புதிய இளம் வாக்காளர்களுக்கும் பா.ம.கவினருக்கும் முக்கிய அறிவிப்பு- பாமக தலைவர் ஜி.கே.மணி
18 வயது நிரம்பிய புதிய இளம் வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வருகின்ற 21.11.2020 மற்றும் 22.11.2020 ஆகிய இரு நாட்களிலும் அடுத்த மாதம் டிசம்பர் 12, 13 ஆகிய இரு நாட்களிலும் அந்தந்தப் பகுதியிலேயே நடைபெற உள்ள வாக்குச்சாவடி (பூத்) சிறப்பு முகாம்களில் உரிய விண்ணபத்தின் மூலம் சேர்க்கலாம். புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பதோடு இதே நாட்களில், இதே வாக்குச்சாவடி சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6.10 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
2021 சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று 16.11.2020ல் வெளியிட்டுள்ளார். இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களுடைய பெயர் விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம். இன்று முதல், டிசம்பர் 15 வரை, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர்கள் வசதிக்காக, நவம்பர்(இம்மாதம்)21, 22ம் தேதிகளிலும், டிசம்பர் 12, 13ம் தேதிகளிலும், அனைத்து வாக்குச்சாவடி(பூத்)களிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது, ஜனவரி 5க்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு, ஜனவரி20ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடபடும்.
நேற்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3,01,12,370 ஆண் வாக்காளர்களும், 3,09,25,603 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 6,385 வாக்காளர்களும் அடங்கும். அதிகபட்சமாக சென்னை மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.55 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.73 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.
மாவட்ட வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கையில் அதிகபட்சமாக சென்னையில் 39,40,704 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 5,11,627 வாக்காளர்களும் உள்ளனர்.
Home
அண்மை செய்திகள்
புதிய இளம் வாக்காளர்களுக்கும் பா.ம.கவினருக்கும் முக்கிய அறிவிப்பு- பாமக தலைவர் ஜி.கே.மணி
புதிய இளம் வாக்காளர்களுக்கும் பா.ம.கவினருக்கும் முக்கிய அறிவிப்பு- பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment