அக்னிப்புரட்சி இன்றைய (03.12.2020) முக்கிய செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (03.12.2020) முக்கிய செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (03.12.2020) முக்கிய செய்திகள்.

" தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

சென்னை, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், திருச்சி, ராமேஸ்வரம் ஆகிய மாவட்டங்களில் மழை.

* டெல்லியில்  வாட்டும் கடுங்குளிரிலும் இன்று 8-வது நாளாக விவசாயிகள் போராட்டம்.

டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகளுடன் இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை.

* சென்னையில் பெட்ரோல் விலை 15 காசுகள் அதிகரித்து 85.59 ரூபாய்க்கும், டீசல் விலை 18 காசுகள் அதிகரித்து 78.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

* சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் பொதுத்தேர்வு கிடையாது - சிபிஎஸ்இ.

10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், எழுத்துப்பூர்வமாக மட்டுமே நடைபெறும்-சிபிஎஸ்இ.

தேர்வு தேதிகள் தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை; பொதுத்தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட மாட்டாது-சிபிஎஸ்இ.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு, பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்- சிபிஎஸ்இ.

* புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக காரைக்காலில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார் ஆட்சியர் அர்ஜூன் சர்மா.

புரெவி புயல், பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்.

மீண்டும்......

நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்.

மலாய் தீபகற்பம் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.

தெற்கு அந்தமானில் நாளை  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

* செம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு:

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு 1000 கன அடி நீர் மீண்டும் திறப்பு; காவலூர், குன்றத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தல்.

* இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்படும் டாப் -10 காவல் நிலையங்கள்:

தமிழகத்தில் சேலம் சூரமங்கலம்
காவல்நிலையத்திற்கு 2ம் இடம்-மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியல் வெளியீடு.

* லாட்டரி, சூதாட்டத்தை ஜி.எஸ்.டி சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது சரியானதே.

லாட்டரி, சூதாட்டத்தின் மூலம் ஜெயிக்கும் பணத்திற்கும் ஜி.எஸ்.டி. கட்ட வேண்டும் என்பது செல்லும்.

சில தனியார் லாட்டரி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவு.

* டிச.5ல் திமுக ஆர்ப்பாட்டம் -திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு:

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 5ம் தேதி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் என அறிவிப்பு.

* தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது

அதிலும் குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் இரவு முழுவதும் நீடித்த மழை தற்போதும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

* கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்க  உத்தரவிடக் கோரிய மனு. விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

* புரெவி புயல், பாம்பனுக்கு 110 கி.மீ., குமரிக்கு 310 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது:

அடுத்த 3 மணி நேரத்தில் மன்னார் வளைகுடா அருகே நிலைகொள்ளும் - வானிலை மையம்.

புயல் எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கனல் மலைப்பாதையில் இன்றிரவு 7 மணி முதல் வாகனங்களுக்கு தடை.

* திருவள்ளூர்: பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் விநாடிக்கு 3,886 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

ஆந்திராவின் அம்மப்பள்ளி அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 5,136 கனஅடி தண்ணீர் வருவதால் நீர்திறப்பு

* வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

இது தொடர்பான அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி வெளியாகும் - ரஜினிகாந்த்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தோம்.

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன்.
அரசியல் மாற்றம் தேவை... கட்டாயம் நிகழும் - நடிகர் ரஜினிகாந்த்.

* திருவண்ணாமலையில் பங்க் பாபு என்பவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக நகர செயலாளராக இருந்த கனகராஜ் என்பவர் சிலரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பங்க் பாபு என்பவர் காந்திநகர் பகுதியில் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

* ரஜினி கட்சியில் சேர்ந்த அர்ஜூன மூர்த்தி பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிப்பு:

பாஜக அறிவுசார் பிரிவு மாநில தலைவர் அர்ஜூன மூர்த்தி கட்சியிலிருந்து நீக்கம்.

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில் பாஜக நடவடிக்கை.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எவ்வித தொடர்பும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்.

* உலக நாடுகளுக்கு இன்டர்போல் எச்சரிக்கை:

போலியான கொரோனா தடுப்பூசிகளை விற்கும் முயற்சியில் கிரிமினல் மாபியாக்கள் ஈடுபட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு உலக நாடுகளுக்கு இன்டர்போல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பிரிட்டனில் பைசரின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள இன்டர்போல், நேரடியாகவோ, இணையதளம் வாயிலாகவோ, போலியான தடுப்பூசிகளை மாபியா கும்பல்கள் விற்கலாம் என கூறியுள்ளது.

* ரஜினி - அதிமுக கூட்டணி பற்றி ஓபிஎஸ் கருத்து.

நடிகர் ரஜினி புதிய கட்சி துவங்க உள்ளதை வரவேற்பதாக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பேட்டி.

ரஜினியின் அரசியல் வரவு, நல்வரவாகட்டும் என்று துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பேட்டி

ரஜினி - அதிமுக கூட்டணி அமையுமா என்கிற கேள்விக்கு, எதிர்வரும் காலத்தில் எதுவும் நிகழலாம் என ஓபிஎஸ் பதில்.

வாய்ப்பு இருந்தால் ரஜினி - அதிமுக கூட்டணி அமையலாம் - ஓபிஎஸ்

ரஜினி கட்சி துவங்குவதால் அதிமுக வாக்கு வங்கியில் பாதிப்பு இருக்காது - ஓபிஎஸ்

* புரெவி புயல் காரணமாக நாளை 6
மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு:

கன்னியாகுமரி, திருநெல்வேலி,
தென்காசி மாவட்டங்களுக்கு விடுமுறை.

விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் விடுமுறை-புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு அறிவிப்பு.

* இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் பொழுது கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம் பெற வேண்டும்"

உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு அதிரடி.

சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் குடமுழுக்கு விழா நடத்துவது குறித்து எந்த மாற்று
கருத்தும் இல்லை - நீதிபதிகள்.

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழாவை தமிழ் சைவ ஆகம விதிகளின்படி நடத்த கோரிய வழக்கில், நீதிபதிகள் கருத்து.

* புரெவி புயல் வலுவிழந்தது:
புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே கரையை கடக்கும்-சென்னை வானிலை மைய இயக்குநர் பேட்டி.

* டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

வேளாண் சட்டம் தொடர்பாக மத்திய அரசு - விவசாயிகள் இடையே 4-வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

4-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை மறுநாள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அரியர் தேர்வு:10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலைக் கழகம்.

அரியர் வைத்துள்ள மாணவர்கள் பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்-அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages