அக்னிப்புரட்சி இன்றைய (01.11.2020) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,27,026 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 686 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,00,533 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 30 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 11,152 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 3,644 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,94,880 பேர் குணமடைந்துள்ளனர்.
* டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை நீட்டித்து உத்தரவு:
நாளை முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடை திறந்திருக்குமென அறிவிப்பு.
இதுவரை இரவு 8 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி.
நாளை முதல் இரவு பத்து மணி வரை மதுக்கடைகள் செயல்பட அனுமதி.
நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகளின் விற்பனை நடைபெறுமென அறிவிப்பு.
* காவேரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் நேரில் வருகை:
மருத்துவமனையில் உள்ள வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மலர்தூவி அஞ்சலி.
அமைச்சர் துரைக்கண்ணுவின் இழப்பு மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுக கட்சிப் பணியை தொடங்கியவர்.
பாபநாசம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர் துரைக்கண்ணு.
அனைவரிடத்திலும் எளிமையாக பழகக் கூடியவர் என்பதால் வேளாண்துறையை கொடுத்தார் ஜெயலலிதா.
அதிமுகவுக்காக நாட்டு மக்களுக்காக பாடுபட்ட துரைக்கண்ணுவின் மரணம் பேரிழப்பு.
* சொந்த ஊரில் நல்லடக்கம் செய்ய
மறைந்த வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல் தஞ்சை மாவட்டம் ராஜகிரி கொண்டு செல்லப்படுகிறது.
ராஜகிரியில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.
மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் நல்லடக்கம்.
* அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
சட்டமன்றத்தில் அவை மரபுகளுக்கு உட்பட்டு செயல்படுபவர் துரைக்கண்ணு -ஸ்டாலின் புகழாரம்.
அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு பாமக நிறுவனர் இராமதாஸ் இரங்கல்.
துரைக்கண்ணு, என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர், பாமகவின் கொள்கைகள் மீது மதிப்பு கொண்டிருந்தவர் - பாமக நிறுவனர் இராமதாஸ்.
* வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல்.
துரைக்கண்ணு மிகவும் எளிமையானவர், தன்னடக்கம் மிக்கவர், அனைவரையும் மதிக்கும் பண்பாளர் - வைகோ.
* அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு அதிமுகவுக்கும், தஞ்சை மாவட்ட மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு; அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்” - ஜி.கே.வாசன்.
* தொகுதி மக்களின் நன் மதிப்பை பெற்ற துரைக்கண்ணு விவசாயிகள் நலனுக்காக பாடுபட்டவர்; அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அதிமுகவினருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்” - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.
* வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.
விவசாயிகளின் நலனுக்காகவும், சமுதாயத்திற்காகவும் பாடுபட்டவர் அமைச்சர் துரைக்கண்ணு - பிரதமர் மோடி.
* ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு இல்லை: தோனி
தோனியின் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி: நிச்சயமாக இது எனது கடைசிப் போட்டி கிடையாது.
ஐபிஎல் போட்டிகளில் இருந்து தற்போது நிச்சயமாக ஓய்வு இல்லை என சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
* பொறியியல் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள் வரும் 23 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், அதில், 71 ஆயிரத்து 195 இடங்கள் நிரம்பின.
இந்த நிலையில், முதலாமாண்டு மாணவர்களுக்கான முன்பயிற்சி வகுப்புகள் வரும் 9 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும் நடப்பு பருவத்துக்கான வகுப்புகள் 23 ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி 24 ம் தேதி உடன் முடிவடையும் என்றும் பருவத் தேர்வுகள் மார்ச் 8 ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு வேளாண்துறை
ஒதுக்கீடு.
முதல்வரின் பரிந்துரையை ஏற்று கே.பி.அன்பழகனுக்கு வேளாண்துறையை ஒதுக்கீடு செய்தார் ஆளுநர்.
No comments:
Post a Comment