வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு வருகை தரும் பேரன்புமிக்க சொந்தங்களுக்கு போராட்டக் குழு தலைவர் - ஜி.கே.மணி, வேண்டுகோள், - Agnipuratchi

வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு வருகை தரும் பேரன்புமிக்க சொந்தங்களுக்கு போராட்டக் குழு தலைவர் - ஜி.கே.மணி, வேண்டுகோள்,

Share This

வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு வருகை தரும்   பேரன்புமிக்க சொந்தங்களுக்கு போராட்டக் குழு தலைவர் - ஜி.கே.மணி, வேண்டுகோள்,    
          
வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரியும், MBC ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு கிடைத்த இடங்கள் எவ்வளவு என்பதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடக் கோரியும் பாட்டாளி மக்கள் கட்சி - வன்னியர் சங்கம் சார்பில்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிரில்  நடைபெறும் மாபெரும் அறப் போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் நாளை 1.12.2020 காலை 10.00 மணிக்கு  சென்னை, தீவுத்திடல்  அடுத்துள்ள மன்றோ சிலை (பல்லவன் இல்லம் அடுத்துள்ள குதிரை சிலை) அருகில் வாருங்கள். அங்கிருந்து போராட்ட இடம் செல்வோம்.                
தனி இட ஒதுக்கீடு உரிமைப் போராட்டத்தில் கலந்துகொள்ள வாகனங்கள் ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களுக்கும் வருகை தரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

பாதுகாப்பாக, கட்டுப்பாடாக வாருங்கள்.  போராட்டத்திற்கு செல்ல அனைவரும் வர வேண்டிய இடம் சென்னை, தீவுத்திடல் அடுத்துள்ள மன்றோசிலை (குதிரை சிலை) அருகில். இந்த செய்தியை அறிந்து கொண்டவர்கள் மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

     அன்புடன்
- ஜி.கே.மணி, வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டக் குழு தலைவர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages