அக்னிப்புரட்சி இன்றைய (06.11.2020) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் இன்று புதிதாக 2,370 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,39,147 உயர்வு.
சென்னையில் மட்டும் இன்று 612 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,03,685 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் இன்று 27 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 11,299 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று 2,403 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,08,846 பேர் குணமடைந்துள்ளனர்.
* ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கே நாட்களில் 829 ஆசிரியர்களுக்கும், 575 மாணவர்களுக்கும் கொரோனா.
* சென்னையில் 36 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியின் விளிம்பின் ஜோ பைடன்- வாக்கு எண்ணிக்கை தொடருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு எதிரான நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
* சட்டப்படியான வாக்குகளை எண்ணினால் நானே வெற்றி பெறுவேன்: டிரம்ப் பிடிவாதம்.
அதிபர் தேர்தல் வெற்றியை எங்களிடம் இருந்து திருட ஜோபிடன் குழு முயற்சிக்கிறது. பல முக்கிய மாகாணங்களில் நானே வெற்றி பெற்றிருக்கிறேன்: டிரம்ப் ட்வீட்.
நாங்கள் வரலாறு காணாத வகையிலான வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளோம்: டிரம்ப்.
* டிரம்பை கைவிட்ட ஜார்ஜியா நீதிமன்றம்; மிக்சிகன் கோர்ட்டும் மனுக்களை தள்ளுபடி செய்தது.
ஜார்ஜியா நீதிமன்றத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆட்சேபனை தெரிவித்து டிரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கை நீதிபதி ஜேம்ஸ் பாஸ் தள்ளுபடி செய்தார்.
மிக்சினில் போடப்பட்ட வழக்கும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது ஜோ பைடனுக்கு சாதகமாகி உள்ளது.
* பென்சில்வேனியா மாகாண வாக்கு எண்ணிக்கை வழக்கில் டிரம்ப்-க்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவு.
பென்சில்வேனியா மாகாண வாக்கு எண்ணிக்கையில் கண்காணிப்பாளர்களை அனுமதிக்க கோர்ட் உத்தரவு.
அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்குகளில் முதல் முறையாக டிரம்ப்-க்கு சாதகமாக உத்தரவு.
* காவல்துறை அனுமதித்தால் பாஜக வேல் யாத்திரையை நடத்தும்; இல்லையெனில் போராட்டம்.
இந்துக்களை இகழ்வாக பேசும் ஸ்டாலின் போன்றவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவே வேல்யாத்திரை- ஹெச்.ராஜா, பாஜக.
* தங்களுடைய கடவுளை வழிபடுவது அடிப்படை உரிமை அதன் அடிப்படையில் திருத்தணிக்கு செல்கிறேன் - எல்.முருகன், தமிழக பாஜக தலைவர்.
* பாஜகவின் வேல் யாத்திரையை தடுக்க திருத்தணியில் 6 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூரை சேர்ந்த 1010 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் சாலையில் முக்கிய சந்திப்பில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முருகன் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
* அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக மிரட்டல் கடிதம்.
அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை திரும்பப் பெற கோரி மிரட்டல்.
வீரப்பன் என்ற பெயரில் சூரப்பாவுக்கு வந்த கடிதத்தை கைப்பற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை.
* வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கான புதிய வழிகாட்டல் நெறிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வருவோர் ஏழு நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, ஏழு நாட்கள் வீட்டி தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் விதிமுறை உள்ளது.
அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டல் நெறிகளில் 72 மணி நேரத்துக்குட்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றுடன் வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
நெகடிவ் சான்று இல்லாத பயணிகள் தனிமைப்படுத்துதலைத் தவிர்க்க விமான நிலையத்திலேயே கிடைக்கும் பரிசோதனை வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* திருப்பதி: ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக பக்தர்கள் திருமலைக்கு செல்ல தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் இந்த பாதையில் வனவிலங்குகளின் நடமாட்டம் குறைந்துள்ளது.
வனத்துறை மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் அந்த பாதையில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு அப்பாதை வழியாக காலை 6 மணிமுதல் மாலை 4 வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* மருத்துவர்களுக்கு வசதி - நீதிமன்றம் கேள்வி:
கிராம, ஊரக பகுதிகளுக்கு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சென்று வர போக்குவரத்து வசதி உள்ளதா?
தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மருத்துவர்களின் ஆரம்ப கால ஊதியம் எவ்வளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது? நீதிபதிகள் கிருபாகரன் - புகழேந்தி அமர்வு கேள்வி.
விரிவான பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைப்பு.
* நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த போலீஸ் ஏட்டு கைது.
பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை.
திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல், 2017ல் காவல்துறை பணிக்கு தேர்வானார்.
ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்த கற்குவேல் தொடர்ந்து இரவுப் பணியில் ஆர்வம் காட்டினார்.
இரவில் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
நெல்லை மாநகர், பெருமாள் புரத்தில் நடைபெற்ற கொள்ளை - கைரேகையில் சிக்கினார் ஏட்டு கற்குவேல்.
* நீலகிரியில் ரூ.131.57 கோடி மதிப்பில் 123 புதிய பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் ; ரூ.189.35 கோடி மதிப்பில் 67 முடிவுற்ற வளர்ச்சி பணிகளையும் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது: உதகையில் முதல்வர் பழனிசாமி பேச்சு:
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்ட வளர்ச்சிப் பணி, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி உதகையில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில்முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்று பேசினார். அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் குறைவு என கூறினார்கள்; ஆனால் அங்கு தற்போது அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
* சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு 29 ரூபாய் உயர்ந்து, 4,839 ரூபாயாகவும், சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து, 38 ஆயிரத்து 712 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ஆயிரத்து 500 ரூபாய் அதிகரித்து, 69 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது.
