வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டம்! வன்னியர் சங்கம் & பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து நடத்தும் அடுத்த கட்ட போராட்டங்கள் - ஜி.கே.மணி, வன்னியர் 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டக் குழு தலைவர் அறிவிப்பு. - Agnipuratchi

வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டம்! வன்னியர் சங்கம் & பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து நடத்தும் அடுத்த கட்ட போராட்டங்கள் - ஜி.கே.மணி, வன்னியர் 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டக் குழு தலைவர் அறிவிப்பு.

Share This

வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டம்! வன்னியர் சங்கம் & பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து நடத்தும் அடுத்த கட்ட போராட்டங்கள் - ஜி.கே.மணி, வன்னியர் 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டக் குழு தலைவர் அறிவிப்பு.

பேரன்புள்ளம் கொண்ட இனமானச் சொந்தங்களுக்கு,  வணக்கம். வன்னியர் 20% தனி இட ஒதுக்கீட்டு அடுத்தக் கட்ட போராட்டம் வருகின்ற 14.12.2020 கிராம அளவிலான கிராம நிர்வாக அலுவலர்  (V.A.O) அலுவலகம் முன்பு நடைபெறும்  மாபெரும் போராட்டம். இது தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் மாபெரும் மக்கள் சக்தி போராட்டமாக அமைய வேண்டும். இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள், பெண்கள், பெரியவர்கள், தம்பிகள் படை, தங்கைகள் படையினர் மற்றும் அந்தந்த கிராமங்களில் அனைத்துக் கட்சியிலும் உள்ள வன்னியர் குடும்பத்தினர்,  அனைத்து சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள், உள்ளாட்சியில் வெற்றி பெற்றவர்கள், வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் உள்ளிட்ட கிராமமே திரண்டு வந்த மாபெரும் மக்கள் திரள் அறப்போராட்டமாக  நடத்தப்பட வேண்டும்.
       
வன்னியர் 20% தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உங்களின் உணர்வுக்கும் செயல்பாட்டிற்கும் பாராட்டுக்கள். டிசம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை 4 நாட்கள் போராட்டத்தில் மிக நெருக்கடிகளை, சோதனைகளை தாண்டி கஷ்டங்களை அனுபவித்து போராட்டத்தை வெற்றி பெறச் செய்த ஒவ்வொருவருக்கும்  பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இது வாழ்வதற்கான அடுத்தடுத்த தலைமுறைகளுக்குமான அடிப்படை உரிமை போராட்டம். சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் 40 ஆண்டு காலப் போராட்ம்.சமூகநீதிக்கு போராடி வரும் மருத்துவர் அய்யா அவர்கள் காலத்தில் வெற்றி பெற்றே தீர வேண்டும். பசுமைநாயகர் மருத்துவர் அன்புமணி M.P அவர்கள் முதல் நாள் தலைமையேற்று தொடங்கி வைத்து உறுதியுடன் நிற்கும் போராட்டம். அவரின் போராட்டம் நிச்சயம் வெற்றி பெற்றே ஆகவேண்டும்.நமது இனமானச் சொந்தங்கள் உங்கள் ஒவ்வொருவரின் உணர்வும் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடும் போராட்டத்திற்கு மிகப் பெரிய வலிமை சேர்த்துள்ளது. உங்கள் எல்லோரின் கூட்டு உழைப்பு. நான் அடிக்கடிச் சொல்வதைப்போல் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்பது நிரூபிக்கப்படும்.
       
மருத்துவர் அய்யா அவர்களின் 40 ஆண்டு கால போராட்டம். 1987 ஒரு வார கால தொடர் சாலை மறியல் போராட்டத்தை எண்ணிப் பார்க்கிறோம். இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவோம். அந்த  காலகட்ட போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அன்றைய காவல் துறையின் மிகக் கொடுமையான அடக்கு முறையில் மருத்துவர் அய்யா அவர்கள் அய்யப்ப பக்தரைப்போல வேடமணிந்தும், அடுத்து இஸ்லாமியரைப்போல தொப்பி போட்டு மாறுவேடமணிந்தும் தப்பிச் சென்று போராட்டம் நடத்தப்பட்ட வரலாறு.தற்போதைய நமது முக்கியப் பொறுப்பாளர்கள் அன்று எவ்வளவு கஷ்டப்பட்டு போராட்டக் களத்தில் பங்குபெற்றார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. நான் இளம் வயது முதல் 1980லிருந்து மருத்துவர் அய்யா அவர்களுடன் இருந்து வருகின்றேன். ஒவ்வொன்றும் தெரியும். அப்போது இளம் வயதிலேயே ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஆக இருந்தேன். அப்போது பாட்டாளி மக்கள் கட்சி துவங்கப்படவில்லை.M.L.A, M.P தேர்தலைப்போல ஊராட்சி ஒன்றிய சேர்மனுக்கு மக்கள் நேரடியாக வாக்களிக்கும் முறையில் அந்த ஒரு முறை தேர்தலை அப்போதைய முதலமைச்சர் M.G.R நடத்தினார். அப்போது ஒவ்வொரு போராட்டத்திலும் நான் பல முறை கைது செய்யப்பட்டேன். ஒரு நாள் ரயில் மறியல் போராட்டத்தில்,ஒரு வார சாலை மறியல் போராட்டத்தில் எனக்கு நேர்ந்த கொடுமைகளையும் எண்ணிப் பார்க்கிறேன். நமது பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் நேர்ந்த கொடுமைகளை கஷ்டங்களை எண்ணிப் பார்க்கிறேன். அவ்வளவு வேதனை. அதையெல்லாம் கடந்து வந்தவர்  மருத்துவர் அய்யா அவர்கள். ஆனால் தற்போது அந்தக் கஷ்டம் இல்லை. போராட்டம் உறுதியாக வெற்றி பெறும் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பால்.
                     
அடுத்த கட்ட போராட்டங்கள் 14.12.2020 திங்கட்கிழமை  பகல் 11.00 மணிக்கு கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகம் முன்பு நடத்தப்படும்  மக்கள் திரள் மாபெரும் அறப்போராட்டம். கிராம நிர்வாக அலுவலர் (VAO) எல்லைக்குட்பட்ட கிராமப் பகுதிகளிலிருந்து பெண்கள் குழந்தைகளுடன், இளைஞர்கள், இளம் பெண்கள், மாணவ - மாணவிகள், தம்பிகள் படை, தங்கைகள் படை. பெரியவர்கள், அனைத்துக் கட்சியிலும் உள்ள வன்னிய குடும்பத்தினர், அனைத்து சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் அந்த கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் ஒன்று கூடி,பின் அங்கிருந்து கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகம் சென்று, வன்னியர் 20% தனி இட ஒதுக்கீடு குறித்து முழக்கம் (கோஷம்)எழுப்பி,பின் VAO இடம் மனு கொடுக்க வேண்டும். VAO இடம் கொடுத்த மனுவின் மற்றொரு நகலில் பெற்றுக்கொண்டேன் என VAO இடம் கையெழுத்து பெற்று, அவரது  சீல் வைத்து,கையெழுத்ததிட்டு  சீல் வைத்ததை நகல் எடுத்து பா.ம.க ஒன்றியச் செயலாளர் ஒரு நகல் வைத்துக்கொண்டு,தலைமைக்கு நகல் அனுப்பி வைக்க வேண்டும்.   
       
இதேபோல் கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு அந்தந்தப்  பகுதிகளில்  மக்கள் திரள் மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்பட வேண்டும். அந்தப் பகுதிகளில் உள்ள நமது  அமைப்புகளின் நிர்வாகிகளை உள்ளடக்கிய போராட்டக் குழுவை அமைத்து, ஒவ்வொரு கட்ட போராட்டமும் மிகப் பெரிய வெற்றிப் போராட்டமாக அமைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும்.

14.12.2020 திங்கட்கிழமை -  கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகம் முன்பு மக்கள் திரள் மாபெரும் அறப்போராட்டம்  23.12.2020  புதன்கிழமை - பேரூராட்சி அலுவலகம் முன்பு  மக்கள் திரள் மாபெரும் அறப்போராட்டம் 30.12.2020 புதன்கிழமை - ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (B.D.O) முன்பு மக்கள் திரள் மாபெரும் அறப்போராட்டம்   08.01.2021 வெள்ளிக்கிழமை - நகராட்சி (முனிசிபாலிட்டி) அலுவலகம் முன்பு மக்கள் திரள் மாபெரும் அறப்போராட்டம்   21.1.2021 வியாழக்கிழமை - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் திரள் மாபெரும் அறப்போராட்டம்                   இறுதிப் போராட்டம் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
          
இவண்:
ஜி.கே.மணி, வன்னியர் 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டக் குழு தலைவர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages