அக்னிப்புரட்சி இன்றைய (26.11.2020) முக்கிய செய்திகள்.
* நிவர் புயல் கரையை கடந்தாலும் சென்னையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
கடந்த 14 மணி நேரத்தில் கடலூரில் 227 மிமீ மழையும், புதுச்சேரியில் 187 மிமீ மழையும், காரைக்காலில் 187 மிமீ மழையும், சென்னையில் 89 மிமீ மழையும், நாகப்பட்டினத்தில் 62மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் புதுச்சேரி அருகே முழுமையாக கரை கடந்தது
25-11-2020 இரவு 10.58 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய ‘நிவர்’ புயல், 26-11-2020 அதிகாலை 3.58 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது!
- வானிலை ஆய்வு மையம் தகவல்
* எதிர்பார்த்த நிலையில், புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் நிவர் புயல் கரையை கடந்தது.
மக்களின் முழு ஒத்துழைப்பிற்கு நன்றி - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
* கரையைக் கடந்தது நிவர் புயல்
அடுத்த 6 மணிநேரத்திற்குள் மேலும் வலுவிழக்கக் கூடும்.
தமிழகம், புதுச்சேரியின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் இடியுடன் கூடிய தீவிர கனமழை எச்சரிக்கை:
புதுச்சேரி, கடலூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்யும் என அறிவிப்பு.
அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காரைக்கால், திருச்சி, திருப்பத்தூரில் அடுத்த 3 மணிநேரம் மிதமான மழை பெய்யும்.
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கன அடியிலிருந்து மீண்டும் 9000 கன அடியாக அதிகரிப்பு.
* மழை விபரம்!
நவ.25ம் தேதி காலை 8.30 மணி முதல் இன்று (நவ.26) அதிகாலை 3.30 மணி வரை பதிவாகியுள்ள மழையின் விவரம்!
புதுச்சேரி - 26.செ.மீ
கடலூர் - 25 செ.மீ
சென்னை - 8 செ.மீ
காரைக்கால் - 9 செ.மீ
நாகப்பட்டினம் - 6 செ.மீ
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1500 கனஅடியாக குறைப்பு!
ஏரிக்கு நீர் வரத்து குறைந்ததால் அதிகாரிகள் நடவடிக்கை!
ஏரியின் நீர் மட்டத்தை 21 அடியில் நிலையாக வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு!
சென்னையில் விமான சேவை காலை 9 மணி முதல் துவங்கும்!
சென்னை விமான நிலையம் செயல்பட தொடங்கியது!
காலை 6 மணி முதல் டெல்லி, அந்தமான், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு செல்ல பயணிகள் வந்தனர்!
சென்னையில் இன்று பிற்பகலுக்குள் படிபடியாக மின் விநியோகம் தொடங்கும்...!
சென்னை தவிர கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் மழைநீர் வடிய வடிய மின் சேவை வழங்கப்படும் - அமைச்சர் தங்கமணி தகவல்!
* புயல் பாதிப்புகளை பார்வையிட கடலூர் செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி:
இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூர் செல்ல உள்ளதாக தகவல்.
மழை தொடர்ந்து பெய்வதால் தண்ணீர் தேங்கி உள்ளது- ககன்தீப் சிங் பேடி.
மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன- ககன்தீப் சிங் பேடி
நிவர் புயலால் கடலூரில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை- ககன்தீப் சிங் பேடி.
* மீண்டும் கடலூருக்கு சோதனை:
தென் கிழக்கு வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக மாறும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணிப்பு.
கடலூருக்கு தெற்கே டிசம்பர் 2ம் தேதி கரையை கடக்க வாய்ப்பு என தகவல்.
* 7 மாவட்டங்களில் மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும் - தமிழக அரசு.
நிவர் புயல் கரையை கடந்த நிலையில் அரசு உத்தரவு.
முன்னெச்சரிக்கையாக கடந்த 24ம் தேதி நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் மீண்டும் இயக்கம்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடக்கம் - மெட்ரோ ரயில் நிர்வாகம்.
நிவர் புயல்! தரைப் பகுதியில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் காரணமாக பெங்களூரில் கனமழை பெய்து வருகிறது.
* சென்னையில் நிகர் புயல் பாதிப்பு பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
* புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு 28-ந்தேதி வரை விடுமுறை நீட்டிப்பு
* 2015 பெரு வெள்ளத்திலிருந்து அதிமுக அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை"
மழை - வெள்ளம் - புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.5000 வழங்க வலியுறுத்தல்.
"இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை மூலம் வெள்ள பாதிப்பை எச்சரித்தார்"- ஸ்டாலின்.
* வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் -வானிலை ஆய்வு மையம் தகவல்.
நிவர் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலு குறையும்.
அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்- வானிலை மையம்.
நிவர் தற்போது வட தமிழக கடலோரப் பகுதியில் சென்னைக்கு தென்மேற்கே 95 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
* நிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடமும், புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்தார் அமித்ஷா.
* கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படும் என திருத்தம் கோரிய வழக்கு:
விருப்பப் பாடமாக மட்டும் தமிழ் இருக்கும் என்பதை ஏற்க முடியாது -உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து.
தமிழுக்காக மட்டும் கேட்கவில்லை, அனைத்து மாநில மொழிகளுக்காகவும் கேட்கிறோம்.
விரிவான உத்தரவிற்காக வழக்கு
விசாரணையை நாளை ஒத்தி வைத்து உத்தரவு.
* சென்னையில் 400க்கும் கீழ் கொரோனா வைரஸ் பாதிப்பு!
தமிழகம் - 1464
சென்னை- 396
மரணம் - 14
குணம் - 1797
💥முதல்முறையாக பொங்கல் திருநாளுக்கு உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிப்பு.
No comments:
Post a Comment