* மருத்துவ சிகிச்சை காரணமாக பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரம் பரோல் நீட்டிப்பு.
வரும் 9ம் தேதியுடன் பரோல் முடிவடையும் நிலையில் நவ.,23 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் எல். முருகன் கைது.
திருத்தணியில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜகவினரும் கைது.
திருத்தணியில் அரசின் தடையை மீறி பாஜக வேல் யாத்திரை செல்ல முயற்சி.
வேல் யாத்திரைக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு.
* கர்நாடக மாநிலத்தில் பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடைவிதித்து முதல்வர் எடியூரப்பா உத்தரவு.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடைவிதித்து முதல்வர் எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
* Paper Cup களில் தேநீர் உள்ளிட்ட சூடான பானங்களை அருந்துவதால் 25000 மைக்ரான் அளவுள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய நெகிழி (Plastic) துகள்கள் உடலுக்குள் செல்கிறது.
IIT கரக்பூர் நடத்திய ஆராய்ச்சியில் ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
* பிஎஸ்எல்வி-சி 49 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 26 மணி நேர கவுன்டவுன் தொடங்கியுள்ளது.
இஸ்ரோவின் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-01 (EOS-01) மற்றும் 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் நாளை மதியம் 3 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து அந்த ராக்கெட் செலுத்தப்பட உள்ளது.
கொரோனா ஊரடங்கு உள்ளிட்டவையால் இந்த ஆண்டு இதுவரை ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் எதையும் இஸ்ரோ செலுத்தவில்லை.
நாளை பிஎஸ்எல்வி-சி 49 ராக்கெட் மூலம் செலுத்தவுள்ள செயற்கைக்கோளே, இந்த ஆண்டில் செலுத்தப்படும் முதல் செயற்கைக்கோள் ஆகும்.
அதிலுள்ள சின்தடிக் அபர்சர் ரேடார் (synthetic aperture radar) மூலம் அனைத்து தட்ப வெப்பநிலைகளிலும் படங்களை எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே 7.5 சதவீத உள்ஒதுக்கீடு பொருந்தும்- முதலமைச்சர்.
மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
அரசு உதவி பெறும் பள்ளிகள் என்றாலும் அவை தனியார் பள்ளிகளே - முதல்வர் பழனிசாமி.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடுக்கான சட்டம் அரசிதழில் வெளியீடு.
உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் அண்மையில் ஒப்புதல் அளித்த நிலையில், சட்டம் அரசிதழில் வெளியீடு.
* ரூ.39 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை;
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 உயர்ந்து ரூ.38,936க்கு விற்பனை.
கிராமுக்கு ரூ.57 உயர்ந்து ரூ4,867க்கு விற்பனை.
* அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜார்ஜியா மாகாண வாக்கு எண்ணிக்கையில் டிரம்ப்பை முந்தினார் ஜோ பைடன்: வாக்கு எண்ணிக்கை 280-ஆக உயர வாய்ப்பு.
ஜார்ஜியா மாகாண வாக்கு எண்ணிக்கையில் டிரம்ப் - பைடன் சமஅளவில் இருந்த நிலையில் தற்போது ஜோ பைடன் முன்னிலை வகித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு 264 வாக்கு கிடைத்த நிலையில் தற்போது 280 ஆக உயர வாய்ப்புள்ளது.
ஜார்ஜியாவில் டிரம்ப்பை ஜோ பைடன் முந்தியுள்ள நிலையில், அந்த மாநிலத்தின் 16 வாக்குகளும் ஜோ பைடனுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
* 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் : அதிகாரிகள் நிதி மோசடியில் ஈடுபட்டால் பணியாளர்கள் வேலை பார்க்காமல் மோசடி செய்கின்றனர் -உயர்நீதிமன்ற மதுரை கிளை.
தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏன் தனித் துறை அமைக்கக் கூடாது?
நீர்நிலைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால் வருங்கால தலைமுறை பாதிக்கப்படும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை.
* எஸ்.ஏ.சி. கட்சி - விஜய் தாய் ஷோபா விளக்கம்:
அசோசியேஷன் தொடங்குவதாகவே என்னிடம் கையெழுத்து பெற்றார் எஸ்.ஏ.சி.
கட்சி தொடங்குவதற்காக 2 வது முறை
கையெழுத்து கேட்டபோது நான் போடவில்லை. அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என எஸ்.ஏ.சி. இடம் விஜய் கூறியிருந்தார்.
அரசியல் பேசவேண்டாம் என பலமுறை கூறியும் எஸ்.ஏ.சி கேட்காததால் அவரிடம் விஜய் பேசுவதில்லை : நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா.
எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விஜய்தான் முடிவெடுக்க வேண்டும்.
* அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 270 இடங்களை நெருங்குகிறார் ஜோ பைடன்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்னும் ஒரே ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்றால் பெரும்பான்மைக்கு தேவையான 270 இடங்கள் ஜோ பைடனுக்கு கிடைத்து விடும் என்ற நிலை உருவாகி உள்ளது.
அங்கு 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது.
* சென்னையில் நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் பேசிய நபர் குறித்து போலீசார் விசாரணை.
No comments:
Post a Comment