அக்னிப்புரட்சி இன்றைய (10.12.2020) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
* பொதுப்பிரிவினருக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பிற்கான மருத்துவ கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது.
அரசு, தனியார் கல்லூரிகளில் மீதமுள்ள 1,517 இடங்களுக்கு இன்று 550 மாணவர்களுக்கு அழைப்பு விடுப்பு.
* சென்னையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 5.45 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட உள்ளது.
* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்துள்ளது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4645-க்கும் சவரன் ரூ.37,160க்கும் விற்பனை.
* கடைநிலை அரசு பணிகளுக்கு அதிக கல்வி தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்வது சமூக நீதிக்கு எதிரானது என ஐகோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதிகம் படித்தவர்கள், தகுதி குறைவான பணியிடங்களில் பணியாற்றுவது என்பது அடிப்படை உரிமை மீறல் என அவர்கள் தெரிவித்தனர்.
அரசு தீவிரமாக பரிசீலனை செய்து பணியின் தன்மைக்கு தகுந்தவாறு கல்வி தகுதியை நிர்ணயிக்கவேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
* ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகள் ரத்து:
ஜெயலலிதா குறித்து ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் தொடர்பான வழக்குகள் ரத்து.
பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்கக்கூடிய சகிப்புத்தன்மை வேண்டும்- நீதிபதி.
கட்சி தலைவர்கள் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.
* புதிய நாடாளுமன்றம் அடிக்கல் நாட்டு விழா பிரதமர் மோடி உரை:
இந்தியா தனது 75வது பிறந்த தினத்தைக் கொண்டாடும்போது நமது நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம்
இந்திய ஜனநாயக வரலாற்றில் இன்று மிகப்பெரிய மைல்கல் - பிரதமர் மோடி
புதிய நாடாளுமன்றம் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான சாட்சியாக திகழும்.
தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தில் பொதுமக்களுக்கு சிரமம் உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அசெளகரியத்தை உணர்ந்தனர்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்கள் தாராளமாக வந்து செல்லலாம் - பிரதமர் மோடி.
சென்னைக்கு அருகே உத்திரமேரூரில் வரலாற்று சான்று கிடைத்துள்ளது.
பஞ்சாயத்து நடந்தததற்கான ஆதாரங்கள் உத்திரமேரூரில் கிடைத்துள்ளன.
மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பு பற்றியும், உத்திரமேரூர் கல்வெட்டில் உள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அங்கு மகா சபை நடந்துள்ளது. மக்கள் சபை நடந்தது பற்றி, கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது - பிரதமர் மோடி.
* அடுத்த ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும்.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும்.
நான்கு தேர்வுகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாணவர்கள் பங்கேற்கலாம் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.
* நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஓ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா?
விசாரித்து அறிக்கையை சீல் வைத்த கவரில் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
* நீட் தேர்வில், 594 மதிப்பெண்கள் பெற்றதை, 12 நாட்களில் மதிப்பெண்களை குறைத்து, புது விடைத்தாள் வெளியிட்டதாக மாணவர் வழக்கு.
594 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்க மாணவருக்கு அனுமதி வழங்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவு.
* மாற்றுத்திறனாளிகள் பயணிக்க ஏதுவாக பேருந்துகள் கொள்முதல் தொடர்பாக தலைமை செயலாளர் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
நிதிச்சுமை காரணமாக, தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்ய சாத்தியக்கூறுகள் இல்லை - தமிழக அரசு
மாநகர போக்குவரத்து கழகத்துக்கு நிதி பற்றாக்குறை என்றால், பொருளாதார நெருக்கடி நிலையை பிறப்பிக்கலாமா? - நீதிமன்றம்
"சென்னையில் தாழ்தள பேருந்துகளை இயக்கும் வகையில், தரமான சாலைகள் அமைக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை"
சட்டங்களை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை - நீதிமன்றம்
மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் ஏற்படுத்த கோரிய வழக்கில், உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.
* வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு.
ரயில் மறியல் போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் - விவசாய சங்கங்கள்.
தங்களது கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க முன் வராததால், ரயில் மறியல் செய்ய முடிவு செய்துள்ளோம்.
* மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகளை கொண்டு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
டிச.21 முதல் 26 வரை விண்ணப்பங்களை அளிக்கலாம்; ஜன.6ல் விண்ணப்பங்கள் இறுதி செய்யப்படும்- சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.
* சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி தொடர்பாக பரவிவரும் தகவல் உண்மையில்லை.
சிபிஎஸ்இ 10,12 வகுப்பு பொதுத்தேர்வுகளின் தேதி குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது - சிபிஎஸ்இ.
* கர்நாடகாவில் அனுமன் கோவில் விரிவாக்கத்திற்கு இஸ்லாமியர் ஒருவர் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.
பெங்களூருவின் புறநகர் பகுதியான வலகேரபுரா பகுதியில் நெடுஞ்சாலை அருகே அனுமன் கோயிலை விரிவாக்கம் செய்ய கோயில் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.
இதனையறிந்த பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹெச் எம் ஜி பாஷா என்பவர் கோயில் அருகே இருந்த 1,600 சதுர அடி நிலத்தை தானமாக வழங்கினார்.
நெடுஞ்சாலைக்கு அருகில் இருப்பதால் இந்த நிலத்தின் மதிப்பு 80 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இதனையறிந்த பல்வேறு தரப்பினரும் பாஷாவைப் பாராட்டி வருகின்றனர்.
* "சோழர் கால ஆட்சியே சிறந்த சான்று!"- நாடாளுமன்ற கட்டட அடிக்கல் நிகழ்வில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, சோழர் கால தேர்தல் நடைமுறைகளைப் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார். மேலும், "புதிய நாடாளுமன்ற கட்டடம், தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான உதாரணமாகத் திகழ்கிறது" என்றார்.
* டிசம்பர் 13-ம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்.
'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில் கமல்ஹாசன் தொடர் பிரசார பயணம்.
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம்.
No comments:
Post a Comment