அக்னிப்புரட்சி இன்றைய ( 11.12.2020) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
* வைகுண்ட ஏகாதசி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடக்கம்.
tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம் - கோவில் நிர்வாகம்.
* ஓரே நாடு ஒரே கலாச்சாரம் என இந்தியாவை மாற்ற முயற்சிப்பது போல் மருத்துவத்தையும் மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது! - இந்திய மருத்துவ சங்கம்!
* சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவி வழங்கினார்.
* பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப்பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு.
ஒரு முறை குழந்தையின் பெயரைப் பதிவு செய்த பின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது.
குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த பின் பதிவு செய்யுங்கள்: தமிழக அரசு.
* பாரதியாரின் 138-வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து.
நாட்டின் இன்றைய நிலையை நினைக்கும்போது 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன - ஸ்டாலின்.
* முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு:
ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு.
* சிவகங்கை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி.
குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளர் பொன்மணி வெற்றி பெற்றதாக தகவல்.
* எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது. மருத்துவர்களின் அறிவுரைப்படி BP, ECG பரிசோதனை செய்யப்பட்டது; மற்றபடி ஏதும் இல்லை"
- கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி.
* கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்கள் 3 பேர் கைது.
கடுவனூர் கிராமத்தில் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்கள் கணேசன், ராமசந்திரன், சக்திவேல் ஆகியோர் கைது.
*!மீனாட்சி கோயிலில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைப்பது எப்போது.. ? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு - அரசு தரப்பு பதில்.
வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வருகிற 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம் கிளை.
இந்து கோயில் மீது அக்கறை கொண்டு பொது நல வழக்கு தொடர்ந்த இஸ்லாமிய மனுதாரருக்கு பாராட்டு.
* வருமான வரி வழக்கில் கார்த்திக் சிதம்பரம் விடுவிப்பு:
ரூ.7.37 கோடி கணக்கில் காட்டப்படவில்லை என கோரி,கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு. கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதியும் விடுவிப்பு.
* அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் விதிமீறலா? - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அ.தி.மு.க முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என வழக்கு. ஜனவரி 6ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு.
* மதுரை மாவட்டத்தில் புதிய இடங்களில் கிரானைட் குவாரிகள் தொடங்க மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புதிய உரிமம் வழங்க கூடாது - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
மாநில - மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது - தமிழக அரசு தகவல்.
சகாயம் குழு அளித்த 212 பரிந்துரைகளில், 131 மட்டுமே தமிழக அரசால் ஏற்ககூடியது, 67 ஏற்க கூடியது அல்ல - தமிழக அரசு.
* குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பதட்டமான சூழல் நீடிப்பது ஏன்? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி.
குமரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வெளிமாவட்ட போலீஸை நியமிக்க கோரிய வழக்கு.
உள்துறை செயலாளர், டிஜிபி பதிலளிக்க உத்தரவு - வழக்கு டிச.18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
கடந்த 2000-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை நடைமுறைபடுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
* தமிழக அரசு தொடர்ந்த 9 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
சுப்பிரமணிய சாமி, செந்தில் பாலாஜி, செல்வகணபதி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகள் ரத்து.
முதல்வரின் துறை சார்ந்த நடவடிக்கைகளை விமர்சித்தால் மட்டுமே அரசு சார்பில் வழக்கு தொடர முடியும்.
தனிப்பட்ட விமர்சனத்திற்கு, அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடர முடியாது - உயர்நீதிமன்றம்
* சிவகங்கை மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி.
அதிமுக வேட்பாளராக 8 வது வார்டு உறுப்பினர் சரஸ்வதி வெற்றி.
துணைத் தலைவர் பதவிக்கும் குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி.
* பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற அனைவருக்கும் ஏப்ரல் வரை ஆன்-லைன் வழி வகுப்புகள் மட்டுமே நடைபெறும் -அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
நாள் ஒன்றுக்கு 5 வகுப்புகள் மட்டுமே நடைபெற வேண்டும் எனவும் உத்தரவு.
No comments:
Post a Comment