வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு ஏன்? அரசியல் சாசனம் வகுத்துள்ள அடிப்படை உரிமையின்படி அடித்தட்டில் வாழும் மக்களை மேம்படுத்துவதற்கான சமூகநீதி. - வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டு போராட்டக் குழு தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு ஏன்? அரசியல் சாசனம் வகுத்துள்ள அடிப்படை உரிமையின்படி அடித்தட்டில் வாழும் மக்களை மேம்படுத்துவதற்கான சமூகநீதி. - வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டு போராட்டக் குழு தலைவர் ஜி.கே.மணி

Share This

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு ஏன்? அரசியல் சாசனம் வகுத்துள்ள அடிப்படை உரிமையின்படி அடித்தட்டில் வாழும் மக்களை மேம்படுத்துவதற்கான சமூகநீதி. - வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டு போராட்டக் குழு தலைவர் ஜி.கே.மணி                   
          
“சமூகநீதி” என்றால் என்ன?    
வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு ஏன்? தனி ஒதுக்கீடு கோருவது யாருக்கும் எதிரானதல்ல. எல்லா சமுதாயத்தினருக்கும் உரிய வகையில் இட ஒதுக்கீடு வேண்டும்.ஒவ்வொரு சமுதாயத்திற்கும் உரிய அளவில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே இந்திய அரசியல் சாசனம் (அரசியலமைப்புச் சட்டம்) வகுத்துள்ள அடிப்படை உரிமை.                    
        
“சமூகநீதி" என்றால் என்ன? மக்கள் கூட்டத்திற்கு சமூகம் என்று பெயர். சமூகத்தில் அநீதி உள்ளது, உரிய நீதி வேண்டும் என்பதே சமூகநீதி ஆகும். சமூகநீதியின் ஓர் அங்கம் இட ஒதுக்கீடு. தமிழக அரசின் கல்வி, வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீட்டு முறையில் மிகப்பெரிய மோசடிகள்,கோளாறுகள், குளறுபடிகள் நிறைந்துள்ளன. தமிழ்நாட்டில் தனிப் பெரும்பான்மை மக்கள் தொகையைக் கொண்ட சமுதாயத்திற்கு  கல்வி, வேலைவாய்ப்பில் உரிய இடம் கிடைக்காமல் பொருளாதாரத்தில் மிக மிக பின் தங்கியவர்களாக, விவசாயத்தையே நம்பி வாழ்பவர்களாக, விவசாயிகளாக, விவசாயக் கூலித் தொழிலாளர்களாக, கல் உடைப்பவர்களாக,ஆடு மாடு மேய்ப்பவர்ளாக காலங்காலமாக அடித்தட்டிலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வன்னியர்கள். நாடு சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகள் ஆகியும் வன்னியர்கள் எல்லோரும் முன்னேற்றம் அடையவில்லையே? ஏன்? அரசின் ஐந்தாண்டு திட்டங்களும், சட்டங்களும் பல்வேறு வகையான மேம்பாட்டுத் திட்டங்களும் அரசின் நிதி ஒதுக்கீடும் வன்னியர்கள் எல்லோரையும் முன்னேற்றம் அடையச் செய்யவில்லையே? குடிசை வீடுகளில் வாழ்பவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம் உள்ளதே? தமிழ்நாட்டில் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட வன்னியர்கள் முன்னேறாமல்  தமிழ்நாடு வளர்ச்சி  பெற்ற மாநிலமாக, முதன்மை மாநிலமாக எப்படி கருத முடியும்? அனைத்து தரப்பு மக்களின் சமச்சீர் வளர்ச்சி தானே தமிழ்நாட்டின் முன்னேற்றம். முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருக்கின்ற கல்வி, அரசின் வேலைவாய்ப்பில் மக்கள் தொகைக்கேற்ப உரிய இட ஒதுக்கீடு இல்லாமல் எப்படி முன்னேற்றம் காண முடியும்?                 
         
மனிதனின் மிக முக்கிய மூன்று அடிப்படைத் தேவைகளான 1.உணவு 2.உடை3.இருப்பிடம் ஆகியவற்றில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள்  நிறைந்துள்ளன.
      
1.ஒரு நாளைக்கு மூன்று வேளையும் சரிவிகித அறுசுவை உணவு உண்பர்வகளும் உண்டு. ரேசன் அரிசியை நம்பியே வாழ்பவர்களும் உண்டு. ரேசன் அரிசி பற்றாக்குறையாக உள்ளவர்களும் உண்டு. எனவே உயிர் வாழும் உணவு முறையில் எவ்வளவு வேறுபாடுகள்.  
     
2. ஆண்டுதோறும் தீபாவளிக்கு தைப் பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலையை எதிர்பார்த்து காத்திருந்து அதை வாங்கி உடுத்தி வருபவர்களும்,பள்ளிகளில் இலவச சீருடையை எதிர்பார்த்திருக்கும் பள்ளி மாணவர்களும் மாணவிகளும் உண்டு. அதே நேரத்தில் விலை உயர்ந்த உடை அணிந்து மிடுக்குடன் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ - மாணவிகளும் உண்டு.
        
3.இருப்பிடமான மாடமாளிகை, கூட கோபுரங்கள்போல பங்களாக்களில் வாழ்பவர்களும் உண்டு.இரண்டு, மூன்று தலைமுறை காலமாக குடிசை வீடுகளிலே வாழ்பவர்களும் உண்டு.      மிகத் தரமான தனியார் பள்ளிகளில் படிப்பதுடன் வீடுகளில் தனி  ஆசிரியர்களை வைத்து படிப்பவர்களும்  உண்டு. அடிப்படை கட்டுமான வசதிகூட இல்லாத 5 ஆம் வகுப்பு வரை இரண்டே ஆசிரியர்கள் உள்ள  பற்றாக்குறை அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் ஏராளம் உண்டு.       
      
மேற்குறிப்பிட்டுள்ளவாறு உணவு,உடை, வீடு, கல்வி,வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட வாழ்வாதாரம் எல்லாவற்றிலும் மிக மிக பின்தங்கிய நிலையிலேயே உள்ள மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மை மக்கள் வன்னியர்கள். பள்ளத்தில் உள்ளவர்களுக்கு கை கொடுத்து மேலே தூக்கி விடுவதுபோல மிக மிக நலிந்தவர்கள் முன்னேறுவதற்கு  அரசின் தனி இட ஒதுக்கீட்டு முறை தேவைதானே! இது சலுகை அல்ல. இது அரசியல் சாசனம் வகுத்துக் கொடுத்துள்ள அடிப்படை உரிமை.   
    
எனவே மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக போராடி வந்தாலும் கிட்டவில்லை. காலத்தின் கட்டாயம். அரசின் சிறப்புத் திட்டங்களும் தேவை. வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இல்லையேல் வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கும் தொடர் போராட்டம் தீவிரம் அடையும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages