முகநூலில் நான் எழுதும் புதிய தொடர் ‘‘இசையின் இசை’’: 23-ஆம் தேதி முதல் வெளிவருகிறது! - மருத்துவர் இராமதாசு அய்யா
தமிழக மக்களையும், பாட்டாளி சொந்தங்களையும் களத்தில் சந்திப்பது தான் வழக்கம். ஆனால், இயல்புகளை தகர்த்து புதிய இயல்புகளை உருவாக்கி விட்ட கொரோனா வைரஸ் பரவல், நமது உரையாடல் முறைகளையும் முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கிறது. நேருக்கு நேராக இருந்த நமது உரையாடலை இணையவழிக்கு மாற்றியிருக்கிறது கொரோனாவும், அதனால் நடைமுறைப்படுத்தப்பட்ட தடைகளும்.
கொரோனா ஊரடங்கு காலம் நிறைய படிக்கவும், எழுதவும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சுக்கா... மிளகா.... சமூகநீதி?, சிலப்பதிகாரம் அறிவோம்! ஆகிய தொடர்களை முகநூலில் எழுதிய நான் அடுத்ததாக தமிழிசையின் சிறப்புகள், வரலாறு, தமிழிசைக்கு நான் செய்த தொண்டு ஆகியவை குறித்து ‘‘இசையின் இசை’’ என்ற தலைப்பில் எழுத உள்ளேன். நாளை மறுநாள் 23ஆம் தேதி புதன் கிழமை முதல் எனது முகநூல் பக்கத்தில் இந்தத் தொடர் வெளிவருகிறது.
அனைவரும் படித்து தமிழிசை குறித்து அறிந்து கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment