அக்னிப்புரட்சி இன்றைய (03.11.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (03.11.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (03.11.2020) முக்கிய செய்திகள்.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,31,942 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 669 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,01,195 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 31 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 11,214 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 2,707 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,01,527 பேர் குணமடைந்துள்ளனர்.

* சென்னையில் 33 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.

* பீகார் 2-ம் கட்ட  தேர்தல்: 94 தொகுதிகளில் வாக்குப் பதிவு துவங்கியது.

2-ம் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது

ம.பி.யில் 28 இடங்கள் உட்பட 10 மாநிலங்களில் 54 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் இன்று வாக்குப் பதிவு.

* அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்.

அமைச்சர் கே.பி.அன்பழகன் ஏற்கனவே கூறிய நிலையில் தமிழக அரசு அமைத்த குழு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.

கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணியை கொண்ட தமிழக குழு கடிதம்.

துணை வேந்தர் சூரப்பா கூறியது போல அண்ணா பல்கலைக்கழகத்தால் தனியாக நிதி திரட்ட முடியாது - குழு.

* தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு?

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சரியான தருணம் அல்ல என எழுந்துள்ள கருத்துக்கள் எதிரொலி
பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல்.

கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நேற்று திடீரென ஆலோசனை நடத்தியதாக தகவல்.

கொரோனா பரவல், பருவமழையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை என தகவல்.

* வரும் 16ஆம் தேதி 9,10,11,12ஆம் வகுப்புகள் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.

* தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு என புகார்:

2018 ல் வெளியிடப்பட்ட இறுதிப்பட்டியலிலிருந்து 45 பேர் நீக்கப்பட்டு 85 பேர் சேர்ப்பு".

* வேலைவாய்ப்பு முன்னுரிமை மதிப்பெண்களில் 18 பேருக்கு திருத்தம் என தகவல்.

முன்னுரிமை மதிப்பெண் பூச்சியம் என இருந்தது முழு மதிப்பெண்ணான 5 ஆக திருத்தம்.

இன்றும் நாளையும் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் நிலையில் அதிர்ச்சி தகவல்கள்.

* சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் வரும் 11ஆம் தேதி முதல் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்: - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தகவல்.

காவல்நிலையத்திற்கு வரும் அனைத்து புகார்கள் மீதும் எஃப்ஐஆர் போடப்படுகிறதா என நீதிபதி கேள்வி.

காவல்நிலையத்தில் முறையாக எஃப்ஐஆர் போடப்பட்டால் நீதிமன்றத்திற்கு அது தொடர்பான வழக்குகள் ஏன் வருகின்றன? - நீதிபதி

* மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு; இன்றுமுதல் 12-ம் தேதி வரை விண்ணபிக்கலாம்.  16-ம் தேதி  தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என அறிவிப்பு.

* தீயணைப்பு துறை இயக்குநராக ஜாபர்சேட் நியமனம்.

குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவை ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு கூடுதலாக கண்காணிப்பார்.

தமிழக காவல்துறையில் நிர்வாக பிரிவு டிஐஜியாக துரைக்குமார் நியமனம்.

* நவ.16-ல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்ற  முதலமைச்சரின் அறிவிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்:

"மாற்று அறிவிப்பை வெளியிட்டு மக்களின் மனப் பதற்றத்தைத் தணிக்க வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்.

* வெளி நாடுகளில் ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம், துவக்க பள்ளிகளை விட உயர்நிலை பள்ளிகளில் பாதிப்பு அதிகம் என கண்டறிந்துள்ளது".

"மாணவ, மாணவிகளின் உயிர் பாதுகாப்பு தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது".

"பெற்றோர் - ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும்".

* VPF கட்டணத்தை ஏற்க தயாரிப்பாளர்களை தொடர்ந்து தமிழக தியேட்டர்களின் அதிபர்களும் மறுத்துள்ளனர்.

5 மாநிலங்களை சேர்த்து தென்னிந்திய திரையரங்கு உரிமையாளர் சங்கத்தை தொடங்கவும் திட்டம்.

* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்:

சென்னையில் இருந்து 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்.

சென்னையில் செயல்படும் 13 முன்பதிவு மையங்களில் இதுவரை 27,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்.

* சட்டசபை தேர்தலில் கழகங்களுடன் கூட்டணியில்லை - கமல்ஹாசன்

மக்களுடன்தான் மக்கள் நீதி மய்யம் கூட்டணி இருக்கும்.

மூன்றாவது அணிக்கான தகுதி மநீமவிற்கு வந்து விட்டது - கமல்ஹாசன்.

* ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யக்கோரிய வழக்கு:

கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

“விளம்பரம் செய்யும் பிரபலங்கள் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துவது ஏன்?"

நடிகர் பிரகாஷ் ராஜ், சுதீப்,  நடிகை தமன்னா  உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்ட வரையறை செய்யப்பட்டுள்ளதா? -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி.

“ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் 10 நாட்களில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது"

தெலங்கானாவில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது - நீதிபதிகள்.

சூதாட்டத்தில் புழங்கும் பணம் எங்கு? யார்? கணக்கிற்கு செல்கிறது"

மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

* ரஜினி கட்சி தொடங்குவது சந்தேகமே !

ரஜினி - குருமூர்த்தி சந்திப்புக்கு பின் வெளியாகியுள்ள துக்ளக் இதழில் விமர்சனம்

* பள்ளிகள் திறப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை.

9 முதல் 12ம் வகுப்பு வரை நவ.16 முதல் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

* சென்னையில் உள்ள எஸ்பிளனேடு, ஏழுகிணறு, சிந்தாதிரிப்பேட்டை மின்வாரிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

3 அலுவலகங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில் இதுவரை ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* திருப்பதி கோயிலில் 24 மணி நேரமும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும்: தேவஸ்தானம் தகவல்.

நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் தரிசன டிக்கெட்கள் வழங்கப்படும் என அறிவிப்பு.

பக்தர்கள் இடையே சமூக இடைவெளியை கடைபிடிக்கமுடியாத சூழ்நிலையால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு.

* வளர்ந்த நாடுகள் கூட கொரோனா பாதிப்பின் 2வத தாக்கத்தில் இருந்து மீள இயலாத நிலையில் தமிழகம் மீள்கிறது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.

தற்போது 3.5 சதவீதம் பாசிட்டிவிட்டி எண்ணிக்கை உள்ளது.

80 சதவீதம் கொரோனா பரிசோதனைகள் அரசு ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* அமெரிக்கா முழுவதும் தேர்தல் எந்தவிதமான வன்முறையும் இன்றி அமைதியாக நடக்கிறது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல் அமைதியாக நடக்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

ப்ளோரிடாவில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்காளித்தார் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப்.

அடுத்த சில மணி நேரம் தான் நம் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது: ஜோ பைடன் மனைவி ஜில் பைடன்.

இன்னும் ஓட்டுபோடவில்லை என்றால் போய் ஓட்டுப்போடுங்கள்: ஜோ பைடன் மனைவி.

மாபெரும் வெற்றியை பெறப்போவதாக உணர்கிறேன்- டொனால்ட் ட்ரம்ப்.

ஃபுளோரிடா, அரிசோனா போன்ற முக்கிய மாகாணங்களில் எனக்குத்தான் ஆதரவு- ட்ரம்ப்.

* முகக் கவசம் அணிந்து வாக்களிக்க செல்லுங்கள்.

உங்கள் வாக்குப்பதிவு இடத்தைக் கண்டறிய IWillVote.com வெப்சைட்டை அணுகுங்கள்- கமலா ஹாரீஸ்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages