அக்னிப்புரட்சி இன்றைய 04.12.2020) முக்கிய செய்திகள்.
* சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கடலூர், புதுச்சேரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
கடலூரில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சிதம்பரத்தில் 34 செ.மீ. மழை பதிவானது; மயிலாடுதுறை கொள்ளிடத்தில் 33 செ.மீ. மழை பதிவானது
கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய கனமழை காரணமாக குள்ளஞ்சாவடி பெருமாள் ஏரி நிரம்பியதால் நீர் திறப்பு.
வினாடிக்கு 9,400 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கீழ் பரவணாறு கரையோர 23 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
* ரெப்போ விகிதம் 4% ஆகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35% ஆகவும் தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு.
2021 வளர்ச்சி வீதம் -7.5% இருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
* மதுரை குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல்:
முல்லை பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
* கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்.
17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்-வானிலை ஆய்வு மையம்.
தொடர் கனமழையால் கடலூரில் முக்கிய சாலைகள் துண்டிப்பு
கடலூர் - சிதம்பரம் சாலையில் காரைக்காடு பகுதியில் வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்து நிறுத்தம்
வடலூர் - சேத்தியாத்தோப்பு சாலையில் மருவாய் என்ற இடத்தில் வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது
குள்ளஞ்சாவடி -ஆலப்பாக்கம் சாலையில் வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்து துண்டிப்பு
* மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை முதலில் செலுத்த முடிவு:
முன்கள பணியாளர்கள், முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை.
* அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தகவல்.
தடுப்பு மருந்து விலை குறைவாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி.
விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் தடுப்பு மருந்து போடும் பணி விரைவாக தொடங்கும் - பிரதமர் மோடி.
* சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர்
எடப்பாடி பழனிசாமி ஆய்வுப் பணி.
பல்வேறு துறைகள் சார்பில் ரூ.27.46 கோடியில் 30 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்.
ரூ.36.43 கோடி மதிப்பீட்டில் பல்வேறு துறை சார்பில் 27 முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு.
* விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் ஐவேலி கிராமம் பொன்னம்பூண்டி இணைப்புச் சாலை மழையால் துண்டிக்கப்பட்டுள்ளது.
* 2ஜி வழக்கில் விசாரணை முடிந்தால் ஆ.ராசா எங்கிருப்பார் என எல்லோருக்கும் தெரியும் - முதல்வர் பழனிசாமி.
கூட்டணி ஆட்சியின் போதே குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் தான் ஆ.ராசா"
"2 ஜியில் முறையான நடைமுறையை பின்பற்றியிருந்தால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்திருக்கும்"
"2 ஜி வழக்கில் சிபிஐ, போதிய ஆதாரத்தை சமர்பிக்கவில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது"
* ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் அசத்தல்.
மேக்ஸ்வெல், ஷார்ட், ஸ்டார்க் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார் நடராஜன்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
No comments:
Post a Comment