அக்னிப்புரட்சி இன்றைய (26.10.2020) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,708 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,11,713 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 747 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,96,378 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 32 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 10,956 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 4,014 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,71,489 பேர் குணமடைந்துள்ளனர்.
* சென்னையில் 25 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* தமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.
இப்பணியிடத்துக்கு இணையவழி வாயிலாக மட்டுமே www.tnusrbonline.org விண்ணப்பிக்க முடியும்.
இதர வழியில் விண்ணப்பபடிவம் மற்றும் தட்டச்சு படிவம் மூலமாக விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.
எழுத்து தேர்வு டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது.
* ராஜராஜ சோழன் 1035ஆவது சதய விழா- தமிழில் வழிபாடு:
தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு தமிழில் தேவாரம், திருமுறைப்பாடி வழிபாடு நடந்தது.
மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவில் முதல்முறையாக தமிழில் வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.
* இது ஒரு விளையாட்டு! யாரும் தோற்றுப்போக விரும்பமாட்டார்கள், ஆனால் அனைவரும் வெற்றியாளர்களாக இருக்க முடியாது
அவர்கள் எப்போதும் நம் இதயத்தில் super kings ஆக இருப்பார்கள்
- சாக்ஷி தோனி கருத்து
* வெறுப்பு அரசியல் எல்லை மீறிவிட்ட நிலையில், இந்த இழிந்த அரசியல் களத்தை விட்டே முற்றாக விலகிவிடுவதுதான் நல்லது என்ற எண்ணம் என்னுள் எழுகிறது
தமிழருவி மணியன், காந்திய மக்கள் இயக்கம்.
* இன்று இராச ராச சோழனின் சதய விழா: தஞ்சை விழாக் கோலம் பூண்டுள்ளது!
இராஜராஜ சோழனின் 1035வது சதய விழாவான இன்று மூலவரான பெருவுடையாருக்கும், இன்னபிற தெய்வங்களின் கருவறைகளிலும் தமிழில் வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் உறுதி அளித்து இருந்தார். அதன்படி இன்று மூலவரான பெருவுடையாரின் கருவறையில் தேவாரம் திருவாசகம் ஓதி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி எங்கள் தொகுதி; இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடும்- கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்.
* அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு - மருத்துவமனை வட்டாரம் தகவல்.
சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சை.
துரைக்கண்ணுவின் உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பு.
கடந்த 13ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் துரைக்கண்ணு.
பரிசோதனையில் அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதியானது.
எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவி உதவியுடன் துரைக்கண்ணுவிற்கு சிகிச்சை.
* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,704க்கு விற்பனை.
* 50% இட ஒதுக்கீடு உச்சநீதிமன்றம் கை விரித்தது.
மருத்துவ படிப்பில் தமிழக ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு.
நடப்பு ஆண்டிலேயே செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு-உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
* அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
மருத்துவப்படிப்பில் 50% ஓபிசி இடஒதுக்கீட்டை பெற பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி அழுத்தம் தரவேண்டும்.
இந்தாண்டு இடஒதுக்கீடு வழங்காவிட்டால் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என முதல்வர் அறிவிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்.
உயர் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் காட்டிய அவசரத்தை ஓபிசி பிரிவினருக்கும் காட்ட வேண்டும்.
ஓபிசிக்கான இடஒதுக்கீட்டை மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது சமூக நீதி வரலாற்றில் கரும்புள்ளி- மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்.
* மிருகத்தனமாக போலீஸ் தாக்கியதால் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் உயிரிழந்து உள்ளனர்” - சிபிஐ.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் ரத்தம் படிந்த துணிகளை தூய்மைப்படுத்தி தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி.
இருவரின் ரத்தக் கறைகளும் காவல் நிலைய சுவர்கள், மேஜைகள், லத்திக் கம்புகள், கழிவறைகளில் படிந்துள்ளது சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ அறிக்கை.
* விசிக தலைவர் திருமாவளவனை முற்றுகையிட்டு போராட முயற்சி : பாஜக - விசிக இடையே கைகலப்பு.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் திருமாவளவனை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்ப முயன்ற பா.ஜ.க.வினருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தியதாக கூறி கந்தசாமியூரில் நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்க வந்த அவரை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் முழக்கங்களை எழுப்ப முயன்றனர்.
இதனை அறிந்து, விசிகவினரும் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால், இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. வாகனங்கள் மீது கற்கள் மற்றும் செருப்பை வீசி தாக்கிக்கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோதலை விளக்கி, திருமாவளவனை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
பா.ஜ.க.வை சேர்ந்த 15 பேரையும் கைது செய்தனர்.
* மருத்துவப் படிப்பில் 50% இட ஒதுக்கீடு நடப்பாண்டில் மறுக்கப்பட்டதற்கு பாஜக அரசே முழு பொறுப்பு - விசிக தலைவர் திருமாவளவன்.
இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில் தமிழகத்தின் ஒருமித்த நிலைபாட்டை மத்திய அரசுக்கு உணர்த்த உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - திருமாவளவன்.
மருத்துவப் படிப்பில் நடப்பாண்டில் 50% இடஒதுக்கீடு வழங்குவதற்கு மறுத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது - டிடிவி தினகரன்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்றுவதற்கு அரசு இனியாவது அக்கறையோடு செயல்பட வேண்டும் - தினகரன்.
தமிழகத்தில் இருந்து நேரடியாக காய்கறி கொள்முதல் செய்ய அனுமதி கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்.
வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்.
* தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடமாக உள்ளதாக காவிரி மருத்துவமனை அறிக்கை. பல்வேறு பிரச்னைகள் உள்ளதால் உடல் உறுப்புகள் செயல்பட மறுக்கிறது.
* ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் - ஸ்டாலின்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடிதம்.
ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடை முறைப்படுத்தப் படாதது ஏமாற்றம் அளிக்கிறது.
ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கல்வி கேள்விக்குள்ளாகும்.
50% இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் - தீர்வு காண வேண்டும் - ஸ்டாலின் கடிதம்.
* குஷ்பு ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் தடை:
சிதம்பரத்தில் நாளை திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை.
குஷ்பு, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் காவல்துறை தடை விதித்துள்ளது.
No comments:
Post a Comment