வன்னியர் சங்கம் & பா.ம.க - நடத்தும்
20% தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டம்
வாழ்வதற்கான அடிப்படை உரிமை பெற்றிட மருத்துவர் அய்யா அவர்கள் வழியில் அனைவரும் 1.12.2020 நாளை காலை 10.00 மணிக்கு சென்னைக்கு வாருங்கள்..வாருங்கள்..போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
ஒன்றிணைவோம்! வென்றெடுப்போம்!
போராட்டத்தின் வெற்றி உங்கள் ஒவ்வொருவரின் கையில் உள்ளது
புறப்பட்டு வாருங்கள்...
போராட்டக்குழு தலைவர் ஜி.கே.மணி வேண்டுகோள்.
1987 இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்கம் செய்வோம்...
இனமானச் சொந்தங்களே! இட ஒதுக்கீட்டுப் போராளிகளே!
நமது அமைப்புகளின் அனைத்து நிர்வாகிகளே! முன்னோடிகளே!
இயக்கப் பணியே வாழ்க்கை என இன்றுவரை உழைத்து வரும்
மருத்துவர் அய்யாவழியில் அர்ப்பணித்து செயலாற்றும்
பேரன்புமிக்க பொறுப்பாளர் சொந்தங்களே! வாகனங்கள் ஏற்பாடு செய்திருப்பீர்கள் சென்னை நோக்கி புறப்படுங்கள்! ஒன்றிணைந்து வாருங்கள்!
அன்புத் தம்பிகளே! வீரம் மிக்க இளம் சிங்கங்களே! வீறுகொண்டு வாருங்கள்! எழுச்சியோடு வாருங்கள்!
வெற்றி முகத்தோடு முழக்கமிட்டு வாருங்கள்! அருமைச் சகோதரிகளே! சக்திமிக்க வீராங்கணைகளே!
இலட்சிய வேட்கையோடு வாருங்கள் !
மாட்சிமை மிக்க மாணவச் செல்வங்களே! மானம் காக்க வாருங்கள் கொடி ஏந்தி வாருங்கள் கொள்கையை வென்றெடுக்க
முழக்கமிட்டு வாருங்கள் உரிமையை பெற்றிட நீங்கள் தான் உங்கள் குடும்பத்தின் சொத்து
உங்கள் முன்னேற்றமே குடும்பத்தின் உயர்வு நீங்கள் தான் நம் சமுதாயத்திற்கும் சொத்து
நீங்கள்தான் எங்களுக்கும் சொத்து
எங்கள் சொத்தை மேம்படுத்த இட ஒதுக்கீடே இலட்சியம்.
வாகனத்தில் உணவு எடுத்து வாருங்கள் பசியைப் போக்க
வழியில் வண்டியை நிறுத்தாதீர் உணவகங்கள் செல்லாதீர்கள்
வண்டியில் தண்ணீர் கொண்டு வாருங்கள் தாகம் தீர்க்க
முகக்கவசம் அணிந்து வாருங்கள் முழுப் பாதுகாப்புக்கு கூட்டம் கூட்டமாய் வாருங்கள் கட்டுப்பாடு காத்திடுங்கள்
சென்னை நிலை குலையும் வியக்கவைக்கும் பெருங்கூட்டத்தால்
அரசு அதிவேகமாய் முடிவெடிக்கட்டும்
அலை அலையாய் வரும் போராட்ட கூட்டம் கண்டு உரிமை கிட்டும் வரை உயர்ந்து நிற்போம் போராட்டத்தில்
20% தனி இட ஒதுக்கீடு பெறும் வரை இனி ஓயப் போவதில்லை
மருத்துவர் அய்யா வழியில் இட ஒதுக்கீடு பெற்றே தீருவோம்
அடிப்படை உரிமை பெற ஒன்றிணைவோம் வீரத்தோடு நிற்போம் வேகத்தோடு களம் காண்போம் வாருங்கள்! வாருங்கள்! உரிமையை வென்றெடுக்க!
வெற்றி உங்கள் ஒவ்வொருவரின் உறுதியான போராட்டத்தில் உள்ளது...
No comments:
Post a Comment