அக்னிப்புரட்சி இன்றைய (24.10.2020) முக்கிய செய்திகள்.
* உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 4,24,61,333 பேர் பாதிப்பு:
3,14,14,076 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 98,98,563 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 11,48,694பேர் மரணமடைந்துள்ளனர்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,06,136 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 779 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,94,901 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 35 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 10,893 ஆக உயர்வு. தமிழகத்தில் ஒரே நாளில் 4,024 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,63,456 பேர் குணமடைந்துள்ளனர்.
* சென்னையில் 23 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* மதுரை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு:
செங்குன்றத்தில் ராஜலெட்சுமி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு 7 ஆக அதிகரித்துள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் தொழிலாளர்கள் லட்சுமி, மகாலட்சுமி இறந்தனர்.
வெடி விபத்தில் படுகாயம் அடைந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* அரசியலுக்கு ஆயத்தமா? - நடிகர் விஜய் ஆலோசனை.
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை.
சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை.
திருச்சி, மதுரை, குமரி மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
* வருகிற 28ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை:
மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை.
பண்டிகை காலத்தையொட்டி தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை.
* மதுரை: மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது சிலைக்கு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மரியாதை:
அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்பு.
* 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை முன்பு திமுக ஆர்ப்பாட்டம்.
ஸ்டாலின் தலைமையில்
திமுக கண்டன ஆர்ப்பாட்டம்.
பாதுகாப்பு பணியில் இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் தலைமையில் 1000 போலீசார் குவிப்பு.
* ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் ஆயுத பூஜை வாழ்த்து;
தமிழக மக்களுக்கு அதிமுக தலைமை கழகம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்து.
மக்கள் அனைவரும் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துக்கள் - ஓ.பிஎஸ், ஈ.பிஎஸ்.
* மனுதர்மம் குறித்து பேசிய விவகாரத்தில் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு - காவல்துறைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்.
திருமாவளவன் கருத்தை திரித்து கூறியவர்கள் மீது வழக்குப்பதியாதது ஏன்?- ஸ்டாலின்.
திருமாவளவன் மீது வழக்கு- காவல்துறையின் பாரபட்சமான அணுகுமுறை.
பெண்களின் உரிமைகள் பல்லாண்டுகளாக மறுக்கப்பட்டு வந்ததை மேற்கோள்காட்டி திருமாவளவன் பேசினார்.
திருமாவளவன் மீதான பொய் வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும்- ஸ்டாலின்.
* அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
26, 27, 28 ஆகிய தேதிகளில் 13 தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல்.
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.
* 2 கோடி ரூபாய் வரை சிறிய அளவிலான வங்கி கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை-மத்திய அரசு அறிவிப்பு
வீடு, வாகனம், தனிநபர், கல்விக் கடன் பெற்றவர்களுக்கு பொருந்தும் - மத்திய அரசு.
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்தது மத்திய அரசு.
கொரோனா காலத்தில் மாத தவணை செலுத்துவதில் விலக்கு பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதித்த விவகாரம்.
* இந்தியா முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனைக்கு மத்திய அரசு தடை.
உள்நாட்டு தயாரிப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடியின் பிரச்சாரத்திற்கு ஆதரவாக முப்படை உயர் அதிகாரிகள் ஒப்புதலோடு உத்தரவு.
*:கோவை: கோவையில் பட்டாசு கடை அமைக்க ரூபாய் 6,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அதிகாரி சசிகுமார் கைது செய்யப்பட்டார்.
மதனவேல் என்பவரிடம் லட்சபணத்தை பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
* கோயம்பேட்டில் திறக்கப்படாமல் உள்ள கடைகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து காய்கறி வணிக வளாக வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் திரு.G.D.ராஜசேகர் அவர்கள் வெளியிட்டுள்ள காட்சிப் பதிவு!
* 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில், காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுக நாடகம் ஆடி வருகிறது - அமைச்சர் ஜெயக்குமார்.
7.5% இட ஓதுக்கீட்டுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று தெரிந்துதான் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் - ஜெயக்குமார்.
ஆளுநர் தேவையில்லை என்று சொல்பவர்கள், ஆட்சியில் இருந்தபோது ஏன் அந்தப் பதவியை ஒழிக்கவில்லை? - அமைச்சர் ஜெயக்குமார்.
* தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்பபாட்டம்.
சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
மனு தர்மம் நூலைத் தடை செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சினர் ஆர்ப்பாட்டம்.
* ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு.
இன்றுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், 9 வது முறையாக கால நீட்டிப்பு-தமிழக அரசு உத்தரவு.
2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதித்ததால், கடந்த 21 மாதங்களாக விசாரணை நடைபெறாமலேயே காலநீட்டிப்பு.
* அரசியல் ஆதாயத்துக்காக என் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர்!" - திருமாவளவன்.
“பெண்களை இழிவுபடுத்தியது மனுதர்ம நூலா? திருமாவளவனா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்!” - திருமாவளவன்.
“மனுதர்ம நூலில் சொன்னதையே தாம் மேற்கோளிட்டதாக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்யும் வரை போராட்டம் தொடரும்!” - திருமாவளவன்.
