அக்னிப்புரட்சி இன்றைய (05.11.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (05.11.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (05.11.2020) முக்கிய செய்திகள்.

* தமிழகத்தில் இன்று புதிதாக 2,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,36,777 உயர்வு.

சென்னையில் மட்டும் இன்று 621 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,03,085 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் இன்று 28 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 11,272 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று 2,413  பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,06,444 பேர் குணமடைந்துள்ளனர்.

* வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் டொனால்டு டிரம்ப் டுவிட்.
அதிபர் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் டிரம்ப் கருத்து.

* பல்லாவரம் நகராட்சி, மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகிய அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை - ரூ.2 லட்சம் பணம், தங்க நாணையங்கள் பறிமுதல்.

* வெற்றியை நோக்கி பைடன்.....
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடன் தொடர்ந்து முன்னிலை.

264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை.

பைடன் வெற்றிபெற இன்னும் 6 எலக்டரல் வாக்குகளே தேவை.

குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

மிச்சிகன், விஸ்கான்சின் மாகாணங்களில் பைடன் வென்றதால் அதிரடி திருப்பம்.

ஜார்ஜியா, நார்த் கரோலினா, பென்சில்வேனியாவில் டிரம்ப் நூலிழையில் முன்னிலை.

* சென்னையில் 35 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.

* டிரம்ப் தரப்பு வழக்கு:
பென்சில்வேனியா, ஜார்ஜியா, நார்த் கரோலினாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும்.

மீதம் இருக்கும் தபால் வாக்குகளை எண்ண கூடாது என்று டிரம்ப் வழக்கு.

* சென்னை: சிறப்பு புறநகர் ரயில்களில் தனியார் நிறுவன ஊழியர்கள், ஊடக ஊழியர்களும் செல்ல அனுமதி:

சிறப்பு புறநகர் ரயிலில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தெற்கு ரயில்வே நடவடிக்கை.

* மகாராஷ்டிரா: மும்பையில் கைதான ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்.

கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக்கை 2018ல்  தற்கொலைக்கு தூண்டிய புகாரில் கைதானார் அர்னாப்.

* பாரதிய ஜனதா நடத்தும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

* எங்களின் குரலை ஒடுக்க முடியாது - பைடன் பேச்சு: எல்லா வாக்குகளையும் எண்ண வேண்டும்.

கடைசி வாக்கு வரை கண்டிப்பாக எண்ண வேண்டும். இது அமெரிக்க ஜனநாயகத்திற்கான போராட்டம்.

அமெரிக்கா பல போராட்டங்களை பார்த்து இருக்கிறது. யாரிடமும் நாம் சரணடைய கூடாது. நான் வெற்றிபெற்றுவிட்டேன் என்று சொல்ல மாட்டேன்.

ஆனால் வாக்கு எண்ணிக்கை முடியும் போது நாம் வென்று இருப்போம்.
முடிவு நமக்கு சாதகமாக வரும் - பைடன்.

* சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி.

சென்னை நொளம்பூர், பெரம்பலூரில் கட்டப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

*:பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது:

கொரோனா 2ஆவது மற்றும் 3ஆவது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது. உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.

* 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், நெல்லை, குமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும்- சென்னை வானிலை மையம்.

மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திருப்பூரில் மலைப்பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஏனைய மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

* பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக அமித்ஷா, ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஸ்டாலின் அனுப்பியுள்ளார்.

* பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய ஒடிசா, ராஜஸ்தான் முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.

மாசில்லா பட்டாசு தயாரிப்புகளுக்கு முதல்மாநிலமாக தமிழகம் உள்ளது என கடிதம். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத பட்டாசுகள் தமிழகத்தில் தயாரிக்கப்படுகின்றன என தகவல்.

* தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு.

தீபாவளியன்று காலை 6 முதல் 7 வரையிலும், இரவு 7 முதல் 8 வரையிலும் பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி.

* பண மோசடி செய்ததாக  நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீதான வழக்கு:

2 பேர் தாக்கல் செய்த முன் ஜாமீன் வழக்குகளில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அறிவிப்பு.
வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை.

* பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து, ஆளுநர் ஆலோசித்ததாக ஆளுநர் மாளிகை விளக்கம்.

பேரறிவாளன் விடுதலை குறித்து டெல்லியில் பிரதமர், உள்துறை அமைச்சருடன் ஆளுநர் ஆலோசித்ததாக தகவல்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிபிஐ விசாரித்ததால், மத்திய உள்துறை அமைச்சகம் தடையில்லா சான்று அளிக்க முடிவு?.

தடையில்லா சான்று குறித்து சிபிஐயின் கருத்தை மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல்.

* பள்ளிகள் திறப்பு குறித்து 9ம் தேதி நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

கருத்து கேட்பு கூ்டம் நடைபெறும் அறைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

பெற்றோர்கள், மாணவர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பத்தை அளவீடு செய்ய வேண்டும்.

அதிகமான பெற்றோர் வந்தால் சுழற்சி மூறையில் வெவ்வேறு நேரங்களில் வரவழைத்து கருத்து கேட்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு.

* கிராமசபை கூட்டங்களைக் கூட்ட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி திமுக எம்.எல்.ஏ. நேரு வழக்கு

தனி மனித இடைவெளி காரணமாக கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது - தமிழக அரசு

டாஸ்மாக் கடைகளில் தனி மனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா என நீதிபதிகள் கேள்வி.

குறிப்பிட்ட விவகாரம் பற்றி தீர்மானம்
நிறைவேற்றக் கூடாது என கூற அரசுக்கு எங்கே அதிகாரம் உள்ளது? - நீதிமன்றம்.

எம்.எல்.ஏ. நேரு மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு:

நீலகிரி, திருப்பூரில் கொரோனா பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார்.

கோவை மாவட்ட மக்கள் வைத்த
கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக்
கொண்டு இருக்கிறது.

கோவை மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. உக்கடம் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கவுண்டம்பாளையம் சந்திப்பில் 1 கி.மீ. நீளத்திற்கு மேம்பாலப் பணிகள் நடக்கின்றன.

அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால பணிகள் ரூ.1100 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

* டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.

டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33% போனஸ், 1.67% கருணைத் தொகை வழங்கப்படும் - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages