அக்னிப்புரட்சி இன்றைய (31.10.2020) முக்கிய செய்திகள்
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,24,522 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 690 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,99,916 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 31 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 11,122 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 3,848 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,91,236 பேர் குணமடைந்துள்ளனர்.
* சென்னையில் 30 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை.
தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்பு - சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் படைப்பிரிவினர் அணிவகுப்பு.
* தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித் துள்ளார் சகாயம் ஐஏஎஸ்.
அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற 3 ஆண்டுகள் உள்ள நிலையில் 57 வயதிலேயே விஆர்எஸ் கேட்டுள்ளார்.
* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.38,080க்கு விற்பனை.
* தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மதுரை, விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பு.
தென்காசி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
* தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மிகவும் கவலைக்கிடம்
அதிகப்படியான உயிர் காக்கும் கருவிகளுடன் அமைச்சர் சிகிச்சை பெற்று வருகிறார் - காவேரி மருத்துவமனை
* புதுச்சேரிக்கு பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி:
இ-பாஸ் அனுமதி பெற தேவையில்லை என தமிழக அரசு அறிவிப்பு.
இ-பாஸ் இல்லாமல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கலாம் - தமிழக அரசு.
* நாமக்கல் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணியின்போது இடிந்து விழுந்தது அதிர்ச்சியளிக்கிறது.
விபத்து நடைபெறவில்லை என்றும் இடித்து தள்ளினார்கள் என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார்- டிடிவி தினகரன் ட்வீட்.
விபத்து நடக்கவில்லையெனில் ஆட்சியர் உள்ளிட்டோர் அங்கு சென்று பார்வையிட்டது ஏன்?- டிடிவி தினகரன் ட்வீட்.
* பொறியியல் கல்லூரிகளில் நடப்பு பருவத் தேர்வு ஆன்லைன் மூலமே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நடப்பு செமஸ்டருக்கான செய்முறைத் தேர்வுகள் நவம்பர் 17- ந் தேதியும், எழுத்து தேர்வு நவம்பர் 26-ந் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
60 மதிப்பெண்களுக்கான தேர்வு ஒரு மணி நேரத்திற்கு நடைபெறும் என்றும், தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்களும் ஆன்லைன் மூலமாகவே தேர்வு எழுத வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பரில் நடைபெற்ற இறுதி செமஸ்டர் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்போது மறு தேர்வு எழுதிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* நவ.16 முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்பட அனுமதி - தமிழக அரசு.
* லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் தேர்வில் விதிமீறல் இல்லை; இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
தமிழக லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் தேர்வு விதிமுறைப்படியே நடந்துள்ளது - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதில் மனு.
No comments:
Post a Comment