மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் பீதியையும் உண்டாக்கிக்கொண்டிருந்த "நிவர் புயல் " நேற்று நள்ளிரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரையிலான நேரத்தில் புதுச்சேரி - மரக்காணம் இடையே 120 முதல் 140 கி.மீ வேகக் காற்றுடன் கரையை கடந்துள்ளது. சேத்தை உண்டாக்கியுள்ளது. அரசின் மீட்பு நடவடிக்கையும் நிவாரண உதவியும் போர்க்கால அடிப்படையில் இருக்க வேண்டும்- பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் பீதியையும் உண்டாக்கிக்கொண்டிருந்த "நிவர் புயல் " நேற்று நள்ளிரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரையிலான நேரத்தில் புதுச்சேரி - மரக்காணம் இடையே 120 முதல் 140 கி.மீ வேகக் காற்றுடன் கரையை கடந்துள்ளது. சேத்தை உண்டாக்கியுள்ளது. அரசின் மீட்பு நடவடிக்கையும் நிவாரண உதவியும் போர்க்கால அடிப்படையில் இருக்க வேண்டும்- பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

அதிதீவிர நிவர்புயல் புதுச்சேரி - மரக்காணம்இடையே கரையை கடந்த நிலப்பரப்பில்  நகர்ந்து வருவதால் பரவலாக காற்றுடன் கனமழை நீடிக்கிறது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையை கடந்தது. நேற்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரை கடக்கும் நிகழ்வு நீடித்தது. புயல் கரை கடந்தபோது புதுச்சேரி உட்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வரை பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
          
அதன்பின்னர் வலுவிழந்து தீவிர புயலாக நிலப்பரப்பில் வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து வருகிறது. இதன் காரணமாக வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து புயலாக மாறி, அதிக கனமழையை தரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
        
நிவர் புயலின் தாக்கத்தினால் கடலோர மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. சென்னையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. வீடுகளின் கூரைகள் பெயர்ந்து காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. முன்னெச்சரிக்கையாக இருந்ததால் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை என சிலர் பெருமூச்சுவிடும் நிலை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages