அக்னிப்புரட்சி இன்றைய (07.11.2020) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் இன்று புதிதாக 2,341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,41,4888 உயர்வு.
சென்னையில் மட்டும் இன்று 603 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,04,258 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் இன்று 25 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 11,324 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று 2,352 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,11,198 பேர் குணமடைந்துள்ளனர்.
* பென்சில்வேனியா, ஜார்ஜியாவில் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை;
பென்சில்வேனியாவில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பைடன் முன்னிலை.
பென்சில்வேனியாவில் வெற்றி பெற்றால் பைடன் அதிபராக முடியும்.
பென்சில்வேனியாவில் வென்றால் பைடனுக்கு 20 எலக்ட்ரல் வாக்குகள் கிடைக்கும்.
* சென்னையில் 37 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* பீகார் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு துவங்கியது.
16 மாவட்டங்களில் 78 தொகுதிகளுக்கான வாக்குபதிவு இன்று நடைபெறுகிறது.
78 தொகுதிகளில் 72 தொகுதிகள் பதற்றமானவையாக அறிவிப்பு.
பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு இதுவரை 2 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளன.
அக்டோபர் 28, நவம்பர் 3 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.
இறுதிக்கட்ட தேர்தலில் 1208 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சபாநாயகர் விஜயகுமார் சவுத்ரி, 12 அமைச்சர்கள் இன்றைய களத்தில் உள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சரத்யாதவின் மகள் சுபாஷிணி யாதவ் களமிறங்கியுள்ளார்.
2 கோடியே 34 லட்சம் தகுதி பெற்ற வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர்
243 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 10ஆம் தேதி நடைபெறுகிறது.
* நிவேடா மாகாணத்தில் மட்டும் முன்னிலையில் இருந்த ஜோ பைடன் அவர்கள் வாக்குகள் எண்ணிக் கொண்டிருக்கையில் பென்சில்வேனியா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் இப்பொழுது தொடர்ந்து முன்னிலை வைத்துக்கொண்டிருக்கிறார்
270 எண்ணிக்கையில் வெற்றிபெற இருந்த ஜோ பைடன் அவர்கள் இப்பொழுது. கூடுதலாக 36 இடங்களை பெற வாய்ப்புகள் உள்ளது
தற்போதுள்ள சூழ்நிலையில் 306 இடங்களை கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளது.
* கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கிளைச் சிறையில் இறந்த செல்வ முருகனின் இறப்பு மீதான புலன் விசாரணையை ஜே.கே. திரிபாதி, CB CID க்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார்
* தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்துப் பேசினார்
* கேரள உயர்கல்வித்துறை அமைச்சர்
கே.டி.ஜெலீலுக்கு நோட்டீஸ்:
கொச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சுங்கத் துறை நோட்டீஸ்.
தங்க கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் தொடர் விசாரணை.
அமைச்சர் ஜெலீலுடன் சுவப்னா சுரேஷ், நெருங்கிய தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு.
ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் ஜெலீலிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை.
* சமூக வலைதளங்களில் உள்ள பெண்களிடம் பழகி மோசடியில் ஈடுபட்ட நாகர்கோவில் காசி மீது மேலும் ஒரு புகார்:
சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சிபிசிஐடி போலீசாரிடம் புகார்.
மாணவியின் புகாரின் பேரில் காசி மீது பலாத்கார வழக்கை பதிவு செய்தது சிபிசிஐடி.
புகார் தொடர்பாக காசியிடம் விசாரணை நடத்த டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் திட்டம்.
சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட 4 பேர் ஏற்கனவே காசி மீது புகார் அளித்திருந்த நிலையில் மேலும் ஒரு வழக்கு.
* நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வு - மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம்.
தென்னிந்தியாவில் சிறந்த மாவட்டத்திற்கான பிரிவு வேலூர் - முதல் இடம், கரூர் - 2ம் இடம்.
* நாகர்கோவில் காசியை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி:
சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சிபிசிஐடி போலீசாரிடம் புகார். மாணவியின் புகாரின் பேரில் காசி மீது பலாத்கார வழக்கை பதிவு செய்தது சிபிசிஐடி.
புகார் தொடர்பாக காசியிடம் விசாரணை நடத்த டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் திட்டம்.
சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட 4 பேர் ஏற்கனவே காசி மீது புகார் அளித்திருந்த நிலையில் மேலும் ஒரு வழக்கு.
சமூக வலைதளங்களில் உள்ள பெண்களிடம் பழகி மோசடியில் ஈடுபட்ட நாகர்கோவில் காசி மீது மேலும் ஒரு புகார்.
* மக்களை வதைக்கும் மோசமான பொருளாதார கொள்கைகளை மோடி அரசு கடைப்பிடித்து வருகிறது.
விவசாயத்தை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்து வருகிற 26ம் தேதி போராட்டம் நடைபெறும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி.
* காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர் நெய்வேலி காவல்நிலையத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக வந்துள்ள செய்திகள் வேதனையளிக்கின்றன -பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்.
காவல்நிலையச் சாவுகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வேண்டும்.
விருத்தாசலம் காவல்நிலையச் சாவுக்கு காரணமான காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொல்லப்பட்ட செல்வமுருகன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்- மருத்துவர் இராமதாஸ்.
* பண்ருட்டி முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் - மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவு.
கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் கடிதத்தின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் நடவடிக்கை.
திருட்டு வழக்கில் கைதான செல்வமுருகன் காவல் துறையினரால் சித்ரவதை என புகார்.
* பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு, இஸ்ரோவிற்கு - பிரதமர் மோடி வாழ்த்து.
இந்திய விஞ்ஞானிகள் பல தடைகளை முறியடித்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ராக்கெட்டை விண்ணில் செலுத்தி உள்ளனர் - பிரதமர்.
* மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்களை வரும் 12ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்.
மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு இதுவரை 27,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தவறுதலாக பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது - விஜயபாஸ்கர்.
* கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் வேண்டுமென்றே திட்டமிட்டு பதில் மனு தாக்கல் செய்யாமல் காலம் கடத்தப்படுவதாக புகார்.
அலுவலர்களின் கவனக்குறைவால் தேவையில்லாமல் நிதி இழப்பு ஏற்படுகிறது- பள்ளிக்கல்வித்துறை.
இது போன்ற நிதியிழப்பு ஏற்பட்டால் அந்தத் தொகை சம்பந்தப்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் இனி செலுத்த வேண்டும்"-பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.
* பீகார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு - தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு:
தேசிய ஜனநாயக கூட்டணி - 116
மெகா கூட்டணி - 120
லோக் ஜனசக்தி - 1
டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியீடு.
* அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சோதனையில் அக்.1 முதல் நவ.6 வரை ரூ.4.29 கோடி சிக்கியது.
லஞ்சம் பெற்று சோதனையில் பிடிபட்ட 16 அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அறிக்கை.
* பாஜகவின் வேல் யாத்திரையை தடுக்கக் கூடாது என அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்.
முழு விவரங்களுடன் காவல் துறைக்கு கூடுதல் விண்ணப்பம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.
No comments:
Post a Comment