அக்னிப்புரட்சி இன்றைய (10.11.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (10.11.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (10.11.2020) முக்கிய செய்திகள்.

* தமிழகத்தில் இன்று புதிதாக 2,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,48,225 உயர்வு.

சென்னையில் மட்டும் இன்று 577 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,06,024 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் இன்று 25 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 11,387 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று 2,237 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,18,129 பேர் குணமடைந்துள்ளனர்.

* அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரை பதவி நீக்கம் செய்த டிரம்ப். கிறிஸ்டோபர் மில்லரை பொறுப்பு அமைச்சராக நியமித்தார் டிரம்ப்.

2 வாரங்கள் முன்பு இந்தியா வருகை தந்து மோடியை சந்தித்திருந்தார் மார்க் எஸ்பர்.

* சென்னையில் 40 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.

* பள்ளிகள் திறப்பு குறித்து நாளை மறுநாளுக்குள் முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்.

* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1248 குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1248 குறைந்து ரூ.38,128க்கு விற்பனை.
ஒரு கிராம் தங்கம் ரூ.156 குறைந்து ரூ.4766க்கு விற்பனை.

* நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது.

நேற்று நள்ளிரவு 4 மீனவர்கள் கைதான நிலையில் மேலும் 14 மீனவர்கள் கைது.

* சித்த மருத்துவர் தணிகாசலம் மீதான குண்டர் சட்டம் ரத்து.

மற்ற மருத்துவ முறைகளை போன்று இந்திய மருத்துவ முறையையும் சமமாக ஊக்கவிக்க வேண்டும் எனவும் அரசுக்கு  நீதிபதிகள் அறிவுறுத்தல்.

* சென்னையில் உள்ள ஜூவல்லரி நிறுவனங்கள் உட்பட 32 இடங்களில் வருமான வரி புலனாய்வு பிரிவினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

சவுக்கார்பேட்டை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள மோகன்லால் ஜூவல்லரியில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கீழ்ப்பாக்கத்திலுள்ள உரிமையாளர் மோகன்லால் கபாரியின் பங்களா உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மோகன்லால் ஜூவல்லரி நிறுவனம் தங்க நகை மொத்த வியாபாரத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதால், இவர்களின் வணிக தொடர்பின் அடிப்படையில் மும்பையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அண்மையில் போலி நகை சர்ச்சையில் சிக்கிய தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள ஏ.ஐ.கே. நகை கடையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

*:அரசு அனுமதி அளிக்காத நிலையில்  எப்படி யாத்திரை செல்ல முடியும்?

அனுமதி பெறும் வரை பொறுத்திருக்காமல் யாத்திரை நடத்தப்பட்டது ஏன்?

வேல் யாத்திரையை தடுக்க கூடாது என பா.ஜ.க. தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி .

* 15-வது நிதிக்குழு பரிந்துரை அடிப்படையில் தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதியை ஒதுக்கியது மத்திய அரசு.

அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடி, இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.952.58 கோடி ஒதுக்கீடு.

* 243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது:

ஆளும் ஐக்கிய  ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி.

மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 58 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.

பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை:

மொத்த தொகுதிகள்:243,

முன்னிலை நிலவரம்:

பாஜக கூட்டணி: 124

காங் கூட்டணி: 109

மற்றவை: 10

* விருத்தாச்சலம் கிளைச் சிறையில் செல்வமுருகன் வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கம்.

கணவர் மரணத்துக்கு காரணமான காவல் துறையினர் மீது கொலை வழக்கு பதிய கோரி செல்வமுருகன் மனைவி வழக்கு. நவம்பர் 18 ம் தேதிக்குள் காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

* சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு சம்மன்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நாளை முதல் வழக்கு விசாரணை துவக்கம்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 9 போலீசாருக்கு சம்மன்.

போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு.
9 போலீசாரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட உள்ளது.

* அரசு பணியில் உள்ளவர்கள் விதிகளை மீறி அரசின் இலவச சலுகைகளை பெற்றால் பணி நீக்கம் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

* பீகார்: தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவர்களும் தோல்வியடைந்ததாக பின்னர் அறிவிப்பு - ஆர்.ஜே.டி குற்றச்சாட்டு.

* 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை அணி அசத்தல்:

துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது மும்பை.

2013, 2015, 2017, 2019 & 2020 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்று மும்பை சாதனை.

முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டெல்லி அணி போராடி தோல்வி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages