அக்னிப்புரட்சி இன்றைய 30.10.2020) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,22,011 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 723 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,99,173 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 38 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 11,091 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 3,924 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,87,388 பேர் குணமடைந்துள்ளனர்.
* சென்னையில் 29 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* நபிகள் நாயகம் பிறந்தநாளாம் மிலாது நபி இன்று கொண்டாட்டம்: அமைதி-வளம் பெருகட்டும் என தலைவர்கள் வாழ்த்து.
மீலாது நபி பண்டிகை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா மருத்துவர் அன்புமணி இராமதாஸ் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர், வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
* மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை வரும் 16ந் தேதி திறப்பு:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவம்பர் 16-ம் தேதி முதல் தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
வார இறுதி நாட்களில் மேலும் ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கின் போது 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
சன்னதிக்கு வரும் பக்தர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை.
* தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை:
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜையையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை.
* வானில் 'புளூ மூன்’ தோன்றும் அரிதான நிகழ்வு நாளை நடக்க உள்ளது.
புளூ மூன் என்ற சொல் ஒரு மாதத்தில் வரும் இரண்டாவது பவுர்ணமியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கும் சந்திரனின் நிறத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும் சில சமயங்களில் பௌர்ணமி நிலவு நீல நிறமாக தெரியும்.
இதற்கு அறிவியல் ரீதியாக நீல நிலா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த 1ந்தேதி பவுர்ணமி வந்த நிலையில் நாளை இரண்டாவது பவுர்ணமி தோன்றுகிறது.
அடுத்த நீல நிலா, 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ல் ஏற்படும்
* மதுரை : தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை.
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜையையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை.
தேவர் ஜெயந்தி : பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை.
துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
* மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதித்து வருவதால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி.
தென் மாவட்டங்களில் பல தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவிரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்றுவதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி.
* மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்க அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் முதலமைச்சர் பழனிசாமி பேட்டி
தேவர் ஜெயந்தி : பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை.
* 7.5% இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தமிழக அரசு முன்பே அழுத்தம் தந்திருக்க வேண்டும். 7.5% இடஒதுக்கீடு அரசாணைக்கு நான் வரவேற்பு தெரிவித்துள்ளேன் - திமுக தலைவர் ஸ்டாலின்.
* வேலூர் மாவட்டத்தில் 3 டாஸ்மாக் கடைகளில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில்வராத 61 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக வந்த தொடர் புகாரை அடுத்து, வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை மற்றும் பென்னாத்தூரில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று இரவு 8 மணி முதல் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.37,872 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4,734 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளயின் விலை 90 காசுகள் அதிகரித்து ரூ.65.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்:
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு.
மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
செப்.26ஆம் தேதி சொலிசிட்டர் ஜெனரலிடம் கருத்து கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
சொலிசிட்டர் ஜெனரலிடம் இருந்து நேற்று ஆளுநருக்கு கருத்து வந்தது.
7.5% இடஒதுக்கீடு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்ட நிலையில் ஆளுநர் ஒப்புதல்.
* ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு:
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.
தமிழக அரசின் 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்த நிலையில் சந்திப்பு.
தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் ஆளுநருடன் சந்திப்பு.
No comments:
Post a Comment