அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி
மூன்று நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு பெற்றார் ஜோ பைடன்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிக்கு தேவையான பெரும்பான்மை வாக்குகளை ஜோ பைடன் பெற்றுள்ளார்.
மொத்தம் உள்ள 538 தேர்தல் வாக்காளர்களின் வாக்குகளில் 284 வாக்குகளை ஜோ பைடன் பெற்றுள்ளார்.
குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகள் பெற்றுள்ளார்.
பென்சில்வேனியாவில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் பைடனுக்கு 20 வாக்குகள் கிடைத்தன.
பென்சில்வேனியாவில் கிடைத்த வாக்குகள் பைடனின் வெற்றிக்கு வழிவகுத்தன.
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வு.
கடந்த 1990ம் ஆண்டிற்கு பின்னர் அமெரிக்காவில் ஆளும் கட்சி இரண்டாவது முறையாக ஆளும் வாய்ப்பை இழந்துள்ளது.
மேலும் கடந்த 30 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிபராகும் வாய்ப்பை டிரம்ப் இழந்துள்ளார்.
No comments:
Post a Comment