழையால் தற்போது விலை உயர்வு.

விலை உயர்வு தொடரும் பட்சத்தில் ரேஷனில் வெங்காயம் விற்க நடவடிக்கை - அமைச்சர் காமராஜ்.

* பீகார் சட்டமன்ற தேர்தல் - பிரசாரத்தை தொடங்கிய பிரதமர்;

கொரோனாவிற்கு எதிராக பீகார் தைரியமாக போராடி வருகிறது.

பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

இந்தியாவின் வளர்ச்சியில் பீகார் முன்னணியில் இருக்கிறது.

இருளில் இருந்து மீண்ட பீகார் மக்கள் மீண்டும் இருளுக்கு செல்லமாட்டார்கள்.

பீகாரில் முந்தைய அரசுகள் ஊழல் வாய்ந்த அரசுகளாக இருந்தன.

நிதிஷ்குமார் ஆட்சியில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி.

* விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் கொலை முயற்சி வழக்கு:

வி.கே.டி.பாலன் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.

1985ல் பாலசிங்கத்தை கொல்ல முயன்றதாக சிபிசிஐடி பாலன் உள்பட 7 பேர் மீது வழக்கு. வி.கே.டி.பாலன் மீதான வழக்கு - தள்ளுபடி செய்ய மறுப்பு.

30 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாத இந்த வழக்கை ரத்து செய்ய கோரி பாலன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

* ஆளுநரை நிர்பந்திக்க முடியாது":
ஒரு அறைக்குள் நடந்த விவாதத்தை வெளியில் சொல்ல முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்.

7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் தர ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார் - அமைச்சர் ஜெயக்குமார்.

ஆளுநர் எந்த நிர்பந்தமும் விதிக்கவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆளுநர் வலியுறுத்தவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்.

* புறநகர் ரயில் - முதலமைச்சர் கடிதம்:
சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும்.

ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.

ஏற்கனவே செப்டம்பர் 2ஆம் தேதி கோரிக்கை விடுத்ததை சுட்டிக்காட்டி முதலமைச்சர் கடிதம்.

பொருளாதாரம் மீண்டெழ உதவும் எனவும் கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

* பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் மதியம் 2 மணி வரை மாதவரம் தற்காலிக பழச்சந்தை இயங்கும் என அறிவிப்பு!

* தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.28 முதல் தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்

வடதமிழகத்தில் இயல்பாகவும், தென் தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகவும் பருவமழை இருக்கும் என கணிப்பு.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் முடிந்ததும் வடகிழக்கு பருவமழை துவங்கும்.

அடுத்த 24 மணிநேரத்தில் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு.
- பாலச்சந்திரன், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்.

* விருதுநகர்; பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.

முருகநேரி அருகே தாலிகுளத்துப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் உயிரிழப்பு. வெடிவிபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு.

* எங்கு சென்றாலும் பொய் மட்டுமே சொல்கிறார் பிரதமர் மோடி.

விவசாயி, தொழிலாளரை ஆதரிப்பதுபோல் பேசும் மோடி உண்மையில் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால் லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் நிலை உருவாகி உள்ளது - ராகுல் காந்தி.

* கட்சி மாறிச்செல்வதை விமர்சிக்கும் தலைவர், பெண்கள் குறித்து இழிவாகப் பேசுவதை கண்டிக்காதது ஏன்?  - குஷ்பு.

பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாகச் சொல்லும் திமுக வாய்திறக்காதது ஏன்?

பெண்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் - குஷ்பு.

* சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஷாப்பிங் செல்ல ஏதுவாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

அக்.24,26, 31, நவ.1, 7,8 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என  போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.

* தனது உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் கவுண்டமணி புகார்.

* புதுச்சேரியில் கடைகள், ஓட்டல்கள், மதுக்கடைகள் இன்று முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி.

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து கடை திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* கபில்தேவுக்கு திடீர் நெஞ்சுவலி:டெல்லி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை.

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஞ்சியோ பிளாஸ்ட்டி செய்யப்பட்டது.

டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கபில் தேவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1983ல் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாக இருந்தவர்.

* கர்நாடகாவில் நவம்பர் 17 முதல் கல்லூரிகளை திறக்க அனுமதி - முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

* கொரோனா மற்றும் 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதில்:

“மக்கள் ஆதரவு பெருகி வருகிறதே என்ற அச்சத்தில் அறிக்கை அரசியல் நடத்துகிறார் ஸ்டாலின்"

“ஸ்டாலினின் நீலிக் கண்ணீர் மக்கள் மனங்களில் சலனத்தை ஏற்படுத்தாது"

“வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில் தங்களால்தான் எல்லாம் நடந்தது என காண்பிக்க முயற்சிக்கிறார் ஸ்டாலின்"

7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் விரைவில் முடிவு செய்வதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

“நீட் தேர்வை இந்தியாவில் அறிமுகம் செய்து மாணவர்களுக்கு துரோகம் செய்தது திமுக, காங்கிரஸ் கட்சிகள்தான்"

* மதுரை மாவட்டம் முருகனேரி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம்"

படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம்"-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

“பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில்
ஊழியர்கள் பாதுகாப்பை அந்தந்த மாவட்ட  ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்"

பட்டாசு ஆலை விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது - முதலமைச்சர்.

*:லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ 84,000 பணம் பறிமுதல்:

கடலூர் அருகே கோதண்டராமபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை கண்காணிப்பாளர் மெல்வின் ராஜசிங் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை.

கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கு பணம் வாங்குவதாக வந்த புகாரைத் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ84,000 ரூபாய் பறிமுதல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages