அக்னிப்புரட்சி இன்றைய (17.11.2020) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் இன்று புதிதாக 1,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,61,568 உயர்வு.
சென்னையில் மட்டும் இன்று 492 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,09,646 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் இன்று 18 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,513 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று 2,314 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,34,970 பேர் குணமடைந்துள்ளனர்.
*;தியேட்டர் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் ஒருவர் பலி.
பழனி அருகே தியேட்டர் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் ஒருவர் பலி.
தியேட்டர் உரிமையாளர் சுட்டதில் காயமடைந்த சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி பலி.
* சென்னையில் 47 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* பாஜகவின் வேல் யாத்திரை டிசம்பர் 6க்கு பதில் டிசம்பர் 7ம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும் என அறிவிப்பு.
பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6ல் வேல்யாத்திரையை நிறைவு செய்ய எதிர்ப்பு எழுந்த நிலையில் மாற்றம்.
* க்ரியா பதிப்பகம் ராமகிருஷ்ணன் காலமானார்:
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த க்ரியா பதிப்பகம் க்ரியா ராமகிருஷ்ணன் (76) காலமானார்.
* எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு ஐ.என்.ஐ செட் என தனி நுழைவுத்தேர்வு நடத்துவது கண்டனத்திற்குரியது - திமுக தலைவர் மு.க ஸ்டாலின்.
* தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமானது பெரம்பலூர் மாவட்டம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,228 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
நேற்று ஒருவருக்கு கூட கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
* பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது-தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தகவல்.
மற்ற விஷயங்களை விட கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே விருப்பம்- தினேஷ் குண்டுராவ்
"கடும் போட்டி நிலவும் 100 தொகுதிகளில் திமுகவுக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம்"
"கடந்த தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் பாடுபடும்"
எதார்த்த அணுகுமுறையின் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு நடக்கும்- தினேஷ் குண்டுராவ்.
* விருத்தாசலம் கிளை சிறையில் கைதி செல்வமுருகன் உயிரிழந்த சம்பவம் : வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு வேல்முருகன் பரபரப்பு புகார்.
மரணமடைந்த கைதி மீது பொய் வழக்கு : த.வா.க. தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டு
தற்போது வெளியிட்டுள்ள ஆதாரங்களை பெற்று அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் - சிபிசிஐடி போலீசார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார்.
விருத்தாசலம் கிளை சிறையில் முந்திரி வியாபாரி செல்வமுருகன் உயிரிழந்த சம்பவம். பொய் வழக்கு என வேல்முருகன் குற்றச்சாட்டு. வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பு புகார்.
* மதுரையில் ஆழ்துளை கிணறு மூலம் அனுமதியின்றி குடிநீர் எடுத்து விற்பனை செய்த 10 நிறுவனங்களுக்கு சீல்.
ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுத்து நிறுவனங்களுக்கு விற்றதால் சீல்வைத்து கோட்டாட்சியர் நடவடிக்கை.
* பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகை.
சென்னை விமான நிலையம் வந்த வெங்கையா நாயுடுவை முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் வரவேற்றனர்.
* லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு வர்த்தகத் தடை விதித்து நிதியமைச்சகம் அதிரடி:
லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ள வர்த்தகத் தடை இன்று மாலை 6 மணி முதல் டிசம்பர் 16 வரை அமலில் இருக்கும் என்று நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
ரேன்பாக்ஸி நிறுவனத்துக்கு வழங்கிய ரூ.720 கோடி கடன் திரும்ப வராததை அடுத்து சிக்கலில் மாட்டியது லக்ஷ்மி விலாஸ் வங்கி.
இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரூ.25,000 க்கு மேல் பணம் எடுக்க முடியாது - லக்ஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிதி அமைச்சகம் கட்டுப்பாடு.
* சென்னையில் நவம்பர் 21-ல் ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் அமித்ஷா.
சென்னையில் நவம்பர் 21-ல் ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டுகிறார்.
* திருவள்ளூர் தேர்வாய்கண்டிகையில் ரூ.400 கோடியில் அமைத்த புதிய நீர்த்தேக்கத்தை அமித்ஷா அர்பணிக்கிறார். முடிவுற்ற பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கும் அமித்ஷா அடிக்கல் நாட்டுகிறார்.
No comments:
Post a Comment