அக்னிப்புரட்சி இன்றைய (15.11.2020) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் இன்று புதிதாக 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,58,191 உயர்வு.
சென்னையில் மட்டும் இன்று 502 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,08,668 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் இன்று 12 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,478 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று 2,520 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,30,272 பேர் குணமடைந்துள்ளனர்.
* மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
மாலை 5 மணிக்கு மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.
நாளை கார்த்திகை 1 ஆம் தேதி முதல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுகிறார்கள்.
பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 26-ந் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந் தேதியும் நடைபெறும்.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொரோனா இல்லை என்னும் மருத்துவ சான்றிதழோடு வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
தினசரி 1000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும், மண்டல மகர விளக்கு நாட்களில் 5 ஆயிரம் பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள்.
* சென்னையில் 45 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* சிலிண்டர் வெடித்து விபத்து:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதுகாமூர் சாலை பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் கவலைக்கிடம்.
* அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், காவிரி டெல்டா, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
- வானிலை ஆய்வு நடுவம்.
* நடுவண் உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 21ஆம் தேதி தமிழகம் வருகிறார்
பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அமித் ஷா தமிழகம் வருவது முக்கியத்துவம் பெறுகிறது
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், அரசியல் சூழல் குறித்து கலந்தாய்வு செய்வார் என தகவல்.
* பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (RCEP) 15 நாடுகள் இன்று கையெழுத்திட்டுள்ளன
சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் 10 ASEAN நாடுகள் கையெழுத்து
RCEPல் சேரப் போவதில்லை என இந்தியா முன்பே கூறியிருந்தது
* விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பட்டாசு வெடித்ததில் தகராறு:
இருதரப்பினர் மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு - 4 பேர் காயம்.
சாலை மறியலில் ஈடுபட முயற்சி - சம்பவ இடத்தில் போலீஸ் குவிப்பு.
* நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 8 மாவட்டங்களில் ஒரு வழக்கும் பதிவாகவில்லை:
வேலூர், நெல்லை, கடலூர், விருதுநகர், அரியலூர், திருப்பத்தூர், பெரம்பலூர், புதுக்கோட்டையிலும் பட்டாசு விதிமீறல் தொடர்பாக எந்த வழக்கும் பதிவாகவில்லை என தகவல்.
சென்னை, மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, திண்டுக்கல் மாவட்டங்களில் பட்டாசு விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீபாவளி நாளில் 106 தீ விபத்துகள் நேரிட்டுள்ளது.
சென்னையில் ராக்கெட் வெடியால் 33 விபத்துகளும், மற்ற பட்டாசுகளால் 7 விபத்துகளும் ஏற்பட்டுள்ளது.
- தீயணைப்புத்துறை தகவல்.
* கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மர்ம மரணம்:
பிரேத பரிசோதனைக்குப் பிறகே யானையின் உயிரிழப்புக்கு காரணம் தெரியும் என அதிகாரிகள் தகவல்.
* செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 20 அடியை தாண்டியது:
முழு கொள்ளளவான 24 அடியை வேகமாக நெருங்குகிறது செம்பரம்பாக்கம் ஏரி.
ஏரியின் நீர்மட்டம் 21 அடியை எட்டியதும் தண்ணீர் திறக்கப்படும். எந்த நேரத்திலும் நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது.
நீர்மட்டம் 20 அடியை தாண்டியதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு.
பொதுமக்கள் யாரும் ஏரிப்பகுதிக்கு செல்லாத வகையில் போலீசார் தீவிர பாதுகாப்பு.
* மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா; வரும் 21ஆம் தேதி தமிழகம் வருகிறார்:
பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அமித் ஷா தமிழகம் வருவது முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், அரசியல் சூழல் குறித்து ஆலோசிப்பார் என தகவல்.
* திருவண்ணாமலை: ஆரணி சிலிண்டர் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம். படுகாயம் அடைந்தவர் களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம். - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் என அறிவிப்பு.
"வீட்டில் சிலிண்டர் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்" - முதல்வர் வேண்டுகோள்.
* பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு:
பாட்னாவில் நடைபெற்ற பாஜக கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் முடிவு.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி அறுதி பெரும்பான்மை பெற்றது.
நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை விட பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், நிதிஷ் தேர்வு.
ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் பாஜக 74 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.
ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிதிஷ்குமாரை மீண்டும் முதல்வராக்க முடிவு.
* தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வேல் யாத்திரையில் பங்கேற்க மாட்டார். அமித்ஷாவின் வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை தரும் - எல்.முருகன், தமிழக பாஜக தலைவர்.
* பிரபல வங்காள நடிகர் செளமித்ர சாட்டர்ஜி கொல்கத்தாவில் காலமானார்:
சர்வதேச, இந்திய மற்றும் வங்காள சினிமா இன்று ஒரு மேதையை இழந்துவிட்டது. மேற்கு வங்காளத்திற்கு இன்று சோகமான நாள். குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் செளமித்ர பானர்ஜியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும். - மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி.
* ரஷ்யாவின் Sputnik கொரோனா தடுப்பு மருந்தின் 2 மற்றும் 3ம் கட்ட மனித சோதனைகளுக்காக Sputnik தடுப்பூசிகள் அடுத்த வாரம் கான்பூருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.
தடுப்பூசி சோதனைக்காக 180 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.
* கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும்- தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம்.
* மணிப்பூர் முதல்வருக்கு கொரோனா:
எனக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது; என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும்” - மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்.
* கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசுபாடு குறைவு:
ஆனாலும் திருவல்லிக்கேணி, செளக்கார்பேட்டையில் நிர்ணயிக்கப்பட்டதை விட காற்று மாசுபாடு அதிகம்.
காற்று தரக் குறியீடு
பெசண்ட் நகர் 62
தி நகர் 72
நுங்கம்பாக்கம் 59
திருவல்லிக்கேணி 107
செளக்கார்பேட்டை 100.
* சென்னை சௌகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான மூவருக்கும் நவ.27 வரை நீதிமன்றக் காவல்:
நீதிமன்ற உத்தரவை அடுத்து சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைப்பு.
* விழுப்புரம்: தெற்கு மாவட்டம், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.அய்யனார் அவர்களின் மீது ஆளுங்கட்சியினரின் தூண்டுதலால் பொய் வழக்கு பதிவு செய்திருக்கும், காவல் துறையினருக்கு கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தல் முன்விரோதத்தினால் திரு.அய்யனார் அவர்களுக்கு தொடர்ந்து தொல்லைக்கொடுத்து வருபவர்கள் மீதும், அவரது சகோதரி வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீதும்; அதனை செய்தி சேகரிக்க சென்ற ஜெயா டிவி ஒளிப்பதிவாளரை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட திரு.அய்யனார் மீது வழக்கு பதிந்திருப்பது கண்டனத்திற்குரியது.
* தடையை மீறி பட்டாசு வெடித்ததாக, தமிழகம் முழுவதும் மொத்தம் 1027 வழக்குகள் பதிவு:
சென்னையில் அதிகபட்சமாக 428 வழக்குகள் பதிவு.
மதுரை மாவட்டத்தில் 154 வழக்குகள் பதிவு.
* அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெற்ற வெற்றி முறைகேடாக பெறப்பட்டது; வாக்கு எண்ணிக்கையின் போது கண்காணிப்பாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை- டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு.
No comments:
Post a Comment