விவசாயி முதல்வர் என்பதால் நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம். முதல்வராக இருக்கும்போதும் தொடர்ந்து விவசாயம் செய்கிறேன்: முதல்வர் பழனிசாமி பேட்டி. - Agnipuratchi

விவசாயி முதல்வர் என்பதால் நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம். முதல்வராக இருக்கும்போதும் தொடர்ந்து விவசாயம் செய்கிறேன்: முதல்வர் பழனிசாமி பேட்டி.

Share This

விவசாயி முதல்வர் என்பதால் நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம். முதல்வராக இருக்கும்போதும் தொடர்ந்து விவசாயம் செய்கிறேன்: முதல்வர் பழனிசாமி பேட்டி.

விவசாயி முதலமைச்சராக இருப்பதால்தான், நீர் மேலாண்மையில் தமிழகம் முதல் இடம் வகிக்கிறது.

விவசாயி முதல்வர் என்பதால் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு 11 மருத்துவக் கல்லூரியை அரசு தொடங்கியுள்ளது.

பள்ளிகளை திறப்பது குறித்து அரசு ஆலோசித்து விரைவில் முடிவை அறிவிக்கும்.

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்கு கூடுதல் நிலம் ஒதுக்கப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாவட்டத்திற்கு ரூ.995 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

குடிமராமத்து திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 150 பயணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

4.32 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

ரூ.43.54 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொரோனா இருப்பது தெரிந்தால் மருத்துவக்குழு நேரில் செல்கிறது.

கொரோனா காலத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு உதவி.

பட்டாசு தொழிலுக்காக அரசு சார்பில் நீதிமன்றத்தில் வாதிட்டோம்.

புதிய அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. 

கொரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை.

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்காக தனி அமைப்புசாரா நலவாரியம் அமைக்கப்படும்.

மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்ற அடிப்படையில் வேல்யாத்திரைக்கு அனுமதி இல்லை.

கருணாநிதிக்கு சிகிச்சை அளித்த அதே மருத்துவமனையில்தான் அமைச்சர் துரைக்கண்ணுவும் சிகிச்சை பெற்றார்

துரைக்கண்ணு மரணத்தில் என்ன மர்மம்? என ஸ்டாலின் விளக்க வேண்டும்.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை ஸ்டாலின் கொச்சைப்படுத்துவது கண்டனத்திற்குரியது.

ஜெ.அன்பழகன் சிகிச்சையின் போது அரசு சார்பில் மருந்துகள் உடனடியாக வழங்கப்பட்டன.

கொரோனா இறப்பில் கூட அரசியல் லாபம் பார்ப்பதா என  - முதலமைச்சர் பழனிசாமி கேள்வி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages