ஆந்திர மாநிலம் வன்னியகுல சத்திரிய வாரியத்தின் தலைவர் கே.வனிதா. மருத்துவர் அய்யா அவர்களிடம் வாழ்த்து பெற்றார்!
ஆந்திர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் முன்னேற்றத்திற்காக 56 சமுதாயங்களுக்கு தனித்தனி நல வாரியங்களை அமைத்து அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆணையிட்டுள்ளார். ஆந்திரத்தில் வன்னியகுல சத்திரிய வாரியத்தின் ( Vanniyakula Kshatriya Corporation ) தலைவராக சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே. வனிதா அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் இன்று காலை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து பெற்றார்.
வனிதாவின் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்த மருத்துவர் அய்யா அவர்கள், ஆந்திரத்தில் உள்ள வன்னியகுல சத்திரிய மக்களின் வாழ்க்கை நிலை உயருவதற்கு வன்னியகுல சத்திரிய வாரியத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். வன்னியகுல சத்திரிய வாரியத்தின் தலைவராக வனிதா நியமிக்கப்பட்டிருப்பதை ஆந்திரத்தில் உள்ள வன்னியர்கள் வரவேற்றுக் கொண்டாடினார்கள்.
ஆந்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள 56 சமூகங்களின் வாரியங்கள் மூலமாக அந்த சமூகங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.75,000 கோடி செலவிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து சமுதாயங்களுக்கும் தனித்தனி வாரியங்களை அமைத்ததற்காக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களை ஆந்திர மாநிலத்தின் சமூகநீதிக் காவலர் என்று மருத்துவர் அய்யா அவர்கள் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment