அக்னிப்புரட்சி இன்றைய (04.11.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (04.11.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (04.11.2020) முக்கிய செய்திகள்.

* தமிழகத்தில் இன்று புதிதாக 2,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,34,429 உயர்வு.

சென்னையில் மட்டும் இன்று 669 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,01,848 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் இன்று 30 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 11,244 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று 2,504 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,04,031 பேர் குணமடைந்துள்ளனர்.

* சென்னையில் 34 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.

* பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க முடிவு

வரும் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கலாம் என முடிவு.

பள்ளிகள் திறப்பை தள்ளி வைப்பது குறித்து அரசு சார்பில் இன்று அறிக்கை வரவுள்ளது.

* 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் தமிழக ஆளுநர் பனவாரிலால் புரோகித்!

குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்கிறார்!

எழுவர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் ஆளுநர் திடீர் பயணம்!

* அர்ணாப் கோஸ்வாமி கைது?
பிரபல தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமியை போலீஸ் கைது செய்திருப்பதாக தகவல்!

வீட்டிற்குள் நுழைந்த போலீசார் தன்னை தாக்கியதாக அர்ணாப் பரபரப்பு தகவல்!

* ராஜதந்திர எடப்பாடி ; கோட்டை விடுகிறாரா ஸ்டாலின் என ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கட்டுரை...

Tasmac மது பான ஆலைகள் குறித்து ஸ்டாலின் நிலைபாடு என்ன ?

உதயநிதியை முன்னிறுத்தி  கனிமொழியை ஒதுக்குகிறார்கள்

இந்து ஓட்டு மாயையில் ஸ்டாலின் இருக்கிறார் என அடுக்கடுக்கான விமர்சனங்கள்.

* பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மும்பையில் கைது.

52 வயதான நபரை தற்கொலைக்கு தூண்டியதாக, 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில், ‛ரிபப்ளிக் டிவி' ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2018 ம் ஆண்டு ‛ரிபப்ளிக் டிவி' நிறுவனம் தர வேண்டிய நிலுவை தொகை கிடைக்கவில்லை எனக்கூறி, 53 வயதான இன்டீரியர் டிசைனரான அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை, அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்ததாக, தெரிவித்துள்ளனர்.

* மிசோரியை வெல்கிறார் டிரம்ப்:
குடியரசுக் கட்சியின் ஆதரவு மாகாணமான மிசோரியை இந்த முறையும் கைப்பற்றுகிறார் டொனால்ட் ட்ரம்ப்.

2016 அதிபர் தேர்தலிலும் டிரம்ப் மிசோரியை கைப்பற்றினார்.

* ஹெரிட்டேஜ் ஓட்டல் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.

மதுரையில் 5, சென்னையில் 4 இடங்களில் ஹெரிட்டேஜ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் ஐ.டி.ரெய்டு.

* நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பாஜக நிர்வாகி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த பெரியதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முன்பகை காரணமாக முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணி துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

ஜெபமணியை கைது செய்த போலீஸ் அவரிடம் இருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தது.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.38,416 க்கு விற்பனை.

* சென்னை மாநகராட்சியில் நடமாடும் அம்மா உணவகங்களை தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி.

வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னைக்காக 3 நடமாடும் அம்மா உணவகங்களை தொடங்கி வைத்தார்.

நாளடைவில் சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் நடமாடும் அம்மா உணவகங்களை தொடங்க திட்டம் - முதல்வர்.

* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கல்வித்துறை அமைச்சர்கள் ஆலோசனை.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் சந்திப்பு.

வருகிற 16ஆம் தேதி பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், முக்கிய ஆலோசனை.

* தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

* பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு.

மனுவை நாளை விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல்.

வேல் யாத்திரைக்கு அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் - மனுதாரர்.

சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல்.

* என்னை விமர்சிப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை:

தில்லுமுல்லுப் பேர்வழிகளால் சில சுவரொட்டிகள் தமிழ்நாட்டின் தெருக்களில் ஒட்டப்படுகின்றன.

பெயரோ, முகவரியோ வெளியிட தெம்பும் திராணியுமற்ற நபர்கள் என்னை இகழ்ந்து போஸ்டர்களை ஒட்டுகின்றனர்- மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்.

* அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்வான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி  இல்லினாய்ஸில் வெற்றி; அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 3 வது முறையாக தேர்வு.

அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள்:

அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் மாகாணங்களில் இழுபறி.

மொத்தம் 7 மாகாணங்களில் முடிவுகள் இழுபறியில் உள்ளன.

இழுபறியில் உள்ள அரிசோனா, நெவாடா ஆகிய 2 மாகாணங்களில் பைடன் முன்னிலை.

இழுபறியில் உள்ள ஜார்ஜியா, மிச்சிகன், வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் ஆகிய 5 மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை.

* தமிழகத்தில் தமிழுக்கு இடமில்லையா? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி:

தமிழ் வழி இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது?

தமிழகத்தில் தமிழில் படித்தவர்கள் அருகி மருகி வருகின்றனர் -உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி

* எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின், மோடி வோட்டிங் மெஷின் என எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் கூட்டணி வெல்லும்!" - ராகுல் காந்தி.

* ஆந்திராவில் நவ.2 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று.

அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா சோதனை செய்துகொள்ள சித்தூர் ஆட்சியர் பரத் குப்தா உத்தரவு.

* அமெரிக்க தேர்தல் முடிவு - தொடர் இழுபறி:

6 மாகாணங்களில் முடிவுகள் வெளியாவதில் இழுபறி.

ஜார்ஜியா, மிச்சிகன், வடகரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய 5 மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை.

நெவேடா மாகாணத்தில் ஜோ பைடன் முன்னிலை.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசு நிர்வாக ஆணை மூலம் விடுதலை செய்ய வேண்டும்.

விடுதலை தாமதிக்கப்படுமானால் மறுக்கப்பட்ட நீதியாகவே வரலாற்றில் பதிவாகும். இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தல்.

* 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.

தமிழக அரசியல் நிலவரம், கொரோனா சூழல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆளுநர் பேச்சு.

* பள்ளிகள் திறப்பு - 9ம் தேதி கருத்துக்கேட்பு:

பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக சங்கத்தினர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு.

அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும்.

9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கலாம்.

கூட்டத்தில் பங்கேற்க இயலாதவர்கள் கடிதம் மூலம் கருத்து தெரிவிக்கலாம்- பள்ளி கல்வித்துறை.

* ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப்பை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மகாராஷ்டிரா காவல்துறை கோரிக்கை வைத்துள்ளது.

* அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக  திருநங்கை எம்.பி.யாக தேர்வு.

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட திருநங்கை சாரா மெக்ட்ரைட் வெற்றி.

* அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் கடும் இழுபறி சூழல் நிலவி வருகிறது:

டொனால்ட் டிரம்ப் (213) வென்றுள்ள பிரதிநிதிகள்:

  அலபாமா (9)

  ஆர்கன்சாஸ் (6)

  புளோரிடா (29)

  இடாஹோ (4)

  இண்டியானா (11)

  அயோவா (6)

  கன்சாஸ் (6)

  கென்டக்கி (8)

  லூசியானா (8)

  மிசிசிப்பி (6)

  மிசவுரி (10)

  மொன்டானா (3)

  நெப்ராஸ்கா (4)

  வடக்கு டகோட்டா (3)
  ஓஹியோ (18)

  ஓக்லஹோமா (7)

  தெற்கு கரோலினா (9)

  தெற்கு டகோட்டா (3)
  டென்னசி (11)

  டெக்சாஸ் (38)

  உட்டா (6)

  மேற்கு வெர்ஜீனியா (5)

  வயோமிங் (3)

ஜோபைடன் (238) வென்றுள்ள பிரதிநிதிகள்:

  அரிசோனா (11)

  கலிபோர்னியா (55)

  கொலராடோ (9)

  கனெக்டிகட் (7)

  டெலோவர் (3)

  கொலம்பியா மாவட்டம் (3)

  ஹவாய் (4)

  இல்லினாய்ஸ் (20)

  மைனே (3)

  மேரிலாந்து (10)

  மாசசூசெட்ஸ் (11)

  மினசோட்டா (10)

  நெப்ராஸ்கா (1)

  நியூ ஹாம்ப்ஷயர் (4)
  நியூ ஜெர்சி (14)

  நியூ மெக்சிகோ (5)

  நியூயார்க் (29)

  ஒரேகான் (7)

  ரோட் தீவு (4)

  வெர்மான்ட் (3)

  வெர்ஜீனியா (13)

  வாஷிங்டன் (12)

இன்னும் அறிவிப்பு வெளியாகாத மாகாணங்கள்:

  அலாஸ்கா
  ஜார்ஜியா
  மிச்சிகன்
  நெவாடா
  வட கரோலினா
  பென்சில்வேனியா
  விஸ்கான்சின்

* கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 31ம் தேதி நடைபெறும்.

* தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநராக பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages