மணிமேகலை தெய்வம் தோன்றிய காட்சி - மருத்துவர் இராமதாசு அய்யா.
இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையின் ஐந்தாவது காதை மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை ஆகும். மணிமேகலை தெய்வம் எவ்வாறு காட்சியளித்தது என்பது குறித்து இந்த காதையில் விவரிக்கப்பட்டுள்ளது.
அற்றைநாள் எழுகின்ற திங்கள் மண்டிலத்தை ஒரு செவியினும், வீழ்கின்ற ஞாயிற்று மண்டிலத்தை ஒரு செவியினும் வெள்ளித் தோடாகவும் பொன் தோடாகவும் அரண்மனையாகிய திருமுகம் பொலியும்படி அணிந்து வந்ததாக மதுரை கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் சித்தரித்திருக்கிறார்.
அதுகுறித்த செய்யுளும், அதன் பொருளும் பின்வருமாறு:
குணதிசை மருங்கில்
நாண்முதிர்மதியமும்
குடதிசை மருங்கில்
சென்றுவீழ்கதிரும்
வெள்ளிவெண்தோட்
டொடு பொன்தோ டாக
எள்அறு திருமுகம்
பொலியப்பெய்தலும்
குணதிசை மருங்கில் நாள்முதிர் மதியமும் கீழ்த்திசையில் நான் நிரம்பிய முழு மதியமும், குடதிசை மருங்கில் சென்று வீழ் கதிரும் மேற்றிசையில் சென்று படிகின்ற ஞாயிறும்,
வெள்ளி வெண்தோட்டொடு பொன்தோடாக-வெள்ளியாலாகிய வெண்தோட்டுடன் பொன்னாலாய தோடுமாக, எள்ளறு திருமுகம்பொலிப்பெய்தலும் இதழ்தலற்ற அழகிய முகம் பொலியுமாறு அணிதலும்;
நாள்கலை. நிறையுவாநாளில் மித கீழ்த்திசைக்கண் உதித்தும், பரிதி மேற்றிசையிற்படிந்தும்கோயிலின் இரு மருங்கும் ஒருங்கு தோன்றுதலின், அவற்றைப்புகார்ச் செல்வி கோயிலாகிய முகத்தின் இரு மருங்கும் தோடாக அணிந்தனள்; என்றாள்; எனவே அந்திப்பொழுது வந்தமை பெற்றாம்.
No comments:
Post a Comment