* வருமான வரி தாக்கல் செய்ய மேலும் கால நீட்டிப்பு.
வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசத்தை மேலும் நீட்டித்து அடுத்த வருடம் ஜனவரி 31ம் தேதி என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
* ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு':
சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு.
போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 3,500 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு.
*சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு 2 டி.எம்.சி.யை எட்டியது
சென்னை: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு 2 டி.எம்.சி.யை எட்டியது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 580 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 3.64 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி மழை காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது.
* காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அக்.30-ம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு*
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அக்.30-ம் தேதி மிலாது நபியை முன்னிட்டு மதுக்கடைகளை மூட காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம், செங்கை மாவட்டங்களில் மிலாது நபி வரும் அக். 30-ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி அன்றைய தினத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களை மூட வேண்டும் என அந்த அறிக்கையில் ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
*மீண்டும் 100 அடியை நெருங்கியது மேட்டூர் நீர்மட்டம்
சேலம்: தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் 99.39 அடியாகவும், நீர்இருப்பு 64.05 டிஎம்சியாகவும் இருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 17,129 கனஅடியிலிருந்து 18,694 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்தேவைக்காக டெல்டாவுக்கு 9,000 கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 800 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
*இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதல்: 2 பேர் பலி; 3 பேர் காயம்
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தேனி மெயின் ரோடு தொட்டப்பநாயக்கனூர் விலக்கில் வெள்ளிக்கிழமை இரவு மினி லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர்.
தேனி அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முருகன்(50), உசிலம்பட்டி வெள்ளை மலைபட்டியைச் சேர்ந்த வெள்ளைச் சாமி மகன் விவித் (25) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழை இரவு 11 மணியளவில், உசிலம்பட்டி தேனி மெயின் ரோடு தொட்டப்பநாயக்கனூர் விலக்கு பகுதியில்
சென்றுகொண்டிருந்த போது, மதுரையில் இருந்து கடமலைக்குண்டுக்கு சென்றுகொண்டிருந்த மினி லாரியும் நேருக்கு நேர் மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற முருகன், விவித் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
மினி லாரி கவிழ்ந்ததில் லாரியில் இருந்த தேனி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த செல்வமணி (14),கோவிந்தராஜ்(45), பெருமாள்(30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த மூவரும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து சிலம்பட்டி தாலுகா காவல்நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*கும்பகோணத்தில் வழக்கறிஞர் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது
கும்பகோணம்: கும்பகோணத்தில் வழக்கறிஞர் காமராஜ், அவரது நண்பர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 19ல் நடந்த இரட்டை கொலை வழக்கில் லோகேஷ், சேது முருகன், அன்சாரி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
*ஆயுதபூஜை சிறப்பு தினத்தையொட்டி பூக்களின் விலை 5 மடங்கு அதிகரிப்பு
சென்னை: ஆயுதபூஜை சிறப்பு தினத்தையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை 5 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ.70க்கு விற்கப்பட்ட அரளி பூ தற்போது ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரோஜா ரூ.100ல் இருந்து ரூ.350க்கும், சம்பங்கி ரூ.150ல் இருந்து ரூ.400க்கும் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
*சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு 2 டி.எம்.சி.யை எட்டியது
சென்னை: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு 2 டி.எம்.சி.யை எட்டியது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 580 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 3.64 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி மழை காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது.
*சென்னையில் அக்டோபரில் கொரோனா பாதிப்பு குறைவு
சென்னையில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்களை ஒப்பிடுகையில், கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் முதல் கொரோனா தடுப்புப் பணிகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து அதற்கான பணிகள் ஒவ்வொரு மண்டலத்திலும் நடைபெற்றுவருகின்றன.
கொரோனா தடுப்புப் பணிக்காக காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடமாடும் மருத்துவ மையங்கள் எனப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சென்னையில் மார்ச் மாதம் 20 ஆம் தேதி வரை ஆறு பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அதுவே ஜூன் 20 ஆம் தேதி 41 ஆயிரமாக இருந்தது.
நோய்த்தொற்று பாதிப்பு ஜூன் 20 ஆம் தேதி 41 ஆயிரத்தையும் கடந்தது. தீவிர தடுப்புப் பணிகள், சிகிச்சைகள் காரணமாக படிப்படியாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அக்டோபர் மாத ஆரம்பத்தில், 1200 வரை நாள்தோறும் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அது தற்போது 800 ஆக குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதி வரையில் நோய்த்தொற்றைக் கணக்கிடுகையில் அக்டோபரில் அது வெகுவாக குறைந்துள்ளது.
நோய்த்தொற்று குறைந்துவந்தாலும், அடுத்துவரும் பண்டிகை நாள்களில் வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் அதிக மக்கள் கூடுவார்கள். அதனால் மீண்டும் நோய்த்தொற்று அதிகரித்துவிடாமல் தடுக்க அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொய்வின்றி கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
* தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம்: 6 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இடம் மாற்றம்.
நிதித்துறை இணை செயலாளர் அரவிந்த், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக நியமனம்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மதுரை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம்.
பட்டுப்பூச்சி வளர்ச்சித்துறை இயக்குநர் வெங்கட பிரியா பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்.
No comments:
Post a Comment