ஒவ்வொரு சமூகத்திற்கும் வாரியங்கள்: ஆந்திரத்தின் சமூகநீதிக் காவலர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் ரெட்டிக்கு - மருத்துவர் அய்யா பாராட்டி கடிதம்! - Agnipuratchi

ஒவ்வொரு சமூகத்திற்கும் வாரியங்கள்: ஆந்திரத்தின் சமூகநீதிக் காவலர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் ரெட்டிக்கு - மருத்துவர் அய்யா பாராட்டி கடிதம்!

Share This

ஒவ்வொரு சமூகத்திற்கும் வாரியங்கள்: ஆந்திரத்தின் சமூகநீதிக் காவலர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் ரெட்டிக்கு - மருத்துவர் அய்யா பாராட்டி கடிதம்!

ஆந்திரத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் 56 சமூகங்களுக்கு தனித்தனி வாரியங்களை அமைத்துள்ள ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்ரெட்டிக்கு  பா.ம.க. நிறுவனர்  மருத்துவர் அய்யா பாராட்டு தெரிவித்துள்ளார். சமூகநீதியை நிலை நிறுத்தும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் ஆந்திரத்தின் சமூகநீதிக் காவலராக  ஜெகன்மோகன் ரெட்டி  உருவெடுத்திருப்பதாகவும்  மருத்துவர் அய்யா அவர்கள் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்ரெட்டிக்கு  பா.ம.க. நிறுவனர்  மருத்துவர் அய்யா அவர்கள் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

Dear, Chief Minister of Andhra Pradesh, Shri Y S R Jaganmohan Reddy Garu,

I extend my congratulations to you on behalf of my Party (Pattali Makkal Katchi), as the State government of Andhra Pradesh, under your leadership, has successfully announced the establishment of 56 Backward Class corporations for the uplift ment of the Backward Classes and the list of chairpersons to head these corporations. I have learnt that, 29 corporations are going to be led by women(more than 50%) and 12 directors have been appointed for each corporation representing all 13 districts. I appreciate the fact that, you have taken this right decision, at the right time, to uphold social justice and ensure social development.

In the name of progressive thinking, in the cultural setting of pseudo political decency, where the caste is seen as a symbol of regressiveness, you have seen the caste as the foundation of social justice, and as an indicator of state’s development. This is called true revolution. Through this you have risen as the “Guardian of Social Justice” in the state of Andhra Pradesh. I am very proud & happy to confer the title of “Andhra Pradesh’s Guardian of Social Justice”.

The very foundational Principle of micro economics  states that development and progress may not be attained as a whole.

''Raising ridges raise water:
Raising water raise crops:
Raising crops raise the subjects:
Raising subjects raise the king"

- is a poem, authored by our Tamil poet Avvaiyar. Am sure that, You have lived up to her expectations by constituting 56 separate corporations for BC castes which have a population of more than 30,000, so that each corporation can micro manage a particular caste’s people and their needs. You have also announced that these corporations will receive funding to the tune of 75,000 crores in the span of five years, from the government. In that sense these are not only a social welfare measures but also an economic welfare measures.

I have learnt that, you have announced that these funds will be used to deliver government’s schemes and benefits to the beneficiaries, which includes pre and post-metric school fees reimbursement; rations through PDS; old age pensions and other healthcare benefits. I am sure that, through these activities, in the next few years, these backward communities will become poverty-free and debt-free.

It has also been announced that a loan of Rs. 18,750 will be provided to women between the age group of 45 and 60 from backward communities to start self-employment and to encourage them to start small businesses. There is no doubt that this will greatly help women from backward communities to achieve economic independence and respective families to achieve economic growth. These activities will not only lead to the advancement of individuals, including women from every community but also will pave way for the growth and progress of the society as a whole and it is sure that there will be overall development of the state.

The policy decision that you have taken to make Andhra Pradesh as an alcohol free state by 2024, is highly commendable, as this it has closed up to 40% of liquor stores in Andhra Pradesh. I strongly believe that this policy measure will pave way for social development and economic growth.

It is far-sighted to set up separate corporations for each community. I once again congratulate you for these landmark initiatives. I also urge you to continue to implement such visionary social justice initiatives and to promote and protect social justice in Andhra Pradesh.

கடிதத்தின் தமிழாக்கம்:

அன்புள்ள ஆந்திர முதலமைச்சர் மாண்புமிகு ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுக்கு,
வணக்கம்!

ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், ஆந்திராவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 56 சமூகங்களின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு சமூகத்திற்கும் வாரியம் அமைத்திருப்பதுடன், அவற்றில் 50%-க்கும் கூடுதலான வாரியங்களின் தலைவர்களாக பெண்களை நியமித்திருக்கிறீர்கள். இது சமூகநீதியையும், சமூக முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சரியான நடவடிக்கை ஆகும். இதற்காக  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தங்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.

முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் சாதிகளை பிற்போக்கின் அடையாளமாக பார்க்கும் போலி நாகரிக கலாச்சாரம் பெருகி வரும் சூழலில், சாதிகளை சமூகநீதியின் அடித்தளமாகவும், மாநில வளர்ச்சிக்கான அலகாகவும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இது தான் உண்மையான புரட்சியாகும். இதன் மூலம் நீங்கள் ஆந்திராவின் சமூகநீதிக் காவலராக உயர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு ‘ஆந்திராவின் சமூகநீதிக் காவலர்’ என்ற பட்டத்தை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் ஒட்டுமொத்தமாக ஈட்டி விட முடியாது. அது தான் நுண் பொருளாதாரத்தின் அடிப்படையாகும். ‘‘வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும், நெல்லுயரக் குடியுயரும், குடியுயரக் கோலுயரும், கோலுயரக் கோனுயர்வான்’’ என்பது தமிழ்ப்புலவர் ஔவைப் பாட்டியின் வாக்கு ஆகும். அதற்கு சிறந்த உதாரணமாகத் தான் தாங்கள் அறிவித்த ஒவ்வொரு சாதிக்குமான வாரியங்கள் அமைந்துள்ளன. 56 வாரியங்கள் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் அந்த சமுதாய மக்களின் நலனுக்காக ரூ.75,000 கோடி செலவிடப்படும் என்று அறிவித்திருக்கிறீர்கள். அந்த வகையில் இது சமூக நல நடவடிக்கை மட்டுமின்றி, பொருளாதார நல நடவடிக்கையுமாகும்.

சமூகம் சார்ந்த வாரியங்கள் மூலம் அரசின் நலத்திட்டங்கள் அந்தந்த சமூகங்களுக்கு வழங்கப்படும்;    நியாயவிலைக் கடை பொருட்கள், முதியோர் ஓய்வூதியம், பள்ளிகளுக்கு செலுத்தப்படும் கல்விக் கட்டணத்தை திருப்பி அளித்தல் ஆகியவை இந்த வாரியங்கள் மூலம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் இந்த சமுதாயங்கள் வறுமை இல்லாத சமுதாயங்களாகவும், கடன் இல்லாத சமுதாயங்களாகவும் மாறும்.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த 45 முதல் 60 வயது வரையிலான பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ.18,750 கடன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெண்கள் தற்சார்பு நிலையை அடையவும், குடும்பங்கள் பொருளாதார வளர்ச்சி அடையவும் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. இந்த நடவடிக்கைகள் ஒவ்வொரு சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட தனி நபர்களின் முன்னேற்றத்திற்கு மட்டும் வழி வகுக்காது. ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும். இது மாநிலத்தின் வளர்ச்சியாக மாறும் என்பது உறுதி.

ஆந்திரத்தை 2024-ஆம் ஆண்டுக்குள் மது இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கொள்கை முடிவை எடுத்து, இது வரை 40 விழுக்காடு மதுக்கடைகளை மூடியிருப்பதும் பாராட்டத்தக்கதாகும். இதுவும் சமூக முன்னேற்றத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.

ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்தனி வாரியங்களை அமைத்திருப்பது தொலைநோக்கு பார்வை கொண்டதாகும். இதற்காக மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆந்திரத்தில் சமூகநீதியை வளர்த்தெடுக்கும் வகையில் இத்தகைய சமூகநீதிப்பார்வை தொலைநோக்குத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages