அக்னிப்புரட்சி இன்றைய (09.11.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (09.11.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (09.11.2020) முக்கிய செய்திகள்.

* தமிழகத்தில் இன்று புதிதாக 2,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,46,079 உயர்வு.

சென்னையில் மட்டும் இன்று 585 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,05,419 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் இன்று 18 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,362 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று 2,308 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,15,892 பேர் குணமடைந்துள்ளனர்.

* சென்னையில் 39 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.

* பள்ளிகள் திறப்பு எப்போது? இன்று கருத்துக் கேட்பு கூட்டம்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகங்களிடம்  இன்று கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.

* கேரள தேவாலயம் ஒன்றில் ₹13.5 கோடி கறுப்பு பணம் வருமான வரி சோதனையின் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

* கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ₹25 கோடி, கொங்கு ஈஸ்வரனுக்கு ₹15 கோடி என ஒவ்வொரு கட்சிக்கும் விலைப்பட்டியல் வைத்து மக்களாட்சியை கேலி கூத்தாக்கியது திமுக

அழுக்கை சுமந்து கொண்டு அதிமுக மீது அவதூறு பரப்பும் மு.க.ஸ்டாலினின் செயல் நிலவை களங்கப்படுத்த சேறு அள்ளி வீசுவது போன்றது
- நமது அம்மா, அதிமுக நாளேடு

* தமிழக மீனவர்களுடைய 94 விசைப்படகுகளை அழிப்பதற்கு இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், நடுவண் மாநில அரசுகள் சேர்ந்து படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

* சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு:

சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் 4,922க்கு விற்பனை.

சென்னையில் ஒரு சவரன் ரூ.39,376க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.1,000 அதிகரித்துள்ளது.

* மனு ஸ்மிருதி பற்றி அவதூறாக பேசியதாக விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ்.

உரிய சட்டப்பிரிவுகளை குறிப்பிட்டு புதிய வழக்காக தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் வழக்கு வாபஸ்.

மனு ஸ்மிருதி சட்ட புத்தகம் இல்லை; அதன் மொழிபெயர்ப்பு சரியா? தவறா? என தெரியவில்லை.

மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

அரசியல் பிரச்னைகளுக்கு தீர்வுகாண நீதிமன்றத்தை பயன்படுத்தக் கூடாது -சென்னை உயர்நீதிமன்றம்.

* சென்னை கோயம்பேடு சந்தையில் கூலித் தொழிலாளரின் மூன்று மாதக் குழந்தை கடத்தல்...!

சென்னை கோயம்பேடு சந்தையில் இரவில் படுத்திருந்த கூலித் தொழிலாளரின் மூன்று மாதக் குழந்தை கடத்தப்பட்டது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரத்தைச் சேர்ந்த ரமேஷ் அவர் மனைவி சத்தியா, இவர்களின் இரண்டு குழந்தைகள் சந்தையில் தாங்கள் பணியாற்றும் கடை முன் இரவில் உறங்கியுள்ளனர். இரவில் திடீரென விழித்துப் பார்த்தபோது அருகில் கிடத்தியிருந்த 3 மாதப் பெண் குழந்தையைக் காணவில்லை காவல்துறையினர் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வ.உ.சி சாலையில் நடைபாதையில் படுத்திருந்தவர்களின் பெண் குழந்தையை ஆடி காரில் வந்தவர்கள் கடத்திச் சென்றனர். பிராட்வே பேருந்து நிலையத்தின் நடைபாதையில் படுத்திருந்தவர்களின் ஆண்குழந்தை கடத்தப்பட்டது. ஆனால் இந்த வழக்குகளில் இதுவரை துப்புக் கிடைக்கவும் இல்லை, குழந்தைகள் மீட்கப்படவும் இல்லை.

* புதுச்சேரியில் 5 சிறுமிகளை கூட்டு வன்கொடுமை செய்த கும்பல் சிக்கியது.

6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி சாத்தமங்கலம் பகுதியில் வாத்து பண்ணையில் 5 சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்.

சிறுமிகளை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் சித்ரவதை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

* விருத்தாச்சலம் கிளைச் சிறையில்  முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரணமடைந்த விவகாரம்:

போலீசார் மீது கொலை வழக்கு பதியக் கோரி செல்வமுருகன் மனைவி பிரேமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு.

நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் உடந்தையாக இருந்த காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை.

செல்வமுருகன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யவும் கோரிக்கை.

*:கடந்த 3 ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற எத்தனை மாணவர்கள் மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்?:

கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய மனுதாரருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி நெல்லையை சேர்ந்த ப்ரீத்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில் உத்தரவு.

* கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவை மேலும் 2 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கொச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி.

* கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை தொடர்பான வழக்கில் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்க மும்பை நீதிமன்றம் மறுப்பு.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்கு பதிலாக நடராஜன் சேர்ப்பு - பிசிசிஐ.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா சேர்ப்பு - பிசிசிஐ.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு சொந்த காரணங்களுக்காக விராட் கோலி இந்தியா திரும்புகிறார்  - பிசிசிஐ.

* குட்கா விவகாரம் : டிச.2 முதல் இறுதி விசாரணை.

சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில், உரிமைக்குழு நோட்டீசை எதிர்த்த வழக்குகள் டிசம்பர் 2 ல் இறுதி விசாரணை.

கு.க.செல்வத்துக்கு அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசுக்கும் இடைக்கால தடை.

* மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான உள் இடஒதுக்கீட்டிற்கு மிகவும் காலதாமதமாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது-திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.

சமூகநீதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புள்ள அரசிடம் ஒவ்வொரு முறையும் இடஒதுக்கீடு உரிமையைப் போராடிப் பெற வேண்டியுள்ளது - ஸ்டாலின்.

மருத்துவ மேற்படிப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டையும் கண்டிப்பாகச் செயல்படுத்திட வேண்டும் - ஸ்டாலின்.

* தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் கொலை செய்யப்பட்டிருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம்.

செய்தியாளர் கொலைக்கு காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் - திருமாவளவன்.

* புதுச்சேரியில் சரக்கு வாகனங்களுக்கு 2 மாதங்களும், பயணிகள் வாகனங்களுக்கு 6 மாதங்களும் சாலை வரி தள்ளுபடி - துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல்

* தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக பிற மாநிலங்களுக்கு கிரானைட் கடத்தலைத் தடுக்க மாநில & மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடந்துவருகின்றன - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages