அக்னிப்புரட்சி இன்றைய (12.12.2020) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
* நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து:
70 வது பிறந்தநாள்: நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துகள்.
நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ பிரதமர் மோடி வாழ்த்து.
* நடிகர் ரஜினிகாந்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து.
ரஜினி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ உளமாற வாழ்த்துகிறேன் - எடப்பாடி பழனிசாமி.
துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் வாழ்த்து.
* வரும் 16, 17-ம் தேதிகளில் கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியர் மற்றும் சுகாதார குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
* கீழ்ராவந்தவாடி சிற்பக்குளம் மற்றும் அழகர்மலை யானை சிற்பம் ஆகியவை பாதுகாக்கப்பட்ட புராதான சின்னங்களாக அறிவித்தது தமிழக அரசு
* அன்பும், பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
ரஜினிகாந்த் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் - திமுக தலைவர் ஸ்டாலின்.
நண்பரும், சூப்பர் ஸ்டாருமான ரஜினியை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக ஸ்டாலின் ட்வீட்.
* தமிழகம் முழுவதும் 17 சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.
சென்னை, ஓசூர், தேனி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் இதுவரை ரூ.10 லட்சம் பறிமுதல்.
* சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் குறித்து வரும் 20ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை - துரைமுருகன்.
அண்ணா அறிவாலயத்தில் அனைத்து திமுக செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
* விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 100 சவரன் பறிமுதல்;
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில், ரூ. 25 லட்சம் ரொக்கம் பறிமுதல்.
மதுரை வடக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த் மற்றும்.
விருதுநகர் மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வி ஆகியோரிடம் இருந்து பறிமுதல்.
* நிவர் புயல் பாதிப்பு நிவாரணமாக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.
புயல் நிவாரணமாக ரூ.74 கோடியை விடுவித்த அரசு அதை யாருக்கு கொடுத்தது என வெளிப்படையாக தெரியவில்லை - மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்.
மூழ்கிய பயிரை பிடுங்கி முகர்ந்து பார்த்தால், நிவாரணம் வந்து சேர்ந்துவிட்டதாக நிம்மதி கொள்வார்களா? - மு.க.ஸ்டாலின்.
No comments:
Post a Comment