அக்னிப்புரட்சி இன்றைய (22.11.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (22.11.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (22.11.2020) முக்கிய செய்திகள்.

* தமிழகத்தில் இன்று புதிதாக 1,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,69,995 உயர்வு.

சென்னையில் மட்டும் இன்று 489 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,12,014 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் இன்று 19 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,605 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று 2,010 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,45,848 பேர் குணமடைந்துள்ளனர்.

* ஒரே மாதத்தில் 3-வது முறையாக மதுரையில் தீ விபத்து:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகேயுள்ள ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து.

10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரம்.

* சென்னையில் பெட்ரோல் விலை 7 காசுகள் அதிகரித்து, லிட்டர் ரூ.84.53 ஆகவும், டீசல் விலை 18 காசுகள் அதிகரித்து ரூ.76.55 ஆகவும் விற்பனையாகிறது.

* தமிழ்நாடு- ஆந்திரா இடையே பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வரும் 25ம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து ஆந்திரா சென்று வர இ பாஸ் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் திருப்பதி, சித்தூர், விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பல லட்சம் பேர் பயன் அடைவார்கள்.

ஏற்கனவே கர்நாடகா, புதுச்சேரிக்கும் தமிழக அரசு போக்குவரத்தை அனுமதித்துள்ளது.

* மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சந்திப்பு.

உயர்கல்வித்துறையில் மத்திய அரசு - தமிழக அரசு இடையே பல முரண்பாடுகள் உள்ள நிலையில் சந்திப்பு.

* விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிய வேண்டாம்- தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம்.

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்வதை நிறுத்தினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிய வேண்டாம் என தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம்.

* அதிமுக கூட்டணியில் பாஜக தரப்பில் 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாக தகவல்.

25 தொகுதிகள் வரை கொடுப்பதாக அதிமுக உறுதி அளித்ததாக தகவல்.

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக அதிமுக தலைமை உறுதி.

அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இருவரும் தெரிவித்திருந்தனர்.

* வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25ம் தேதி புயலாக மாறி கரையை கடக்கும் என வானிலை மையம் கணிப்பு.

நாளை முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல். கனமழை எச்சரிக்கை காரணமாக அடுத்த 5 நாட்கள் அரசு அதிகாரிகளுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

தலைமை இடத்திலேயே தங்கியிருந்து மழை பாதிப்பு நிலவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்- கடலூர் ஆட்சியர்.

நவம்பர் 25ம் தேதி மகாபலிபுரம், காரைக்கால் இடையே புயல்  கரையை கடக்க  வாய்ப்பு!

* அடுத்த 3  நாட்களுக்கு , தஞ்சை, திருவாரூர், நாகை, புதுவை, கடலூர் அரியலூர், பெரம்பலூர், காரைகாலில் அதி கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

* கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு நவ.25 முதல் அனுமதி: தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 25ம் தேதி முதல் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அரங்கங்கள் மற்றும் மூடப்பட்ட அறைகளில் 50% நபர்களுடன் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசியல் மற்றும் மதம் தொடர்பான கூட்டங்களுக்கு தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* குத்தாலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கைது:

அனுமதி இன்றி பிரச்சாரம் செய்ததாக உதயநிதி ஸ்டாலின் கைது.

3 நாள் பிரச்சாரத்தில் 3வது முறையாக உதயநிதி கைது.

உதயநிதி கைதை தொடர்ந்து போலீசார் - திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு.

* தைப் பொங்கலுக்கு நேரடி தேர்தல் பிரசாரம் -திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.

நாடாளுமன்ற தேர்தல் களத்தில் தமிழக மக்கள் கொடுத்த அடியை விட சட்டமன்ற தேர்தலில் பலமான அடியை தருவார்கள் - ஸ்டாலின்.

தமிழகத்தை வஞ்சித்து வரும் சக்திகளுக்கு 2021 தேர்தலில் மக்கள் பாடம்  புகட்டுவார்கள்- ஸ்டாலின்.
தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தகவல்.

* நவம்பர் 24 அன்று மணிக்கு 55-65 கிமீ வேகத்திலும் (அதிகபட்சம்  75 கிமீ) வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

நவம்பர் 25 அன்று மணிக்கு 80-90 கிமீ வேகத்திலும் (அதிகபட்சம்  100 கிமீ) வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது. : மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்

🔵 எழுவோம்! வெல்வோம்!!
- சுகி சிவம், அகிலா ராஜேஸ்வரி பங்குபெறும் Online Webinar

How to achive an outstanding  success in both personal and professional life, in this pandemic situation- online webinar By  Mr.Sukisivam and
Mrs.Akila Rajeswar,

A Fund raising event, organized by our Anandham youth foundation to support the higher education of under privileged rural students.

Date: 28-Nov-2020 | Saturday 6:00 PM |  Donor pass: Rs.1000 per person or more as you wish.

உங்களை புதுப்பித்துக்கொள்ள நீங்கள் முதலீடு செய்யும் இந்த தொகை,
ஓர் வசதியற்ற மாணவரின் உயர்கல்விக்கும் உதவட்டும்.
அந்த குடும்பமே உங்களை வாழ்த்தட்டும்.

With Thanks..

S.Selvakumar
Founder-Anandham youth foundation.
CEO, Marurhi power controls.

9841013532
www.anandham.org

https://www.instamojo.com/@anandhamfoundation/

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages