நெஞ்சு பொறுக்குதில்லையே!” என்ற தலைப்பில் 19-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா உரையாற்றுகிறார்! - Agnipuratchi

நெஞ்சு பொறுக்குதில்லையே!” என்ற தலைப்பில் 19-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா உரையாற்றுகிறார்!

Share This

’நெஞ்சு பொறுக்குதில்லையே!” என்ற தலைப்பில் 19-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா உரையாற்றுகிறார்!

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த போராட்டம் எதற்காக நடத்தப்படுகிறது? என்பது குறித்து தம்பிகள், தங்கைகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன்  இணையவழியில் தொடர்ந்து உரையாடி வருகிறேன்.

கடந்த நவம்பர் 29-ஆம் தேதி நடைபெற்ற இணையவழி உரையாடல்,  திசம்பர் 10-ஆம் தேதி இணையவழியில் நடைபெற்ற ’’உன்னையே நீ அறிவாய்” என்ற தலைப்பிலான உரையாடலும், அதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற கிராமப்புற போராட்டமும்  அனைவரிடமும் பெரும் வரவேற்பை, வெற்றியை பெற்றுள்ளன. வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டம் ஏன்? என்பது குறித்த விழிப்புணர்வு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது.

இந்த வரிசையில் அடுத்ததாக ’’நெஞ்சு பொறுக்குதில்லையே!” என்ற தலைப்பில்  உங்களுடன் உரையாட உள்ளேன். வரும் 19-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு  ஒருநாள் இந்த உரையாடல் நடைபெறும்.  இதற்கான இணைப்பு விவரங்கள் தனியாக வழங்கப்படும்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages