அக்னிப்புரட்சி இன்றைய (13.11.2020) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் இன்று புதிதாக 1,939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,54,460 உயர்வு.
சென்னையில் மட்டும் இன்று 512 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,07,686 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் இன்று 14 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,454 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று 2,572 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,25,258 பேர் குணமடைந்துள்ளனர்.
* சென்னையில் 43 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த துணைத்தலைவரும் முன்னாள் எம்.பியுமான ஞானதேசிகன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி.
கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி 100 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம். - தமிழக அரசு.
* செங்கல்பட்டு, சேலம் மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்.
* எத்தனையோ விதமான பண்டிகைகள், விழாக்கள் இருந்தாலும் தீபாவளி மகிழ்ச்சியின் அடையாளமாக உள்ளது.
கொரோனாவிலிருந்து மீண்டு வரும் நேரத்தில், மக்களின் துன்பங்களை போக்குவதற்கான தொடக்கமாக தீபாவளி அமையட்டும். - கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
* தமிழக மக்களுக்கு முதல்வர் தீபாவளி வாழ்த்து:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றுகிறார்.
* சென்னை: யானைகவுனியில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது:
புனேவில் வைத்து 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் நடவடிக்கை.
கொலையான சீத்தலின் மனைவி ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வருகின்றனர்.
குடும்ப தகராறு காரணமாக தாய், தந்தை, மகன் ஆகிய 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
* அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த குழு அமைத்தது தமிழக அரசு.
சூரப்பா மீது பல்வேறு புகார்கள் வந்ததால் நடவடிக்கை - தமிழக அரசு.
ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைப்பு. 3 மாதங்களில் அறிக்கை அளிக்க விசாரணை குழுவுக்கு உத்தரவு.
அரியர் விவகாரம், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களில் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக சூரப்பா மீது புகார்-உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தகவல்.
* திருவண்ணாமலை தீபத் திருவிழா:
தீபத் திருவிழாவின் பரணி தீபம் மற்றும் மகாதீபம் நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க தடை - மாவட்ட ஆட்சியர்.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு 5,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி - மாவட்ட ஆட்சியர் கந்தசாமி.
வரும் 17-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஒருநாளைக்கு 5,000 பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதி.
* சூரப்பா செய்தியாளர் சந்திப்பு:
“எனக்கு எதிராக தமிழக அரசு விசாரணை குழு அமைத்துள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது”- அண்ணா பல்கலை., துணை வேந்தர் சூரப்பா.
என் மகள் அண்ணா பல்கலை.,யில் பணிபுரியவில்லை; எந்த ஒரு முறைகேட்டிலும் ஈடுபடாத நான் ஏன் பதவி விலக வேண்டும்- துணை வேந்தர் சூரப்பா
நான் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியது இல்லை; எந்த தவறும் செய்யாத எனக்கு விசாரணை ஆணையத்தை எதிர்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை- சூரப்பா.
* பாக்., ராணுவ வீரர்கள் 8பேர் பலி:
இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 8பேர் வரை பலி என தகவல்.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியதில் இந்திய ராணுவ வீரர்கள் 3பேர் மற்றும் பொதுமக்கள் 3 பேர் பலி.
காஷ்மீரில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி.
உயிரிழந்த பாக்., ராணுவ வீரர்களில் அந்நாட்டின் கமாண்டோ வீரர்கள் இருவரும் அடங்குவர் - இந்திய ராணுவ வட்டார தகவல்.
பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலின் வீடியோ வெளியீடு.
* கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு:
சிறுபனையூர் தக்கா கிராமத்தில் ஷான் என்பவர் மீது ஹாரூண் துப்பாக்கி சூடு.
உரிமம் பெற்ற கைத் துப்பாக்கியை வைத்து சுட்டதாக விசாரணையில் தகவல்.
சென்னையை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் நடந்த சம்பவத்தால் பரபரப்பு.
* தமிழகம் - கர்நாடகா இடையே வரும் 16ஆம் தேதிக்கு பிறகும் பேருந்துகள் இயக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி.
தீபாவளியையொட்டி, வரும் 16ஆம் தேதி வரை பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து இயங்க உத்தரவு.
* அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா பதவியில் நீடிக்க கூடாது; இடைநீக்கம் செய்ய வேண்டும் .
சூரப்பா தொடர்ந்து பதவியில் நீடிப்பது விசாரணைக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும் - திருமாவளவன் எம்.பி.
No comments:
Post a Comment