சர்வதேச ஆதரவு அதிகமாக இருப்பதால் இந்தியாவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது: அமித்ஷா பரபரப்பு பேட்டி - Agnipuratchi

சர்வதேச ஆதரவு அதிகமாக இருப்பதால் இந்தியாவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது: அமித்ஷா பரபரப்பு பேட்டி

Share This

சர்வதேச ஆதரவு அதிகமாக இருப்பதால் இந்தியாவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது: அமித்ஷா பரபரப்பு பேட்டி

🌏புதுடெல்லி: ‘எல்லையின் இருபுறமும் எதிரிகள் தரும் தொல்லையை சமாளிப்பது எளிதான காரியமல்ல. இருப்பினும், நமக்கு சர்வதேச ஆதரவு அதிகமாக இருப்பதால், யாராலும் நமது நாட்டை ஒன்றும் செய்ய முடியாது,’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போதுதான் பொது நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்க தொடங்கியுள்ளார். நேற்று முன்தினம் அவர், தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது: பீகாரில் நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலில், பாஜ-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி நிச்சயம் அமோக வெற்றி பெறும்.

இதில், ஐக்கிய ஜனதா தளத்தை விட பாஜ அதிக இடங்களை கைப்பற்றினாலும், நிதிஷ் குமார் தான் முதல்வராக இருப்பார். எங்கள் கூட்டணியில் இருந்து லோக் ஜனசக்தி வெளியேறியது அக்கட்சியின் தலைவர் சிராக் பஸ்வானின் முடிவு. பாஜ.வைப் பொறுத்த வரையில் கூட்டணி தர்மத்தை எப்போதும் கடைபிடித்து வருகிறது. சிவசேனா, அகாலி தளம் போன்ற சில கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறியதை வைத்து எதையும் முடிவு செய்யக் கூடாது. எங்கள் கூட்டணியில் 30 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. சீனாவுடனான எல்லை விவகாரத்தில் ராணுவ தரப்பிலும், வெளியுறவு துறை தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.அதே சமயம், இந்தியாவின் ஒவ்வொரு அடி நிலப்பரப்பும் எங்களுக்கு முக்கியம், ஒரு அடி இடத்தை கூட எங்களிடம் இருந்து யாரும் அபகரித்து செல்ல முடியாது. சமீபத்தில் சீனா அதிபர் ஜின்பிங், அவர்களின் ராணுவம் போருக்கு தயாராக இருப்பதாக கூறியதை பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அதே சமயம், எல்லா நாடுகளும் போருக்கு தயாராகத்தான் இருக்கும். அந்த வகையில், நமது ராணுவமும் அனைத்திற்கும் தயாராக உள்ளது. எல்லையில் பாகிஸ்தானுடன் சேர்ந்து சீனாவும் இப்போது பல தொல்லைகளை தந்து வருகிறது. இதற்கு சரியான பதிலடி தர நமது அரசின் தலைமையும், ராணுவமும் தகுதி படைத்ததாகும்.யாராலும் இந்தியாவை ஒன்றும் செய்ய முடியாது. நமக்கு நிறைய சர்வதேச ஆதரவுகள் உள்ளன. மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. ஊழல் மலிந்து கிடக்கிறது. மாவட்டத்திற்கு ஒரு வெடிகுண்டு தொழிற்சாலை சட்ட விரோதமாக இயங்கி வருகிறது. கேரளாவை விட மோசமாக, எதிர்க்கட்சி தலைவர்கள் குறிவைத்து கொல்லப்படுகின்றனர். இங்கு, ஜனாதிபதி ஆட்சியை ்அமல்படுத்த கோருவதில் நியாயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages