அக்னிப்புரட்சி இன்றைய (28.10.2020) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,16,751 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 688 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,97,751 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 35 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 11,018 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 4,859 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,79,377 பேர் குணமடைந்துள்ளனர்.
* மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னையில் 27 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும்.
மாணவர்கள் dge.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
* பீஹார் முதல்கட்ட தேர்தல்: ஓட்டுப்பதிவு துவங்கியது.
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பு.
வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.
6 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
1066 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களத்தில் உள்ளனர்.
2.14 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்கின்றனர்.
* தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை பணியமர்த்தும் போது அரசின் அனுமதியை கட்டாயம் பெற்றிருத்தல் வேண்டும் என்று கூடுதல் தலைமை செயலாளர் ஆணை
* சென்னை அண்ணா அறிவாலயத்தில் வடக்கு மண்டல நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை.
ஆலோசனைக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்பு.
* வட கிழக்கு பருவமழை இன்று தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது"
“நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகி விட்டது"-இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
* விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்றுமுதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி - மாவட்ட நிர்வாகம்.
* ஏற்காடுக்கு மீண்டும் பேருந்து:
கொரோனா ஊரடங்கால் 8 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த ஏற்காடுக்கான அரசு பேருந்து சேவை, பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று மீண்டும் தொடக்கம்.
* உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்; முதல்வர் அய்யா உதவ வேண்டும்!’- இயக்குநர் சீனு ராமசாமி.
“என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்" தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை உள்ளிட்ட படங்களின் இயக்குனர் சீனு ராமசாமி ட்வீட்.
* உங்கள் போன் தொலைந்து விட்டதா? இருக்கும் இடத்தை கண்டறியலாம்!
வந்துவிட்டது Google Find Device App
Watch a video about finding your device https://youtu.be/Kic-A51Wqgk
* மதுரையில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம்.கடோச் நியமனம்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் அரசிதழில் வெளியீடு.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக தற்போது கடோச் பணியாற்றி வருகிறார்.
* கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை:
வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து ஆலோசிக்கப் படுகிறது.
மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக்கு பிறகு மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர்.
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா? முதல்வர் ஆலோசனை.
ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்ட போதிலும் சில கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது குறித்து முதலமைச்சர் முக்கிய ஆலோசனை.
* தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது - வானிலை ஆய்வு மையம்.
தமிழகம், கேரளாவில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியது.
வடகிழக்கு பருவமழையால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்
திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
* மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு - சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரி மக்கள் நீதி மய்யம் வழக்கு.
பொது நல மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல். பொது நலம் சார்ந்த விவகாரம் என்பதால், ரிட் மனுவை வாபஸ் பெறவும் அனுமதி.
* குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிப்பு:
கடலூர்: குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பெயர் மாற்றி வெற்றி அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு.
குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக ஒரு வாரத்திற்குள் மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
பெயர் குழப்பத்தால் தோல்வியடைந்த விஜயலட்சுமி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சை எழுந்தது. இருவருமே பதவி ஏற்க முடியாமல் இருந்த நிலையில் இன்று நீதிமன்றம் உத்தரவு.
* தமிழகத்தில் 22 இடங்களில் வருமானவரி சோதனை:
ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை.
கோவை அன்னூரில் திமுக மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை.
* மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி குறித்தும் கணக்கெடுக்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு.
ஓபிசி குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள மத்திய அரசுக்கு என்ன தயக்கம்? - உயர்நீதிமன்ற மதுரை கிளை.
* சென்னை: தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை:
ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பிறகு, மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை.
தமிழகத்தில் வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து ஆலோசனை.
சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு:
தமிழகத்தில் வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
* காமராசர் பல்கலை. துணைவேந்தர், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு:
தொலைதூர கல்வி தேர்வு முறைகேடு புகாரில் சிபிசிஐடி விசாரணை கோரிய வழக்கில் உத்தரவு.
* தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகளின் அதிர்ச்சி.
39 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 22 சதவீதம்(8,000) மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி.
40 ஆயிரம் பேர் 12ம் வகுப்பு தனித்தேர்வில் 12 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் 9 பேரை கிணற்றில் தள்ளி கொலை செய்தவருக்கு தூக்கு -வாரங்கல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
கடந்த மே 20ஆம் தேதி சாக்கு குடோனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரை கிணற்றில் தள்ளி கொலை.
குற்றவாளி சஞ்சய்-க்கு தூக்கு தண்டனை விதிப்பு.
* 2021ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு.
அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை.
* பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்:
பாஜக மகளிரணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் - பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவிப்பு.
* பாலியல் பலாத்காரம் செய்து 2 பெண்களை கொன்ற வழக்கில் 5 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை-விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
2012, 2014 ஆம் ஆண்டுகளில் 2 பெண்களை பலாத்காரம் செய்து கொன்றதாக 5 பேர் மீது வழக்கு.
5 பேர் மீதும் நகைகளை கொள்ளையடித்ததாக வழக்கு - சிபிசிஐடி விசாரணை நடத்தியது.
* நவ. 7ம் தேதி பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்.
ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-49.
* உடற்கல்வி ஆசிரியர்களுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் பணி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியீடு.
காலி பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மற்றும் இதர விதிகள் அடிப்படையில் 551 பேர் தேர்வு.
நவ. 3 - 4ம் தேதிகளில் கலந்தாய்வு மூலம் அனைவருக்கும் பணி நியமன ஆணை - பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் .
* மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் குழு நியமனத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்.
எம்.பி.க்களை புறக்கணித்து விட்டு, பெண்ணினத்தை அவமதித்தவரை நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது.
நிர்வாகக்குழுவில் தமிழக எம்.பி.க்களுக்கு இடமளிக்க பிரதமருக்கு முதலமைச்சர் அழுத்தம் தர வேண்டும் - ஸ்டாலின்.
* சென்னை பல்கலைக்கழக அரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு:
ஏப்ரல் மாதத்தில் தேர்வெழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி.
மாணவர்கள் 1.2 லட்சம் பேர் தேர்ச்சி.
தமிழகத்தில் முதல் பல்கலைக்கழகமாக சென்னை பல்கலைக்கழகம் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கியுள்ளது.
* குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்-உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து.
போலீஸார் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தும் நிலை உள்ளது.
போலீஸாரின் நிலை ஆதரவற்றவர்கள் போல் உள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து.
No comments:
Post a Comment