அக்னிப்புரட்சி இன்றைய 27.11.2020) முக்கிய செய்திகள்.
* மாவட்ட ஆட்சியர், மருத்துவ நிபுணர்களோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை.
டிசம்பர் மாத ஊரடங்கு தளவர்வுகள் தொடர்பாக முதல்வர் நாளை ஆலோசனை.
* சென்னையில் பெட்ரோல் விலை 17 காசுகள் அதிகரித்து 84.91 ரூபாய்க்கும், டீசல் விலை 22 காசுகள் அதிகரித்து 77.30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
* இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு.
* கண்ணீர் புகைக்குண்டு வீசி விவசாயிகளை கலைக்கும் காவல்துறை:
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்காக டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகள் தடுத்து நிறுத்தம்.
* உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 6-வது முறையாக தொடர்ந்து தமிழகம் முதலிடம்.
தமிழக சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று விருது வழங்குகிறார்.
புதுக்கோட்டையில் இருந்து காணொலி மூலம் விருதை பெறுகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
* மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 % இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை":
மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு
உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு.
மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு.
தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் 25 கல்லூரிகளில் 584 இடங்கள் ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை.
* மதுரை: காவல்நிலையத்தில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய செக்கானூரணி எஸ்.ஐ. அனிதா கைது.
* அண்ணா பல்கலை. துணைவேந்தர் மீதான புகார்கள் குறித்து நாளை முதல் நேரடியாக புகார் அளிக்கலாம்.
புகார் கொடுத்தவர்களுக்கு அடுத்த வாரம் நோட்டீஸ் அனுப்பி விசாரணை - நீதிபதி கலையரசன் அறிவிப்பு.
* தைப்பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அளித்ததை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமார வரவேற்கின்றேன் - முதலமைச்சர் பழனிசாமி.
* சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.36,608-க்கு விற்பனை.
ஒரு கிராம் தங்கம் ரூ.4,576-க்கு விற்பனை.
* வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்:
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகி, தமிழகம் புதுச்சேரி நோக்கி நகரும்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால், டிசம்பர் 1 முதல் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
* உடல்நலக் குறைவால் பேரறிவாளனுக்கு ஏற்கெனவே ஒரு வாரம் பரோல் அளிக்கப்பட்ட நிலையில் மேலும் 1 வாரம் பரோலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
90 நாட்கள் பரோல் கேட்ட நிலையில் மேலும் 1 வாரம் பரோல் நீட்டிப்பு.
* திருவள்ளூர்: பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை 5 மணி முதல் உபரி நீர் திறக்கப்படும்.
விநாடிக்கு 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதால் கொசஸ்தலையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை- பொதுப்பணித்துறை.
*:மருத்துவ கல்விக் கட்டணம்- ஸ்டாலின் மீண்டும் அறிக்கை:
7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும் பலருக்கும் கட்டணம் செலுத்த முடியாத நிலை.
கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்களின் கட்டணத்தை ஏற்க திமுக தயார் -ஸ்டாலின்.
* வங்கிகள் கடன் தொகை வசூலிப்பதை, தனியார் நிறுவனத்திடம் எதன் அடிப்படையில் ஒப்படைக்கப்படுகிறது? -உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
1,000 கோடிகள் கடன் பெற்ற தொழில் அதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர் என்று கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
* ஆசியாவின் சிறந்த கல்வி நிலையங்களுக்கான QS பட்டியலில் மும்பை, டெல்லி மற்றும் சென்னை ஐஐடி இடம் பெற்றுள்ளது.
37வது இடத்தை மும்பை ஐஐடியும், 47 மற்றும் 50 வது இடத்தை டெல்லி, சென்னை ஐஐடிக்கள் பெற்றுள்ளன.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.
* கள்ளக்குறிச்சியில் கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைப்பதை எதிர்த்த வழக்கு
பணிகளை நிறுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
* இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
ஆஸ்திரேலியா அணியில் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 374 ரன்களை எடுத்தது.
இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 308 ரன்களை மட்டுமே எடுத்தது.
* தமிழகத்தில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள்!
தமிழகம் - 1442
சென்னை - 392
மரணம் - 12
குணம் - 1494
No comments:
Post a Comment