நிவர் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை.
‘நிவர்' தீவிர புயலாக கரையை கடக்கும்:
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை எட்டக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு மையம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
சென்னைக்கு தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
வரும் 25-ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும்.
நிவர் புயல் எதிரொலியாக தமிழகத்தில் ரயில்சேவை ரத்து
நிவர் புயல் எதிரொலியாக வரும் 24 & 25 தேதிகளில் சென்னை - தஞ்சாவூர், சென்னை - திருச்சி மற்றும் மறுமார்க்கமாக இயங்கும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு
தமிழகம், புதுவை, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு கேட்டறிந்தது
நிவர் புயல் நாளை அதிதீவிர புயலாக வலுப்பெறும் - வானிலை மையம்
No comments:
Post a Comment