அக்னிப்புரட்சி இன்றைய (26.12.2020) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
* மறக்க முடியுமா டிசம்பர் 26, 2004? இன்று சுனாமி தாக்கிய 16-வது ஆண்டு நினைவு நாள்..!
பேரிழப்பை ஏற்படுத்திய சுனாமி வந்து, 16 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், நீங்காத நினைவுகளுடன் சோகத்தை தாங்கி நிற்கின்றனர் தமிழக கடலோர கிராம மக்கள்.
* சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை வழிபாடு நடைபெறுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது.
16-ந் தேதி முதல் பூஜைகள் நடந்து வரும் நிலையில் மண்டல பூஜை நிறைவு சிறப்பு வழிபாடு இன்று நடக்கிறது.
இன்று மதியம் மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் சபரிமலையில் நடைபெறும்.
தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்கு பின் மண்டல பூஜை நிறைவு பெற்று இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும்.
பின்னர் மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் சபரிமலை நடை டிசம்பர் 30-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.
* சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் டிசம்பர் 21 ம் தேதி முதல் 31ம் தேதி வரை மார்கழி ஆருத்ரா தரிசன மகோத்சவம் நடைபெற உள்ள நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஷ்ணுதாஸ் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனு குறித்து விளக்கம் அளிக்க அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.
* சென்னையில் ஆயுதப்படை போலீஸ் தற்கொலை:
பெரியமேட்டில் உள்ள தனியார் விடுதியில் சுரேஷ் என்ற காவலர் விஷம் குடித்து தற்கொலை.
காவலர் சுரேஷின் சடலத்தை கைப்பற்றி பெரியமேடு போலீசார் விசாரணை.
சடலமாக கண்டெடுக்கப்பட்ட சுரேஷ், கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என போலீஸ் தகவல்.
* மதுரை உசிலம்பட்டி பகுதியில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துகள் அடங்கிய கல்வெட்டு கண்டுபிடிப்பு
புத்தாண்டு நள்ளிரவில் மதுபோதையில் வாகனம் ஓட்டினால் உடனே சிறை
குடும்பத்துடன் தேவாலயங்களுக்கு, கோவில்களுக்கு செல்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் - சென்னை மாநகர காவல்துறை.
* மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் தேர்வுக்கான கூட்டத்தை புறக்கணித்தார் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்.
ஆட்சி முடியும் நேரத்தில் அவசரமாக தேர்வுக்குழு கூட்டம் கூடுகிறது. இதில் கலந்து கொள்வது பயனற்றது.
மனித உரிமை மீறல்கள் இந்த ஆட்சியில் அதிகம். கடந்த 10 ஆண்டுகளில் முடிந்த அளவு ஊறு விளைவித்து விட்டு இப்போது கூட்டம் நடத்துவது பயனற்றது.
தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடக்கும் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதல்வருக்கு, ஸ்டாலின் கடிதம்.
ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர்,
சபாநாயகர் பங்கேற்பு.
* ரஜினிகாந்திடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
ரஜினிகாந்த் விரைவில் முழு குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் - முதலமைச்சர்.
ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் ரஜினிகாந்த்.
* மெல்போர்னில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டி - முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் சேர்ப்பு.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியில் கில் -28, புஜாரா - 7 ரன்கள் சேர்ப்பு - மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் டக் அவுட் ஆனார்.
* சென்னையில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்- சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தரப்பில் உத்தரவாதம்.
மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் விதிகளை மீறி 5,574 கட்டடங்கள் - ருக்மாங்கதன் என்பவர் வழக்கு.
விதிமீறிய கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது - சென்னை மாநகராட்சி.
* உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை.
எனக்கு ஜனநாயகம் பற்றி பாடம் எடுப்பவர்கள்தான் அங்கு ஆட்சியில் உள்ளனர் - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு.
*;அரசு வாகனங்களில் தேவையற்ற உதிரி பாகங்களை நீக்க அறிவுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் - உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அறிவுறுத்தல்.
* 💥இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திறந்தநிலை இணைய வழியில் கல்வி அறிமுகம்
கூடுதல் விவரங்களை swayam.gov in என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்
* நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது-ஹைதராபாத் தனியார் மருத்துவமனை தகவல்.
ரஜினியை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும்.
பரிசோதனை முடிவுகளில் அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை - மருத்துவமனை.
* தொகுதி 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளிட்டு தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
இதுவரை ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் சனவரி 31-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.
💥NDA கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகல்!
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணியில் இருந்து ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி விலகல்.
* திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா பரிசோதனை சான்று கட்டாயமில்லை.
கொரோனா பரிசோதனை சான்றை கட்டாயமாக்கியதை எதிர்த்த வழக்கு
-சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
* வேலை வாய்ப்பில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது; இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள்.
காவிரி பிரச்னையில் தமிழக அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.
புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படவில்லை - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
* இரட்டை இலை சின்னத்தை முடக்க சிலர் சதித்திட்டம் செய்து வருகிறார்கள் என அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு
* அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நடுவண் நிதித்துறை இணை அமைச்சருமான கடம்பூர் ஜனார்த்தனம் முதுமை காரணமாக காலமானார்
* UV கதிர்களால் கொரானா வெருவி 30 நொடிகளில் இறந்து விடும்.
LED குமிழிகள் இதற்கு போதுமானது என்றும் கண்டு பிடிப்பு - இசுரேல் நாட்டின் டெல்அவிவ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
* 2021-ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் தேதி டிசம்பர் 31-ம் தேதி மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் மாணவர்களுடன் உரையாடிய ரமேஷ் போக்ரியால், சிபிஎஸ்இ பள்ளிகள் பல கிராமப்புறங்களில் இருப்பதால் ஆன்லைன் தேர்வுகள் சாத்தியமில்லை” என்றார்.
எனவே 2021 சிபிஎஸ்இ போர்டு தேர்வுகள் அனைத்தும் எழுத்து வடிவத்தில்தான் இருக்குமே தவிர ஆன்லைன் தேர்வுகள் கிடையாது என்று ரமேஷ் போக்ரியால் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment