இந்தியன் வங்கி முன்னாள் சேர்மன், யாதவ மகா சபையின் தலைவர் எம். கோபாலகிருஷ்ணன் இறப்பு செய்தி வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

இந்தியன் வங்கி முன்னாள் சேர்மன், யாதவ மகா சபையின் தலைவர் எம். கோபாலகிருஷ்ணன் இறப்பு செய்தி வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

இந்தியன் வங்கி முன்னாள் சேர்மன், யாதவ மகா சபையின் தலைவர் எம். கோபாலகிருஷ்ணன் இறப்பு செய்தி வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி              
        
யாதவர் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக யாதவ மகா சபையின் தலைவராக இருந்து நீண்ட காலமாக செயல்பட்டு வந்தவர். முக்கிய பதவியான இந்தியன் வங்கி (INDIAN BANK) சேர்மனாக  செயல்பட்டவர். மருத்துவர் அய்யா அவர்களுடன் மிக நெருக்கமாகவும் மிகுந்த மரியாதையுடனும் தொடர்பில் இருந்தவர். சமூகநீதிக்காகவும் மது ஒழிப்புக்காகவும் தமிழ் வளர்ச்சிக்காகவும் ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்காகவும் பா.ம.க நடத்திய ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பித்தவர். நான் அடிக்கடி தொடர்புகொண்டு  நிகழ்ச்சிகளுக்கு அழைப்பேன். பேசுவேன். யாதவ சமுதாய மக்களின் பிரச்சினைகளுக்கு என்னிடத்தில் தொடர்புகொண்டு அரசிடம், அதிகாதிகளிடம் பேசச் சொல்லுவார். நானும் உடனே பேசி அதற்கு தீர்வு காண்பேன். நல்ல பண்பையும் மரியதையும் கொண்டிருந்தவர்.         
         
அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து மீளாத் துயரிலும் வேதனையிலும் வாடும் அவரது மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பத்தினர், அவரது உறவினர்கள், நண்பர்கள், யாதவ மகா சபையினர் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள் கிறோம். இன்று காலை கைபேசியில் தொடர்புகொண்டு அவரது மகள், மருமகன் ஆகியோரிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages